பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு
பெங்களூர்: ஆசிரியர் மற்றும் மாணவர் இடையிலான உறவு என்பது வெறும் கல்வி கற்பித்தலோடு முடிந்துவிடாமல், ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கான புனிதமான அடித்தளமாக விளங்குகிறது.. அறிவையும் ஒழுக்கத்தையும் போதிக்கும் ஆசிரியர்கள், மாணவர்களின் எதிர்கால பாதையை செதுக்கும் சிற்பிகளாகத் திகழ வேண்டும்.. பரஸ்பர மரியாதை, நம்பிக்கை மற்றும் கண்ணியம் ஆகிய பண்புகளின் அடிப்படையில் அமையும் இந்த உன்னதமான உறவே, ஒரு மாணவனைத் தனித்திறன் மிக்க மற்றும் பொறுப்புள்ள மனிதனாக மாற்றும் சக்தியைக் கொண்டுள்ளது.. ஆனால், இந்த பெங்களூர் சம்பவத்தை பாருங்கள்.
பெங்களூரு நெலமங்கலா பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றியவர் முகமது (50 வயது).. இவர் கடந்த மார்ச் 23ம் தேதி வகுப்பறைக்கு வந்து பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென ஒரு பெட்டி நிறைய சாக்லேட்டுகளைக் கொண்டு வந்து, ஒரு மாணவியின் பெயரைச் சொல்லி அந்த மாணவி தனக்குக் காதல் கடிதம் கொடுத்ததாகவும், அதனால் குஷி ஏற்பட்டுவிட்டதாகவும், அதற்காகவே இந்த சாக்லேட் என்று சொல்லி, அந்த சாக்லேட்டுகளை அனைத்து மாணவர்களுக்கு தந்தார்..
பெங்களூர் மருத்துவ கல்லூரி ஆசிரியர்
கிளாஸ் ரூமில் அந்த மாணவியை பார்த்த பேராசிரியர் முகமது, "நீதான் எனக்கு காதல் கடிதம் கொடுத்தாய்.. நானும் உன்னைக் காதலிக்கிறேன்.. இதோ சாக்லேட், நீயும் சாப்பிடு.." என்று சொல்லி உள்ளார்..
இதைக் கேட்டுத் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, "நான் எப்போது உங்களுக்கு கடிதம் கொடுத்தேன்? எப்போது ஐ லவ் யூ சொன்னேன்? எதற்காக இப்படிப் பொய் சொல்கிறீர்கள்?" என்று ஆவேசமாக சத்தம் போட்டார்..
அதற்கு அந்தப் பேராசிரியர் விடாமல், "நீ என்னிடம் உன் காதலை சொன்னாயே? அதற்கான சிசிடிவி வீடியோ என்னிடம் ஆதாரமாக உள்ளது.. நீதான் சொன்னாய்" என்று மீண்டும் மீண்டும் அதையே சொன்னார்..
செருப்பை கழட்டி அடித்த மாணவி
இதனால் பொறுமை இழந்த அந்த மாணவி, "ஆதாரம் இருந்தால் அதை இப்போதே எல்லாரிடமும் காட்டுங்கள்.. இல்லாவிட்டால் இங்கிருந்து வெளியே போங்கள்.. இந்த விஷயத்தை இப்போதே கல்லூரி முதல்வர் முன்பு சொல்லுங்கள்" என்று கண்ணீருடன் கத்தியுள்ளார்.. ஆனால் பேராசிரியர் அப்போதுகூட சொன்னதையே திரும்ப சொல்லி கொண்டிருந்தார்.. நான் நாளை உன்னிடம் பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.
ஆதாரத்தை காட்டாமல் வெறுமனே பொய்யான தகவலையே பேராசிரியர் சொல்லவும், ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற அந்த மாணவி, திடீரென தன்னுடைய செருப்பை கழற்றி, பேராசிரியரை சரமாரியாக அடிக்க தொடங்கினார்.. சக மாணவர்களும் பேராசிரியரை சூழ்ந்துகொண்டு கண்டித்தனர்..
சுற்றி வளைத்த மாணவர்கள்
இதனால் அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறார் பேராசிரியர்.. அப்போதும் விடாத சில மாணவர்கள், பேராசிரியரை விரட்டி விரட்டி அடித்தார்கள்.. இதனால் கல்லூரி வளாகம் முழுவதும் பேராசிரியர் வலி பொறுக்க முடியாமல் ஓடினார்.. கடைசியில் தன்னுடைய காரில் ஏறி தப்பி சென்றுவிட்டார்.
பேராசிரியரை சம்பந்தப்பட்ட மாணவி செருப்பால் அடித்ததும், மற்ற மாணவர்கள் அவரை கடுமையாக தாக்கியதும் வீடியோவாகவும் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை தந்து வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த நெலமங்கலா ஊரகப் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.. கல்லூரி முதல்வர் அளித்த புகாரின் பேரில், பேராசிரியர் முகமது மீது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் 448 (அத்துமீறி நுழைதல்), 354ஏ (பாலியல் துன்புறுத்தல்), 504 மற்றும் 506 (மிரட்டல் விடுத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது..
ஹைலைட்டே இதுதான்
இந்தச் சம்பவத்தில் மிகவும் முக்கியமான ஹைலைட் என்னவென்றால், சம்பந்தப்பட்ட மாணவியின் தந்தையின் வயதுதான் பேராசிரியர் முகமது-க்கு ஆகிறது.. இவர் மீது ஏற்கனவே 5-க்கும் மேற்பட்ட மாணவிகள் பாலியல் புகார்களை அளித்திருந்தனர்.. மாணவிகளிடம் தொடர்ந்து அநாகரிகமாக நடந்துகொண்டதால், கல்லூரி நிர்வாகம் இவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருந்தது..
அத்துடன் கல்லூரி வளாகத்திற்குள் நுழையவும் தடை விதித்திருந்தது.. அந்த தடையையும் மீறி, முகமது அத்துமீறி உள்ளே நுழைந்து 4ம் ஆண்டு படிக்கும் அந்த மாணவியிடம் வம்புக்கு சென்றிருக்கிறார்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications