பெங்களூர் வாடகை வீட்டில் காதல் ஜோடி.. தீபாவளி நாளில் என்ன நடந்தது? போலீஸ் சொல்வது என்ன
பெங்களூர்: பெங்களூரு அருகே ஆனேக்கல் பகுதியில் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக ராகேஷ் பாத்ரா என்பவர் வேலை செய்து வந்தார். இவரது காதலி சீமா நாயக்.. இருவரும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தனர். இந்த காதல் ஜோடி ஜிகினி அருகே கல்லுபாலு கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து 2 பேரும் தங்கினார்கள். இருவரும் வீட்டில் இருந்த கோலம் அண்டை வீட்டாரை ஆடிப்போக வைத்துள்ளது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வோருக்கு, பொதுவாக சமூக பாதுகாப்பு, சட்ட பாதுகாப்பு இல்லை.. ஆனால் சேர்ந்து வாழ்வது ஆங்காங்கே நடக்கிறது. பெங்களூரில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம். பெங்களூரு அருகே ஆனேக்கல்லில் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்த காதல் ஜோடிக்கு நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

பெங்களூரு அருகே ஆனேக்கல் பகுதியில் உள்ள ஜிகினி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 23 வயதாகும் ராகேஷ் பாத்ரா என்பவர் வசித்து வந்தார். இவரது சொந்த ஊர் ஒடிசா மாநிலம் ஆகும். இவர், பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக ராகேஷ் பாத்ரா வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தில் ஒடிசாவை சேர்ந்த சீமா நாயக் (21) என்பவர் கூலி தொழிலாளியாக வேலை செய்தார். 2 பேரும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்ததால், அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் காதலாக மாறியது. பின்னர் ஜிகினி அருகே கல்லுபாலு கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து 2 பேரும் தங்கியிருக்கிறார்கள்.
ராகேஷ் மற்றும் சீமா திருமணம் செய்யாமலேயே ஒரே வீட்டில் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்துள்ளார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் மத்தியில் சண்டை வந்துள்ளது. இதற்கிடையில், நேற்று முன் தினத்தில் இருந்து ராகேஷ் வசித்து வந்த வாடகை வீடு திறக்கப்படாமல் இருந்திருக்கிறது.
நேற்று காலையில் ராகேஷ் செல்போனுக்கு, அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் அழைத்தபோது, அவர் எடுத்து பேசவில்லை என கூறப்படுகிறது இதனால் சந்தேகம் அடைந்து அவர்கள் ஜன்னல் கதவை திறந்து பார்க்கையில் சீமா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தும். ராகேசும் பிணமாக கிடந்தார். இதுபற்றி உடனடியாக ஜிகினி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்கள். போலீசார் விரைந்து வந்து ராகேஷ், சீமா ஆகியோரின் உடல்களை கைப்பற்றி விசாரித்தனர்.
அப்போது கடந்த 19-ந் தேதி நள்ளிரவு சீமா தூங்கிய பின்பு ராகேஷ் உயிரை விட்டுள்ளார். அடுத்த நாள் அதிகாலையில் எழுந்த சீமா, காதலன் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, ராகேஷ் தூக்கில் தொங்கிய துணியை வெட்டி உடலை கீழே இறக்கி இருக்கிறார். காதலன் உயிரிழந்திருப்பது தெரிந்ததும், சீமாவும் உயிரை மாய்த்தது தெரியவந்துள்ளது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் அந்த வீட்டுக்கு 2 பேரும் வாடகைக்கு வந்துள்ளனர். ராகேசுக்கும், சீமாவுக்கும் இடையே அடிக்கடி பணப்பிரச்சனையால் தகராறு ஏற்பட்டு வந்ததாம். கடந்த 19-ந் தேதி இரவும் ராகேஷ் மது குடிக்க பணம் கேட்டதாகவும், இந்த விவகாரத்தில் 2 பேருக்கும் சண்டை ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. ஜிகினி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் 360-டிகிரி மிரட்டல் அனுபவம்! ரசிகர்களை திக்குமுக்காட வைத்த சர்ப்ரைஸ் -
கரப்பான் பூச்சி கட்சியுடன் கைகோர்க்கும் பிரகாஷ் ராஜ்! கழற்றிவிடப்பட்ட காங்கிரஸ்! பெங்களூரில் ஷாக் -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
"மாமா உன் பொண்ண கொடு..அட ஆமா சொல்லிபுடு" இனி செல்லாது! சொந்தத்துக்குள் திருமணத்திற்கு ஸ்வீடன் தடை! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்












Click it and Unblock the Notifications