சிறையில் உள்ள சசிகலா இந்த மாதத்தில் விடுதலை ஆவாரா உண்மை என்ன?
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா இந்த மாதத்தில் விடுதலை ஆவார் என்று பரவிய செய்திகளில் உண்மை இல்லை என்பது தெரியவந்துள்ளது.
சிறை விடுப்பை பரோலாக பயன்படுத்தாததால் அந்த நாட்களை தண்டனையில் கழித்து இம்மாத இறுதிக்குள் சசிகலா சிறையில் இருந்து விடுதலையாக உள்ளதாக தகவல்கள் பரவியது.

இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வழக்கறிஞர் நரசிம்ம மூர்த்தி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த சிறை அதிகாரிகள் சசிகலா அடுத்த ஆண்டு ஜனவரி 27ம் தேதிக்கு முன்னர் விடுதலை ஆக வாய்ப்பில்லை என்று கூறியுள்ளது. இதன் மூலம் சசிகலா ஜனவரி 27ம் தேதிதான் விடுதலையாவார் என்பது உறுதியாகி உள்ளது.
அதிமுகவை மீண்டும் சசிகலா தன் வசம் கொண்டுவருவார் அவரது ஆதரவாளர்கள் திடமாக நம்புகின்றனர். சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடைபெற உள்ள நிலையில் அதிமுகவில் சசிகலா மீண்டும் இணைந்தால் அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
ஏனெனில் தற்போதைய நிலையில் ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் மட்டுமே அதிமுகவை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து வழி நடத்தி வருகிறார்கள். இப்போது யார் முதல்வர் வேட்பாளர் என்பதில் தான் போட்டியிருப்பதாக தெரிகிறது. எனவே ஜனவரி 27ம் தேதிக்கு பின்னர் தமிழக அரசியலில் பெரும் மாற்றம் வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
-
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
“எந்த ரீல்ஸ் மூலம் தவெக வென்றதோ அதன் மூலமே நாமும் வெற்றி பெறுவோம்”.. அதிமுகவினருக்கு எடப்பாடி ஆர்டர் -
அவர் வரலாறு தெரியுமா.. சந்தர்ப்பவாத அரசியல்வாதி.. ஆதவ் அர்ஜுனாவை வெளுத்த கேபி முனுசாமி -
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
சனிக்கிழமை தோறும் ஆள்பிடிக்கும் விஜய்.. அதிமுக மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடும் டென்ஷன் -
ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சிக்கல்.. நோட்டீஸ் அனுப்பியது ஏன்? சபாநாயகர் விளக்கம் -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications