முடா விவகாரம்: சித்தராமையா ராஜினாமா கோரி போராடும் பாஜகவுக்கு எதிராக மத்திய அமைச்சர் குமாரசாமி!
பெங்களூர்: முடா வீட்டு மனை ஒதுக்கீடு விவகாரத்தில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என்று இடைவிடாமல் பாஜக தலைவர்கள் போராடுகின்றனர். இந்த வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்றம் சித்தராமையா மனுவை டிஸ்மிஸ் செய்த நிலையில் அவரது ராஜினாமாவை பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் ஜேடிஎஸ் தலைவரும் மத்திய இணை அமைச்சருமான குமாரசாமியோ, பாஜகவினரைப் போல் சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும் என தாம் வலியுறுத்த முடியாது என கூறியிருப்பது பாஜக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையமான முடா, முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு 14 வீட்டு மனைகளை ஒதுக்கீடு செய்தது. இது அதிகார துஷ்பிரயோகம்; சட்டவிரோதம் என்பது குற்றச்சாட்டு. ஆனால் மனைவியின் நிலத்தை முடா ஆக்கிரமித்த காரணத்தால் 14 வீட்டு மனைகள் இழப்பீடாக தரப்பட்டது என்கிறார் சித்தராமையா.

இந்த விவகாரத்தில் சித்தராமையா மீது வழக்கு தொடர ஆளுநர் கெலாட் அனுமதி கொடுத்தார். இதனடிப்படையில் பெங்களூர் நீதிமன்றத்தில் சித்தராமையா மீது வழக்கு தொடரப்பட்டது. ஆனால் ஆளுநர் அனுமதி கொடுத்ததற்கு எதிராக கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் சித்தராமையா மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை கர்நாடகா உயர்நீதிமன்றம் நேற்று டிஸ்மிஸ் செய்தது. இதனால் சித்தராமையாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. மேலும் சித்தராமையா உடனே முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் பெங்களூரில் நேற்று போராட்டம் நடத்தினர்.
இந்த பரபரப்புகளுக்கு நடுவே மத்திய அமைச்சர் குமாரசாமி, பாஜகவினரைப் போல தாம் சித்தராமையா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்த மாட்டேன். அனைத்து விவகாரங்களையும் நீதிமன்றமே பார்த்துக் கொள்ளும் என கூறியிருக்கிறார். முடா விவகாரத்தில் சித்தராமையாவின் ராஜினாமா கோரி பாஜக பாதயாத்திரை நடத்திய போதும் தொடக்கத்தில் குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் பாதயாத்திரையில் குமாரசாமியும் கலந்து கொண்டிருந்தார்.
இதனிடையே தாம் முதல்வர் பதவியில் இருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை என சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதேபோல கர்நாடகா அமைச்சர்கள் அனைவரும் சித்தராமையாவுக்கு ஆதரவாக உள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications