நெருங்கும் தேர்தல்.. லிங்காயத், ஒக்கலிகர் இடஒதுக்கீட்டை உயர்த்த பாஜக அரசு பச்சைக்கொடி.. மாஸ் பிளான்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர் : கர்நாடகா மாநிலத்தில் 2023 ஏப்ரல் மாதவாக்கில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில், கர்நாடக மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு, அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. லிங்காயத், ஒக்கலிகர் சமூகத்தினர் இட ஒதுக்கீட்டை அதிகரிக்கக் கோரி போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், அதற்கு பாஜக அரசு தற்போது பச்சைக்கொடி காட்டியுள்ளது. பாஜகவின் இந்த மூவ் கர்நாடகா தேர்தலில் பெரிய அளவில் எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது.

இடஒதுக்கீடு பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் லிங்காயத் மற்றும் வொக்கலிகா சமூகங்களை 3-வது வகையிலிருந்து 2-க்கு மாற்ற கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. அமைச்சரவை 2சி மற்றும் 2டி என இரண்டு புதிய வகைகளை உருவாக்கி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் 3ஏ மற்றும் 3பியை ரத்து செய்துள்ளது.

கர்நாடகாவில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டிசம்பர் 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் கர்நாடகாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவிருக்கும் சூழலில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

லிங்காயத் போராட்டம்

லிங்காயத் போராட்டம்

கர்நாடக மாநிலத்தில் மிகப்பெரிய வாக்கு வங்கியாகத் திகழ்வது லிங்காயத் சமூகத்தினர். கர்நாடகாவின் மொத்த மக்கள் தொகையில் 17% லிங்காயத்துகள். இந்த சமூகத்தினர் தங்களுக்கு 3டி பிரிவில் கொடுக்கப்படும் இடஒதுக்கீட்டை ரத்து செய்துவிட்டு, அதிகப்படியான இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் 2ஏ என்ற பிரிவின் கீழ் தங்களுக்கு இடமளிக்க வேண்டும் என பல வருடங்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கர்நாடக சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்ற நிலையில், மீண்டும் போராட்டத்தில் குதித்தனர். தங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால் லிங்காயத் சமூகத்தினர் ஒட்டுமொத்தமாக பாஜகவை புறக்கணிப்போம் என எச்சரிக்கை விடுத்தனர்.

வொக்கலிகர் சமூகம்

வொக்கலிகர் சமூகம்

இதேபோல, கர்நாடகாவில் அதிக அளவில் வசிக்கும் மற்றொரு சமூகம் வொக்கலிகர். பெங்களூர் நகரத்தை நிர்மாணித்தவர் இந்த சமூகத்தவரான கெம்பே கௌடா ஆவார். வொக்கலிகர் சமூகத்தினரின் வரவேற்பைப் பெறும் வகையில் சமீபத்தில் கூட பெங்களூரில் கெம்பே கௌடாவின் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டது. ஜேடிஎஸ் கட்சித் தலைவர் தேவகௌடா இந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர் தான். இதனால், அச்சமூகத்தினரின் வாக்குகளை பாஜக தவறவிட்டு வருகிறது. இந்நிலையில், வொக்கலிகர் சமூகத்தினர் தங்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இரண்டு பிரிவுகள் உருவாக்கம்

இரண்டு பிரிவுகள் உருவாக்கம்

இதனால் கர்நாடகா சட்டசபை தேர்தலில் இடஒதுக்கீடு பிரதான விவகாரமாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் கர்நாடக அரசு இன்று மாநிலத்தின் மிகப்பெரிய வாக்கு வங்கிகளான வொக்கலிகர்கள் மற்றும் லிங்காயத்துகளை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் (OBC) 2வது பிரிவுக்குள் அங்கீகரித்து அவர்களுக்கு இடஒதுக்கீடு அதிகரிக்க வழிவகை செய்துள்ளது. தற்போது, ​​'மிகவும் பிந்தங்கிய பிரிவினர்' 1 வகையிலும், 'மிதமாக பின்தங்கியவர்கள்' 2A மற்றும் 2B வகையிலும், 'பின்தங்கியவர்கள்' 3A மற்றும் 3Bயிலும் உள்ளனர். இந்நிலையில், பின்தங்கியவர்கள் என்ற 3வது நிலையில் இருந்த லிங்காயத் மற்றும் வொக்கலிகர்கள் சமூகங்களை பிரிவு 2-க்கு மாற்ற கர்நாடக பாஜக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, 2ஏ, 2பி தவிர 2சி, 2டி என இரண்டு பிரிவுகளை கர்நாடக அமைச்சரவை உருவாக்கியுள்ளது.

அமைச்சரவை ஒப்புதல்

அமைச்சரவை ஒப்புதல்

பசவராஜ் பொம்மை தலைமையிலான கர்நாடக அமைச்சரவை 3A மற்றும் 3B இடஒதுக்கீடு வகைகளை ரத்து செய்து, வொக்கலிகர்கள் மற்றும் லிங்காயத்துகளுக்கு இடமளிக்கும் வகையில் தற்போது வகை 2-ன் கீழ் இரண்டு புதிய பிரிவுகளை உருவாக்கியுள்ளது. கர்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 23ஆம் தேதி கர்நாடக முதல்வரிடம் பிற்படுத்தப்பட்டோர் ஆணைய இடைக்கால அறிக்கையை சமர்பித்த நிலையில், லிங்காயத், வொக்கலிகர் சமூகத்தினரின் இட ஒதுக்கீட்டு பிரிவை மாற்ற அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இட ஒதுக்கீடு அதிகரிக்கும்

இட ஒதுக்கீடு அதிகரிக்கும்

இதன்படி இனி, வொக்கலிகர்களுக்கான இடஒதுக்கீடு 2சி பிரிவின் கீழ் - நான்கு சதவிகிதம் - லிங்காயத்துகளுக்கு 2டி பிரிவின் கீழ் ஐந்து சதவிகிதம் என அதிகரிக்கும். இது இனி வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இந்த புதிய பிரிவுகள், பிற சமூகங்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை பாதிக்காது என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஜே.சி.மதுசாமி கூறுகையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் (EWS) இடஒதுக்கீட்டிற்கு தகுதியான மக்கள்தொகை விகிதம் சுமார் நான்கு சதவீதமாக உள்ளது. EWS பிரிவின் மீதமுள்ள பகுதியை 2C மற்றும் 2D இன் கீழ் நாங்கள் மறுபகிர்வு செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.

தேர்தல் கணக்கு

தேர்தல் கணக்கு

லிங்காயத் மற்றும் வொக்கலிகர் சமூகத்தினரின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வரும் 2023 ஏப்ரல் மாதவாக்கில் கர்நாடகாவில் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில், மாநிலத்தில் பெரிய வாக்கு வங்கி கொண்ட இரு சமூகத்தினரின் கோரிக்கைகளை பாஜக நிறைவேற்றி இருப்பது தேர்தலில் எதிரொலிக்கும் என பாஜக கணக்குப் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு கர்நாடகா வருகிறார். வரும் 31ஆம் தேதி பாஜகவின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார் அமித்ஷா. இந்நிலையில் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது பசவராஜ் பொம்மை அரசு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+