ஹெடெக் மாடல் ‘சப்ளை’.. சொகுசு பங்களா..தலைமறைவு! பாஜக அமைச்சர்களுடன் தொடர்பு? யார் இந்த சான்ட்ரோ ரவி?
பெங்களூர் : கர்நாடக மாநிலத்தில் பாஜக அமைச்சர்களுடனும் கட்டுக்கட்டாக பணத்துடன் சான்ட்ரோ ரவி என்ற நபர் இருக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் பாலியல் தொழில் செய்து வந்ததாக புகார் எழுந்த நிலையில் 11 நாட்கள் தலைமறைவுக்குப் பிறகு தற்போது குஜராத்தில் வைத்து கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்த மஞ்சுநாத் என்ற சான்ட்ரோ ரவி தன்னை தொழிலதிபர் எனக் கூறி வலம் வந்திருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது இரண்டாவது மனைவி தன்னை கணவர் சான்ட்ரோ ரவி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல் கர்நாடகாவில் உள்ள பல்வேறு கட்சிகளின் அரசியல் தலைவர்கள் உயர் அதிகாரிகளுக்கு இளம் பெண்களை அவர் பாலியல் தொழிலுக்காக அனுப்பி வைத்ததாகவும் கூறி பரப்பரப்பை பற்ற வைத்தார்.

சாண்ட்ரோ ரவி
இதை அடுத்து கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பு எழுந்த நிலையில் கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக அமைச்சர்களுடனும் கட்டு கட்டான பணத்துடனும் சான்ட்ரோ ரவி இருக்கும் புகைப்படங்கள் வெளியானது. இதனால் பல்வேறு அரசியல் தலைவர்களும் நெருக்கடிக்கு உள்ளானார். இந்த நிலையில் ஆளும் கட்சிக்கும் நெருக்கடி பெரிய அளவில் அதிகரித்தது. இது குறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டதோடு ஆறு தனிப்படைகளும் அமைக்கப்பட்டது.

பாலியல் தொழில்
அதுமட்டுமல்லாமல் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் - அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே சான்ட்ரோ ரவி குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல மலைக்க வைக்கும் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகின. பல இளம் பெண்களுடன் பழகி அவர்களை திருமணம் செய்யும் அவர் அவர்களை அடுத்ததாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதித்து வந்தது தெரிய வந்தது. இதே போல பல பெண்களை அவர் இவ்வாறு கொடூர படுகுழியில் தள்ளியுள்ளதும் இதுவரை நான்கு பெண்களை திருமணம் செய்ததும் தெரியவந்தது.

அமைச்சர்களுடன் தொடர்பு?
அவரது மூன்று மனைவிகள் அவரை விட்டு பிரிந்த நிலையில் மூன்றாவது மனைவி அவருடன் வசித்து வருகிறார். மேலும் சான்ட்ரோ ரவியின் பாலியல் தொழிலையும் அவர்தான் கவனித்து வந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து ஏற்கனவே பல பெண்கள் புகார் அளித்த போதும் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி சான்ட்ரோ ரவி தப்பித்து வந்ததோடு பல அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இளம் பெண்களை பாலியல் தொழிலுக்காக அனுப்பி வைத்துள்ளார்.

தலைமறைவு
இதற்காகவே இவர் பெரிய அளவில் பங்களாக்களை வாங்கி வைத்திருந்ததும் கர்ப்பமான பெண்களுக்கு கருக்கலைப்பு செய்ததும் தெரியவந்தது. தனது அரசியல் பழக்கங்களை வைத்து அதிகாரிகளுக்கு இடமாற்றம் உள்ளிட்டவற்றை வாங்கிக் கொடுத்தும் லட்சக்கணக்கில் வருமானம் பெற்றுள்ளார். இந்த நிலையில் தான் அவரது இரண்டாவது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதை அடுத்து அவரை தேடும் பணி தீவிர படுத்தப்பட்ட நிலையில் 11 நாட்களாக சான்றோர் ரவி தலைமறைவாக இருந்தார்.

குஜராத்தில் கைது
அவரது சொந்த செல்போனை பயன்படுத்தாததால் அவரை கைது செய்வதில் சிக்கல் நீடித்தது. இருந்தும் அவரது ஓட்டுநரை முதலில் கைது செய்த போலீசார் அவர் தொடர்பு கொண்ட எண்களை வைத்து சான்ட்ரோ ரவி குஜராத்தில் இருப்பதை கண்டுபிடித்தனர். இதை அடுத்து கர்நாடகாவில் இருந்து மைசூரு ராம் நகர் பெங்களூர் உடுப்பி வழியாக குஜராத்துக்கு தப்பி சென்றது தெரிய வந்தது. இதை அடுத்து போலீசார் சான்றோ ரவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் விசாரணை நடத்தினால் மேலும் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
-
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்.. கேரளாவில் கிறிஸ்துமஸ் - ஓணத்தை கையிலெடுத்த பாஜக.. தேர்தல் வாக்குறுதி -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு செட் ஆகாது.. கோவையில் 1 தொகுதியை ஒதுக்குங்க.. அண்ணாமலை பிடிவாதம்! -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு -
பாஜகவில் இணைந்தார் முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் போட்டியிட வாய்ப்பு -
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்!












Click it and Unblock the Notifications