சிறுமி மித்ராவிற்கு இன்று செலுத்தப்பட்டது ரூ.16 கோடி மதிப்புள்ள ஊசி.. சிறகை விரித்து வா செல்லமே!
பெங்களூர்: சிறகை விரித்து எழுந்து வா மித்ரா என ஒட்டுமொத்த நாடும் வேண்டிக் கொண்டிருக்கிறது. ஆம்.. 16 கோடி ரூபாய் மதிப்புள்ள ஊசியை மரபணு நோயால் பாதிக்கப்பட்ட நாமக்கல் மாவட்ட சிறுமிக்கு பெங்களூர் மருத்துவமனையில் இன்று செலுத்தியுள்ளார்கள். இந்த மருந்து வேலை செய்து, அந்த சிறுமி, சிரித்து விளையாட வேண்டும் என்று ஒட்டுமொத்த நாடும் வேண்டிக் கொண்டு இருக்கிறது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் - பிரியதர்ஷினி தம்பதி. இவர்களின் 2 வயது மகள் மித்ரா.
மரபணு கோளாறான முதுகு தண்டுவட தசைநாா் சிதைவால் பாதிக்கப்பட்டுள்ளாா். நல்ல உடல்நிலையில் இருந்தவர் திடீரென நடக்க முடியாமல், சரியாக பேச, சுவாசிக்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார்.

மரபணு முதுகு தண்டுவட தசைநார் சிதைவு பிரச்சினை
நன்கு சிரித்து விளையாடிய குழந்தைக்கு இந்த மாதிரியானதால் ஒட்டுமொத்த குடும்பமும், நிலை குலைந்து போயிருந்தது.
பல மருத்துவமனைகளில் பரிசோதனை செய்தும், அந்த குழந்தைக்கு என்ன பிரச்சினை என்பது தெரியவில்லை. ஒரு வழியாக, கோவையிலுள்ள ஒரு மருத்துவமனை, ஜெர்மனி நாட்டிற்கு குழந்தையின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட சில மாதிரிகளை அனுப்பி பரிசோதனை செய்து பார்த்ததில், அந்த சிறுமி அரிய மரபணு கோளாறான முதுகு தண்டுவட தசைநாா் சிதைவால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

22 கோடி மதிப்புள்ள ஊசி
இதற்கு உடனே ஸோல்கென்ஸ்மா ஜீன் தெரபி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இந்த சிகிச்சைக்கு வெளிநாட்டில் இருந்து 16 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்தை வாங்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். அந்த மருந்து செலுத்த வேண்டுமானால் இந்திய மதிப்பில் வரிகள் உட்பட 22 கோடி வரை செலவாகும் என்று கூறப்பட்டது.

மித்ராவுக்கு நன்கொடை
இதனால் நிலைகுலைந்து போனது அந்த குடும்பம். ஆனாலும் மனம் தளரவில்லை. நமது மக்களின் நல்ல மனது மீது அவர்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. எனவே, மித்ராவிற்கு உதவுங்கள் என்று இணையத்தில் மிகப்பெரிய பிரச்சாரத்தை முன்னெடுத்து கிரவுட் ஃபண்டிங் செய்ய சதீஷ் குமார் முயற்சி எடுத்தார். குறைந்தது 10 ரூபாயாவது இந்த கணக்கிற்கு அனுப்புங்கள் என்று இணையம் முழுக்க பல நடிகர்கள், நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள் கோரிக்கைகளை வைத்தனர்.

அள்ளிக் கொடுத்த மக்கள்
நம்பியவர்கள் கைவிடவில்லை. மூன்று லட்சத்திற்கும் மேலானவர்கள் மித்ராவின் மருத்துவ செலவிற்காக நிதியுதவி செய்தனர். அதேநேரம், வரி விதிப்பு பெரிய சுமை என்பதை உணர்ந்து, மத்திய அரசுக்கு, தமிழக அரசியல் தலைவர்கள் மூலம், மித்ரா குடும்பம் இந்த விஷயத்தை கொண்டு சென்றது. ZOLGENSMA என்ற அந்த குறிப்பிட்ட மருந்துக்கு இறக்குமதி வரியான ரூ.6 கோடி வரை தள்ளுபடி செய்ய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சம்மதித்தார்.

வரியை தள்ளுபடி செய்த மத்திய அரசு
முன்னதாக, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதி, மருந்து மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய கோரிக்கை விடுத்தார். மதிமுக பொதுச் செயலாளர் எம்.பி. வைகோவும், மத்திய அரசுக்கு இதே கோரிக்கையை முன் வைத்தார். கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனும் தனது தரப்பிலிருந்து மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இந்த விஷயத்தின் முக்கியத்துவத்தை விளக்கிச் சொன்னார்.

பெங்களூர் மருத்துவமனை
அனைத்து தரப்பு ஆதரவாலும், ஒத்துழைப்பாலும், 6 கோடி இறக்குமதி ஜிஎஸ்டி வரி நீக்கப்பட்டது. அதன்பின்னர் இந்த மருந்து வாங்க பணம் பெங்களூரிலுள்ள தனியார் மருத்துவமனை வாயிலாக அனுப்பப்பட்டது. இதையடுத்து, மருந்து இறக்குமதி செய்யப்பட்டு, இன்று, பெங்களூரிலுள்ள அந்த தனியார் மருத்துவமனையில், சிறுமி மித்ராவிற்கு ZOLGENSMA மருந்தை மருத்துவர்கள் செலுத்தினர். அந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. சிறுமியின் உயிரை காக்க உதவிய ஒவ்வொருவருக்கும், மித்ராவின் பெற்றோர், நன்றி தெரிவித்துள்ளனற்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications