புத்தாண்டையொட்டி ரூ.587.51 கோடிக்கு மதுபானம் விற்பனை.. இதுவரை இல்லாத உச்சம்.. இதோ முழு டேட்டா
பெங்களூர்: புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி கர்நாடகாவில் மதுவிற்பனை ரூ.587.51 கோடியை தொட்டுள்ளது. டிசம்பர் 29ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரையிலான மதுபானம் விற்பனை கடந்த ஆண்டை விட ரூ.166.74 கோடி வரை அதிகரித்துள்ளது. கடந்த 2023, 2024ம் ஆண்டுகளை ஒப்பிடும்போது 2025ம் ஆண்டில் மதுவிற்பனை அதிகரித்துள்ளதாக அம்மாநில கலால்துறை அறிவித்துள்ளது.
2025ம் ஆண்டு நேற்றுடன் விடை பெற்றது. இன்று 2026ம் ஆண்டு பிறந்தது. உலகம் முழுவதும் வெவ்வேறு சமயங்களில் புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த புத்தாண்டை வழக்கம்போல் பொதுமக்கள் ஆட்டம், பாட்டம் கொண்டாடத்துடன் வரவேற்றனர்.

நம் நாட்டில் நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்தது. பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் புத்தாண்டை வரவேற்றனர். சர்ச்சுகளில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
இந்நிலையில் தான் புத்தாண்டையொட்டி அண்டை மாநிலமான கர்நாடகாவில் மதுபானம் விற்பனை தொடர்பான முக்கிய டேட்டா வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக கலால் துறை பகிர்ந்துள்ள விவரங்கள் வருமாறு: புத்தாண்டையொட்டி கர்நாடகாவில் டிசம்பர் 29 முதல் டிசம்பர் 31ம் தேதி வரை மதுபானம் விற்பனை அதிகரிக்கும்.
அதன்படி இந்த 3 நாளில் 2023ம் ஆண்டில் ரூ.490.22 கோடிக்கு மதுபானம் விற்பனையானது. அதன்பிறகு கடந்த 2024ம் ஆண்டில் இந்த 3 நாளில் மதுபானம் விற்பனை சரிந்தது. மொத்தம் ரூ.420.77 கோடிக்கு மட்டுமே மதுபானம் விற்பனையானது. ஆனால் இந்த ஆண்டு மதுபானம் விற்பனை மளமளவென அதிகரித்துள்ளது.
2025ல் டிசம்பர் 20, டிசம்பர் 30, டிசம்பர் 31 என 3 நாளில் மட்டும் மதுபானம் ரூ.587.51 கோடி வரை அதிகரித்துள்ளது. இதில் டிசம்பர் 29ம் தேதி ரூ.122.32 கோடிக்கும், டிசம்பர் 30ம் தேதி ரூ.261.09 கோடிக்கும், டிசம்பர் 31ம் தேதி ரூ.204.10 கோடிக்கும் மதுபானம் விற்பனையாகி உள்ளது. இது கடந்த 2024ம் ஆண்டை ஒப்பிடும்போது ரூ.166.74 கோடி அதிகமாகும்.
2025ல் இந்த 3 நாட்களில் ஐஎம்எல் (Indian Made Liquor)எனும் இந்திய தயாரிப்பு மதுபானங்கள் மொத்தம் 9.84 லட்சம் பாக்ஸ்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 2024ம் ஆண்டில் இந்த மதுபானம் மொத்தம் 8.25 லட்சம் பாக்ஸ்கள் மட்டுமே விற்பனையான நிலையில் 2025ம் ஆண்டில் 1.59 லட்சம் பாக்ஸ்கள் அதிகம் விற்பனையாகி உள்ளது.
அதபோல் பீர் வகையை எடுத்து கொண்டால் மாநிலம் முழுவதும் கடந்த 3 நாட்களில் மட்டும் 6.64 லட்சம் பாக்ஸ்கள் விற்பனையாகி உள்ளது. இது கடந்த 2024ம் ஆண்டை ஒப்பிடும்போது 1.61 லட்சம் பாக்ஸ்கள் அதிகமாகும். ஏனென்றால் 2024ம் ஆண்டில் டிசம்பர் 29 30, 31 ஆகிய 3 நாட்கள் 5.03 லட்சம் பீர் பாக்ஸ்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது.
மேலும் மொத்தமாக கணக்கீட்டு பார்த்தால் 2025 டிசம்பர் 1 முதல் டிசம்பர் 31ம் தேதி வரை மட்டும் மொத்தம் ரூ.3,559.08 கோடிக்கு மதுபானம் விற்பனையாகி உள்ளது. இது கடந்த 2024ம் ஆண்டில் வெறும் ரூ.3,104.50 கோடியாக மட்டுமே இருந்த நிலையில் தற்போது ரூ.454.58 கோடி வக்கு அதிகரித்துள்ளது.
கர்நாடகாவில் தற்போது மாநில அரசுக்கு கலால் வருவாய் உயர்ந்திருப்பது நல்ல விஷயமாக பார்த்தாலும் கூட மாநிலத்தில் குடிப்பழக்கம் அதிகரித்து இருப்பது கவலையளிக்கிறது என கூறியுள்ளனர் சமூக ஆர்வலர்கள்.
-
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
கொட்டும் மழைக்கு நடுவே.. பெங்களூரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்.. குவிந்த தமிழ் இளைஞர்கள்! -
பெங்களூரில் நாளை மாபெரும் போராட்டம்.. தமிழர்களை தமிழில் அழைத்த காக்ரோச் ஜனதா பார்ட்டி சௌரவ் தாஸ்! -
மேகதாதுவின் மோதலும்.. பெங்களூருவின் வலியும்.. தமிழகத்தை பாதிக்காமல் மாற்று வழி உள்ளதா? -
அமைச்சர் பதவிக்கு குட்பை? பெங்களூர் வளர்ச்சி துறையின் பல்லை பிடுங்கிய டிகே சிவக்குமார்.. கிருஷ்ணபைரே கவுடா அதிருப்தி -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications