பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தூக்கி ஆம்புலன்ஸ்ல ஏத்துங்க.. பெங்களூரில் மாஸ்க் போடாமல் வெளிய போனா இதுதான் கதி.. அட கடவுளே!

Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூரில் மாஸ்க் அணியாமல் சாலையில் சுற்றும் நபர்களை மாநகராட்சியை சேர்ந்த மார்ஷல் அதிகாரிகள் அபராதம் விதித்தது போக தற்போது புதிய விதமான தண்டனையும் கொடுக்க தொடங்கி உள்ளனர்.

Recommended Video

    ஐபிஎல் 2020: ஆட்டத்தை மாற்றக்கூடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர்கள்

    கர்நாடக மாநிலம் பெங்களூரில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் கடுமையாக அமலில் உள்ளது. இதை கண்காணிப்பதற்காக மார்ஷல் அதிகாரிகளை மாநகராட்சி பணி அமர்த்தி உள்ளது.

    ராணுவ உடையை போலவே யூனிபார்ம் அணிந்து இருக்கும் இந்த அதிகாரிகள் சாலையில் மாஸ்க் அணியாமல் செல்லும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். தொடக்கத்தில் இவர்கள் மாஸ்க் அணியாமல் சென்றவர்களிடம் அபராதம் மட்டுமே விதித்தனர்.

    விடாப்பிடியாக இந்தியில் பேச்சு.. தமிழ் மருத்துவர்களை மிரட்டிய ராஜேஷ் கோட்சே.. நடந்தது என்ன?விடாப்பிடியாக இந்தியில் பேச்சு.. தமிழ் மருத்துவர்களை மிரட்டிய ராஜேஷ் கோட்சே.. நடந்தது என்ன?

    என்ன அபராதம்

    என்ன அபராதம்

    தொடக்கத்தில் மாஸ்க் அணியாமல் செல்பவர்களிடம் கூகுள் பே, பேடிஎம் மூலம் சாலையிலேயே இவர்கள் அபராதங்களை விதித்தனர். ஆனால் தற்போது பெங்களூரில் மாஸ்க் அணியாமல் சாலையில் சுற்றும் நபர்களை மாநகராட்சியை சேர்ந்த மார்ஷல் அதிகாரிகள் அபராதம் விதித்தது போக தற்போது அவர்களை கட்டாய கொரோனா சோதனைக்கும் அழைத்து செல்கிறார்கள்.

    கொரோனா டெஸ்ட்

    கொரோனா டெஸ்ட்

    சாலையில் மாஸ்க் அணியாமல் வருபவர்களை கட்டாயப்படுத்தி ஆம்புலன்சில் அழைத்து செல்கிறார்கள்.அருகே இருக்கும் அரசு கொரோனா மருத்துவமனைகளில் வைத்து கொரோனா சோதனை செய்கிறார்கள். ஆன்டிஜென் சோதனை எனப்படும் ரேபிட் சோதனைகளை செய்கிறார்கள். பெங்களூரின் முக்கிய பகுதிகள் பலவற்றில் இப்படி இளைஞர்கள் பலர் கொரோனா சோதனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

    ஆம்புலன்ஸ் சோதனை

    ஆம்புலன்ஸ் சோதனை

    ஆம்புலன்சில் வர மாட்டேன் என்று சொல்பவர்களை கூட கட்டாயப்படுத்தி இவர்கள் அழைத்து சென்று இருக்கிறார்கள். பெங்களூரில் மார்ஷல் அதிகாரிகள் இப்படி வரம்பு மீறி செயல்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பெங்களூர் மாநகராட்சி சிறப்பு கமிஷ்னர் ரன்தீப் பதில் அளித்துள்ளார். அதில், மார்ஷல் அதிகாரிகளுக்கு கொரோனா சோதனை செய்யும் அதிகாரத்தை நாங்கள் கொடுக்கவில்லை. வாய்மொழியாகவோ, எழுத்து பூர்வமாகவோ எந்த உத்தரவும் செல்லவில்லை.

    அதிகாரம் இல்லை

    அதிகாரம் இல்லை

    அவர்களுக்கு அபராதம் விதிக்க மட்டுமே அனுமதி அளித்து இருக்கிறோம். மார்ஷல் வீரர்கள் மக்களை கொரோனா சோதனைக்கு அழைத்து செல்வதாக வரும் செய்திகளை ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் அப்படி எந்த ஆர்டரும் போடவில்லை. இருப்பினும் மக்கள் வெளியே செல்லும் போது கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும், என்று ரன்தீப் கூறியுள்ளார்.

    English summary
    People getting antigen test for not wearing a mask at public places in Bangalore.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X