உச்சத்தில் ரீல்ஸ் மோகம்.. மருத்துவமனையில் மாணவ மாணவிகள் செஞ்ச காரியத்தை பாருங்க.. பாய்ந்தது ஆக்சன்
பெங்களூர்: நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சிலரே மருத்துவமனை வளாகத்தில் ரீல்ஸ் மோகத்தால் மோசமான செயலை செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ டிரெண்டாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்போது எங்குப் பார்த்தாலும் இந்த ரீல்ஸ் மோகம் தான் இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் லைக்ஸ்களை அள்ள வேண்டும் என்பதற்காக இவர்கள் பொது இடங்களில் ஏதேதோ செய்கிறார்கள். பலரும் தங்கள் திறமைகளைக் காட்டி மக்களைக் கவர்கிறார்கள், ஆனால், சிலர் அத்துமீறவும் செய்கிறார்கள்.

சமீபத்தில் கூட சென்னையில் கோயில் ஒன்றில் சினிமா பாடல் ஒன்றுக்கு நடனமாடி அதைப் பதிவிட்டிருந்தனர். அதற்கு பெரும் கண்டங்கள் வந்த நிலையில், வீடியோவை நீக்கி மன்னிப்பும் கேட்டனர்.
கர்நாடகா: அப்படிதான் அண்டை மாநிலமான கர்நாடகாவில் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆபரேஷன் தியேட்டருக்குள் மருத்துவர் ஒருவர் ப்ரி வேட்டிங் போட்டோ ஷூட் நடத்தியிருந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்ட் ஆன நிலையில், ஆபரேஷன் தியேட்டருக்குள் இப்படிச் செய்யலாமா எனப் பலரும் அவரை மிகக் கடுமையாகச் சாடினர். இதையடுத்து அந்த மருத்துவரை டிஸ்மிஸ் செய்து கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் உத்தரவிட்டார்.
இதற்கிடையே இந்தச் சம்பவம் நடந்த மறுநாளே மற்றொரு ஷாக் வீடியோ இணையத்தில் நடந்துள்ளது. அங்கு அரசு மருத்துவமனை ஒன்றில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் குத்தாட்டம் போட்டுள்ளனர். இந்த ரீல்ஸும் இணையத்தில் சர்ச்சையானது. இதையடுத்து அந்த 38 மாணவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்களின் housemanship ட்ரெயினிங் காலத்தை 10 நாட்கள் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
#Karnataka 38 medical students from #GIMS in #Gadag were suspended by the authorities after their reels shot inside the hospital goes viral, reports @raghukoppar @NewIndianXpress @XpressBengaluru @KannadaPrabha @gadag_online @IMAIndiaOrg @dineshgrao pic.twitter.com/8SyBsv1yw3
— Amit Upadhye (@AmitSUpadhye) February 10, 2024
ரொம்ப மோசம்: இந்த மாணவ- மாணவியர் பிரபலமான இந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு பாடல்களுக்கு டான்ஸ் ஆடி அதை வீடியோவாகவும் எடுத்திருந்தனர். அவை சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது. பொதுமக்கள் வந்து செல்லும் மருத்துவமனை வளாகம், லேப், ஆபரேஷன் தியேட்டர் போன்ற இடங்களில் இப்படி குத்தாட்டம் போட்டு அனைவரையும் சொந்தரவு செய்வதை ஏற்கவே முடியாது என்று நெட்டிசன்கள் பாய்ந்தனர்.
அதைத் தொடர்ந்து அவர்கள் மீது இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த மாணவ- மாணவியர் மருத்துவமனை வளாகத்தில் மாலை மற்றும் இரவு நேரங்களில் வீடியோக்களை எடுத்துள்ளனர். அப்போது மூத்த மருத்துவர்கள் யாரும் இல்லாத நிலையில், அவர்கள் தப்பிவிட்டனர். இருப்பினும், வீடியோ டிரெண்டாகி அது காட்டிக்கொடுத்துவிட்டது.
நடவடிக்கை: இது தொடர்பாக மருத்துவமனை இயக்குநர் பசவராஜா பொம்மனஹள்ளி கூறுகையில், "இந்த ரீல்கள் குறித்து நேற்று தான் எனக்குத் தெரிய வந்தது. உடனடியாக அனைத்து மாணவர்களையும் நேரில் அழைத்து இது குறித்துக் கேட்டேன். மருத்துவமனை வளாகத்தைப் படப்பிடிப்பு ரீல்ஸ்களுக்கு பயன்படுத்தியது பெரிய குற்றம்.. அவர்கள் தங்களின் சொந்த இடங்களில் ரீல்ஸ் எடுத்திருக்க வேண்டும்.
அவர்கள் நோயாளிகளுக்குச் சிரமத்தை ஏற்படுத்தக்கூடாது. 38 பேரையும் இது தொடர்பாக அழைத்துக் கேட்டேன். அவர்கள் பட்டமளிப்பு விழா விரைவில் நடக்கும் நிலையில், அதற்காக இப்படி வீடியோ எடுத்தாக கூறினர். இதுபோன்ற எந்த செயலுக்கும் நாங்கள் அனுமதி வழங்கவில்லை. அவர்கள் அத்துமீறி இதுபோன்ற செயல்களைச் செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்துள்ளோம். இனிமேல் இதுபோன்ற மருத்துவமனை வளாகத்தில் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
-
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications