அப்பாடா.. ரோட்டு பக்கம் வண்டியை நிறுத்திட்டு போனா போலீஸ் தூக்க மாட்டாங்க! நிம்மதியில் பெங்களூர்
பெங்களூர்: பெங்களூர் நகரத்தின் நோ பார்க்கிங்கில் இருந்து வாகனங்களை எடுத்துச் செல்வது (Towing) தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக கர்நாடக மாநில அரசு தெரிவித்துள்ளது.
நோ பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்தியிருப்பீர்கள். பக்கத்தில்தானே போய் விட்டு வந்துவிடலாம் எனப் போவீர்கள். ஆனால் திரும்பி வந்து பார்த்தால் உங்கள் வண்டியே இருக்காது.
யாராவது திருடன் தூக்கிட்டு போய்விட்டானா என்று நினைத்து பதறிப்போயிருப்பீர்கள். அப்புறம்தான் பக்கத்து கடைக்காரர் அதை தூக்கிட்டு போனது டிராபிக் போலீஸ் என்று உங்களுக்கு சொல்லியிருப்பார். இதுபோன்ற அனுபவத்தை வாழ்நாளில் சந்திக்காத வாகன ஓட்டிகள் மிக குறைவுதான் என்று சொல்லிவிட முடியும்.

மக்களுடன் மோதல்
பெங்களூரில் இந்த போக்கு மிக அதிகம்.பெங்களூர் நகரத்தின் நோ பார்க்கிங்கில் இருந்து வாகனங்கள் எடுத்துச் செல்லும் போது, கண்டபடி கயிற்றை கட்டி இழுப்பதால், பெரும்பாலான வாகனங்கள் சேதமடைவதாக மாநில அரசுக்கு புகார்கள் சென்று குவிந்தன. இப்படித்தான் தட்டிக் கேட்ட ஒரு பெண் மீது போலீஸ்காரர் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டதும், அது வீடியோ காட்சியாக பதிவானதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அமைச்சர் ஆலோசனை
இதையடுத்து கர்நாடக உள்துறை அமைச்சர் ஞானேந்திரா இதுகுறித்து மாநில முதல்வருடன் கலந்துரையாடியுள்ளார். அதன்பிறகு, வாகனங்களை டோ செய்யும் முறையில் மாற்றம் கொண்டு வரப்படும் என்றும், நோ பார்க்கிங்கில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதத் தொகை மாற்றி அமைக்கப்படும் என்றும் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

15 நாட்களில் தீர்வு
வாகன ஓட்டிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து, மாநில அரசுடன் பேசி வருகிறோம். அதுகுறித்து மாநில அரசு விவாதித்து வருகிறது. இதற்கான தீர்வு காண்பதற்காக பேசி வருகிறோம். தீர்வு காணும் வரை நோ பார்க்கிங்கில் நிறுத்தப்படும் வாகனங்கள் எடுத்துச் செல்லப்படாது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் 15 நாட்களுக்குள் இதற்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இழுத்துட்டு போகாதீங்க
பெங்களூர் நகரில் போக்குவரத்தை சீராக செயல்படுவதை உறுதிசெய்வதே எங்கள் முன்னுரிமை, அதே நேரத்தில், வாகனங்களை இழுப்பது போன்ற காவல்துறை நடவடிக்கைகளால் பொதுமக்களை துன்புறுத்துத்தலுக்கு ஆளாகிறார்கள். அதற்கு மாற்றாக எளிமையான வழி அறிமுகப்படுத்தப்படும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமயிலான கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இந்த கூட்டத்தில், டிஜி-ஐஜிபி பிரவீன் சூட், பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல் பந்த் மற்றும் இணை போலீஸ் கமிஷனர் (போக்குவரத்து) பி.ஆர்.ரவிகாந்தே கவுடா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

தற்காலிக நிறுத்தம்
பெங்களூர் நகரில் போக்குவரத்துத் துறையில் டோ செய்யும் வாகனங்கள் நூறுக்கும் அதிகமாக உள்ளன. மேலும், பல இடங்களில் வாடகைக்கு வாகனங்களை எடுத்து போலீசார் இவ்வாறு இழுத்துச் செல்கிறார்கள். அதே சமயம் பெங்களூர் போலீஸார் வாகன ஓட்டிகளுக்கு சொல்லாமல் தன்னிச்சையாக வாகனங்களை எடுத்துச் செல்வதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதனால் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் புதிய முடிவு வரும்வரை வாகனங்களை எடுத்துச் செல்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதனால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications