ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு: பாஜக பிரமுகருக்கு தொடர்பு? முக்கிய எச்சரிக்கை விடுத்த என்ஐஏ!
பெங்களூர்: ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக பாஜக நிர்வாகி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டது பற்றிய தகவல்கள் வெளியானதை அடுத்து என்.ஐ.ஏ முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
கடந்த மார்ச் 1ஆம் தேதியன்று, கர்நாடக மாநிலம் பெங்களூர் வைட் ஃபீல்டு பகுதியில் அமைந்துள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபேயில் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில், அந்த உணவகத்தில் இருந்த 9 பேர் படுகாயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: தொடர்ந்து, கர்நாடகா, தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முசாவீர் ஷபீர் உசேனை என்.ஐ.ஏ அதிகாரிகள், அவரை டெல்லியில் கடந்த மார்ச் 26ஆம் தேதி கைது செய்தனர். மேலும் கைதான முசாவீர் ஷபீர் உசேன் வீட்டில் சோதனை நடத்திய என்.ஐ.ஏ அதிகாரிகள், முக்கிய ஆவணங்கள், பல்வேறு டிஜிட்டல் சாதனங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளான அப்துல் மதீன் அகமது தஹா, முஸ்ஸவ்வீர் ஹுசைன் ஷாசிப் ஆகியோரை என்.ஐ.ஏ அதிகாரிகள் தேடி வருகின்றனர். ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்துடன், அப்துல் மதின் அகமது தாஹா மற்றும் முஸ்ஸவ்வீர் ஹுசைன் ஷாசிப் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ சந்தேகிக்கிறது. எனவே அவர்கள் இருவர் பற்றிய தகவல்களை தருபவர்களுக்கு 10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது என்.ஐ.ஏ.

என்.ஐ.ஏ தீவிரம்: இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆகியும் முக்கிய குற்றவாளி கைது செய்யப்படவில்லை. ஹோட்டல் மற்றும் அரசு பஸ்களில் மர்ம நபர் பயணம் செய்த போது கண்காணிப்பு கேமராக்களில் சிக்கிய காட்சிகள் மூலமாக, அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பாஜக நிர்வாகிக்கு தொடர்பு: இந்த வழக்கில் கைதாகி உள்ள ஷபீரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சாய் பிரசாத் என்பவருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இன்று தீர்த்தஹள்ளி பகுதியைச் சேர்ந்த சாய் பிரசாத்திடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும், அவர் பாஜக நிர்வாகி என்றும் தகவல்கள் வெளியாகின.
என்.ஐ.ஏ எச்சரிக்கை: ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக பாஜக நிர்வாகி ஒருவரை என்ஐஏ விசாரணை நடத்தி கைது செய்ததாக செய்திகள் வெளியான நிலையில், "சரிபார்க்கப்படாத செய்திகள், இந்த வழக்கு விசாரணைக்கு இடையூறாக உள்ளன" என்று என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது என்.ஐ.ஏ. அதில் , "இந்த வழக்கில் ஆதாரங்கள் மற்றும் தகவல்களை சேகரிக்க என்ஐஏ தலைமறைவான மற்றும் கைது செய்யப்பட்ட, குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் கல்லூரி மற்றும் பள்ளி கால நண்பர்கள் உட்பட அனைத்து அறிமுகமானவர்களை வரவழைத்து விசாரித்து வருகிறது.
அடையாளத்தை வெளியிடக்கூடாது: இந்த வழக்கு ஒரு பயங்கரவாத சம்பவம் தொடர்புடையது என்பதால், சாட்சிகளின் அடையாளம் குறித்த எந்த தகவல் வெளியாவதும் விசாரணைக்கு இடையூறு விளைவிக்கும், தனிநபர்கள் விசாரணைக்கு வரவழைக்கப்படும் அபாயத்தையும் ஏற்படுத்தலாம். மேலும், சரிபார்க்கப்படாத செய்திகள் வழக்கு விசாரணைகளைத் தடுக்கின்றன. தலைமறைவான குற்றவாளிகளை கைது செய்ய அனைவரின் ஒத்துழைப்பையும் என்ஐஏ கேட்டுக்கொள்கிறது" என என்.ஐ.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications