பெங்களூர் ரயில் நிலையம் அருகே கொடூரம்.. சகோதரரை தாக்கிவிட்டு இளம்பெண்ணை கடத்தி பலாத்காரம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூர் கே ஆர் புரம் ரயில் நிலையத்தில் நேற்று நள்ளிரவு பீகாரை சேர்ந்த 19 வயது இளம்பெண் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநில தலைநகரில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூர் நாட்டின் ஐடி தலைநகர் என்று அழைக்கப்படும் பெருமைக்குரியது. ஐடி நிறுவனங்கள் நிறைந்துள்ள பெங்களூரில் வெளி மாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஐடி துறை சார்ந்த இளைஞர்களும் இளம்பெண்களும் பணியாற்றி வருகிறார்கள். காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் கர்நாடகாவில் தற்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. இத்தகைய சூழலில் தான் பெங்களூரில் கொடூர சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

Bangalore Karnataka Crime

இளம்பெண்ணை கடத்தி பலாத்காரம்

ரயில் நிலையம் அருகே இளம்பெண் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். நேற்று நள்ளிரவு பெங்களூர் ரயில் நிலையம் அருகே தனது சகோதரருடன் இளம்பெண் நின்று கொண்டு இருந்துள்ளர். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் சகோதரரை தாக்கிவிட்டு இளம்பெணை கடத்தி சென்று பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

பீகார் மாநிலம் பங்கா மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் தனது குடும்பத்தினருடன் கேரளாவிற்கு கடந்த மாதம் வேலைக்கு சென்றுள்ளார். ஏலக்காய் தோட்டத்தில் பணியாற்றிய இளம்பெண்ணின் குடும்பம், ஏலக்காய் சீசன் முடிந்தததால், சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளனர். எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூர் வழியாக பீகார் செல்ல திட்டமிட்ட இளம்பெண்ணின் குடும்பம், இதற்காக நேற்று இரவு பெங்களூர் வந்துள்ளது. பெங்களூர் அந்த வகையில் நேற்று நள்ளிரவு பெங்களூர் கேஆர் புரம் ரயில் நிலையத்தில் இளம்பெண் குடும்பத்தினருடன் வந்துள்ளார்.

அலறித் துடித்த இளம்பெண்

அப்போது, பசி எடுக்கவே ஹோட்டல் எதுவும் இருக்கிறதா என்று தனது சகோதரரை அழைத்துக்கொண்டு இளம்பெண், பெங்களூர் ரயில்நிலையத்திற்கு வெளியே சென்று இருக்கிறார். இந்த நிலையில், தான் அங்கு வந்த நபர் ஒருவர் இளம்பெண்ணின் சகோதரரை தாக்கிவிட்டு அந்த பெண்ணை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்துள்ளனர்.

இளம்பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த நபரையும் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். மேலும் உள்ளூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவருக்கு உடந்தையாக இருந்த நபரும் கைது செய்யப்பட்டார். அவர்கள் இருவரது அடையாளமும் தெரியவந்துள்ளது. பெங்களூரில் வெளி மாநில இளம்பெண் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+