சவுக்கு சங்கருக்கு நடந்த அதே சம்பவம்.. பிரஜ்வல் ரேவண்ணா கைதின்போது எஸ்ஐடி தந்த முக்கிய ‛மெசேஜ்’..

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெண்களுடன் பழகி கட்டாயப்படுத்தி ஆசைக்கு இணங்க வைத்தது, ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் ஹாசன் எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவை நேற்று நள்ளிரவில் எஸ்ஐடி போலீசார் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கையின்போது சவுக்கு சங்கரை தமிழக போலீஸ் ‛டீல்' செய்த அதே பாணியை கர்நாடகா எஸ்ஐடி போலீசார் பின்பற்றியது தற்போது கவனிக்க வைத்துள்ளது.

நடந்த முடிந்த லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் பாஜகவும், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜேடிஎஸ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் ஹாசன் தொகுதியில் மீண்டும் ஜேடிஎஸ் எம்பியான தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

prajwal revanna lok sabha election 2024 karnataka bangalore bengaluru 2024

கடந்த ஏப்ரல் 26-ந் தேதி ஹாசன் தொகுதிக்கு ஓட்டுப்பதிவு நடந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோக்கள், போட்டோக்கள் வெளியாகின. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரஜ்வல் ரேவண்ணா தனது அதிகாரத்தை பயன்படுத்தி சுமார் 300 பெண்களை கட்டாயப்படுத்தி வீடியோ காலில் ஆபாசமாக பேசியதோடு, சிலரை பலாத்காரம் செய்து அதனை வீடியோவாக வைத்திருந்ததாகவும் கூறப்பட்டது. இதையடுத்து தேர்தல் முடிந்த மறுநாளே பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனி தப்பி சென்றார்.
இதுதொடர்பாக கர்நாடகா அரசு எஸ்ஐடி எனும் சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது. இந்த குழுவினர் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் விசாரணைக்கு வரவில்லை.

இந்நிலையில் தான் ஜெர்மனியில் இருந்து நேற்று நள்ளிரவு பிரஜ்வல் ரேவண்ணா விமானத்தில் பெங்களூர் வந்திறங்கினார். இதையடுத்து அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்நிலையில் தான் பிரஜ்வல் ரேவண்ணா கைது நடவடிக்கையின்போது எஸ்ஐடி போலீசார் பின்பற்றிய நடவடிக்கை தான் தற்போது பேசும் பொருளாகி உள்ளது. அதாவது பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய எஸ்ஐடி போலீசார் பெண் போலீசாரையே பயன்படுத்தி உள்ளனர்.

ஏர்போர்ட்டில் வந்திறங்கிய பிரஜ்வல் ரேவண்ணாவிடம் கைது வாரண்ட் உள்ளிட்டவற்றை காண்பித்து கைது செய்யும் பணியை சுமன் டீ பென்னிகார் மற்றும் சீமா லத்கார் என்ற 2 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையிலான பெண் போலீசார் மேற்கொண்டுள்ளனர். பிரஜ்வல் ரேவண்ணா பெண்களிடம் தவறான கண்ணோட்டத்தில் பேசி ஆசைக்கு இணங்க வைத்து வீடியோ எடுத்து மிரட்டிய நிலையில் அவருக்கு பாடமெடுக்கும் வகையில் பெண் அதிகாரிகள், பெண் போலீசார் மூலம் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுபற்றி எஸ்ஐடி தரப்பில் கேட்டபோது, ‛‛பிரஜ்வல்லை கைது செய்ய அனைத்து பெண் அதிகாரிகளையும் அனுப்ப வேண்டும் என்று முடிவு செய்தோம். அவர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பெண்களை தவறாக பயன்படுத்தி உள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளதால் பெண் அதிகாரிகள் மூலம் கைது செய்யும் மெசேஜை அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்பினோம்'' என தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக தமிழ்நாட்டில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் குறித்து அவதூறான கருத்துகளை பதிவிட்டார். அவரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு அவர் மீது திருச்சி, சேலம், சென்னை உள்பட பல இடங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. திருச்சியில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கோவையில் இருந்து சவுக்கு சங்கரை திருச்சி அழைத்து வரப்பட்டார். அப்போது அவரை அழைத்து வரும் பணியில் பெண் காவல் அதிகாரிகள், பெண் காவலர்கள் மட்டுமே ஈடுபட்டு இருந்தனர். அந்த ஸ்டைலை தான் பிரஜ்வல் ரேவண்ணா கைதின்போது பெங்களூர் எஸ்ஐடி போலீசார் பின்பற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+