பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஓலா, உபேர் ஆட்டோக்களுக்கு பெங்களூரில் தடை.. கர்நாடக போக்குவரத்துறை உத்தரவிட்டது ஏன்?

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் உபேர், ஓலா, ராபிடோ வாடகை ஆட்டோக்களுக்கு தடை விதித்து அம்மாநில போக்குவரத்து துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மும்பை, டெல்லி, சென்னை, பெங்களூர் உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் போக்குவரத்து நெரிசலை பற்றி சொல்லவே வேண்டாம்.

அதுவும் சொந்த வாகனங்களில் சென்றால் டூவீலரை கூட பார்க் செய்ய இடம் கிடைப்பது இல்லை. கார்களை பற்றி சொல்லவே வேண்டாம். அந்த அளவுக்கு வாகன நெரிசல் கடுமையாக இருப்பதோடு பார்க்கிங் செய்ய கூட இடம் இருக்காது.

ஓவர் கமிஷன்.. ஸ்விக்கி, சொமாட்டோ, உபேர் ஈட்ஸ் நிறுவனங்களை புறக்கணிக்கும் ஹோட்டல்கள்!ஓவர் கமிஷன்.. ஸ்விக்கி, சொமாட்டோ, உபேர் ஈட்ஸ் நிறுவனங்களை புறக்கணிக்கும் ஹோட்டல்கள்!

உபேர், ஓலா ஆட்டோக்கள்

உபேர், ஓலா ஆட்டோக்கள்

இதனால், சொந்த வாகனங்கள் வைத்திருப்பவர்கள் கூட தற்போது ஓலா, உபேர் போன்ற செயலிகளை பயன்படுத்தி ஆட்டோ, காரை புக் செய்து பயணிப்பதை காண முடிகிறது. இதனால், ஆன்லைன் மூலமாக புக் செய்து பயன்படுத்தக்கூடியவர்களின் எண்ணிக்கையும் தினமும் அதிகரித்து வருகிறது. நேரடியாக ஆட்டோ, காரை புக் செய்தால் அதிக கட்டணத்தை சிலர் கேட்பதாகவும் இதனால், ஒலா, உபேரை பயன்படுத்தி புக் செய்வது எளிதாக இருப்பதாகவும் பயணிகள் கூறி வருகின்றனர்.

கட்டணத்தை உயர்த்துவதாக

கட்டணத்தை உயர்த்துவதாக

அதே நேரத்தில், நேரத்திற்கு தகுந்தது போல கட்டணத்தை உயர்த்துவதாக ஒலா, உபேர் நிறுவனங்கள் மீதும் புகார்கள் இல்லாமல் இல்லை. இந்த நிலையில், ஓலா, உபேர், ராபிடோ போன்ற நிறுவனங்கள் ஆட்டோக்களை இணைத்து சேவை வழங்க கர்நாடக அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூருவை பொருத்தவரை தற்போது குறைந்தபட்சமாக 2 கி.மீட்டர் பயணிக்க ரூ. 30 வாடகையாக வசூல் செய்யப்படுகிறது.

 இணைத்து வாடகைக்கு ஓட்ட தடை

இணைத்து வாடகைக்கு ஓட்ட தடை

கூடுதலாக செல்லும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு ரூ 15 வசூலிக்கப்படுகிறது. இந்த உபேர், ஒலா போன்ற செயலிகள் குறைந்தபட்சம் 100 வசூல் செய்வதாக புகார்கள் எழுந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, கர்நாடக போக்குவரத்து துறை உபேர், ஓலா, ராபிடோ போன்ற நிறுவனங்கள் ஆட்டோக்கள் இணைத்து வாடகைக்கு ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கர்நாடக போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்து இருப்பதகவும் கூறப்படுகிறது.

 கார்களை மட்டுமே இயக்க அனுமதி

கார்களை மட்டுமே இயக்க அனுமதி

அதில், ஓலா, உபேர், ராபிடோ போன்ற நிறுவனங்கள் வாடகைக்கு ஆட்டோக்களை இயக்க அனுமதி இல்லை. கார்களை மட்டுமே இயக்க அனுமதி இருக்கிறது. ஆனால், அனுமதியின்றி ஆட்டோக்களை இயக்குவது சட்டத்திற்கு எதிரானது. எனவே அடுத்த 3 தினங்களுக்குள் ஆட்டோக்களை வாடகை செயலில் இயக்குவதை நிறுத்த வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உபேர், ஓலா, ராபிடோ ஆகிய நிறுவனங்கள் வாடகைக்கு ஆட்டோக்களை இயக்கியது பற்றி விளக்கம் அளிக்கவும் போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

 உரிய பதிலளிப்போம்

உரிய பதிலளிப்போம்

இது தொடர்பாக கருத்து தெரிவிக்க ஓலா மற்றும் உபேர் நிறுவனங்கள் மறுத்துவிட்டன. உபேர் நிறுவனங்கள் கடந்த சில வாரங்களாக ஆட்டோக்களும் தங்கள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாக தொலைக்காட்சி விளம்பரங்களை வெளியிட்டு வந்த நிலையில் கர்நாடக அரசின் போக்குவரத்து துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில், ராபிடோ நிறுவனம் இது குறித்து கூறுகையில், 'பெங்களூருவில் நாங்கள் சட்ட விரோதமாக சேவையில் ஈடுபடவில்லை. அரசின் நோட்டீசுக்கு உரிய பதிலளிப்போம்' என்று தெரிவித்துள்ளது.

English summary
The state transport department has issued an action order banning Uber, Ola and Rapido rental cars in the state of Karnataka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X