பாஜக ‛குட்புக்’கில் அண்ணாமலை.. பரிசாக கிடைத்த கர்நாடகா தேர்தல் இணை பொறுப்பாளர் பதவி! என்ன காரணம்?
பெங்களூர்: கர்நாடகாவில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வரும் நிலையில் அம்மாநில பாஜக தேர்தல் இணை பொறுப்பாளராக மாநில தலைவர் அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாஜக மேலிடம் அவர் மீது நம்பிக்கை வைத்தது எப்படி? நியமனத்தின் பின்னணி என்ன என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். மொத்தம் 224 தொகுதிகள் உள்ள நிலையில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டசபை தொகுதி நடைபெற உள்ளது.
ஆட்சியை தக்க பாஜக வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது. பாஜகவை தோற்கடித்து கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது.

நான்கு முனை போட்டி
இதுதவிர ஜனதாதளம்(எஸ்) மற்றும் ஆம்ஆத்மி கட்சிகளும் தங்களின் செல்வாக்கை நிரூபிக்க தயாராகி வருகின்றன. இதனால் அங்கு நான்கு முனை போட்டி ஏற்பட உள்ளது. தற்போதைய சூழலில் பாஜக, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்), ஆம்ஆத்மி கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளை கட்சி தலைவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இணை பொறுப்பாளராக அண்ணாமலை
இந்நிலையில் தான் கர்நாடகா மாநில தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானையும், இணை பொறுப்பாளராக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையையும் பாஜக நியமனம் செய்துள்ளது. இந்நிலையில் தான் கர்நாடகா தேர்தல் இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம் செய்திருப்பதன் பின்னணியில் உள்ள முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடகா ஐபிஎஸ் அதிகாரி
அதாவது அண்ணாமலை தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவராக இருந்தாலும் கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தார். 2011 பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியாக அண்ணாமலை கர்நாடகாவின் வெவ்வேறு மாவட்டங்களில் பணியாற்றி உள்ளார். கர்நாடகாவில் உடுப்பி மாவட்ட கார்கலா துணை எஸ்பியாகவும், அதன்பிறகு உடுப்பி மாவட்ட எஸ்பியாகவும் பணியாற்றினார். இதையடுத்து சிக்கமகளூரு மாவட்ட எஸ்பியாகவும், பெங்களூர் தெற்கு மண்ட துணை போலீஸ் கமிஷனராகவும் பணியாற்றினார். மிகவும் நேர்மையான அதிகாரியாக அண்ணாமலை அறியப்பட்டார். இளம்தலைமுறையினர் மத்தியில் பெயர் பெற்ற அண்ணாமலை கர்நாடகா சிங்கம் எனவும் புகழப்பட்டார்.

பிரச்சனையை தீர்க்க முயற்சி
பெங்களூரில் பணியாற்றிய நிலையில் கடந்த 2019 ல் அவர் தனது ஐபிஎஸ் பணியை ராஜினாமா செய்து தமிழ்நாடு வந்தார். அதன்பிறகு விவசாயத்தில் ஈடுபாடு காட்டிய அண்ணாமலை பாஜகவில் இணைந்து துணை தலைவரானார். தற்போது மாநில தலைவராக செயல்பட்டு வரும் நிலையில் அவர் கர்நாடகா மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போதைய சூழலில் கர்நாடகாவில் பாஜகவுக்கு சாதகமாக சூழல் இல்லை என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது மூத்த தலைவர் எடியூரப்பா முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததில் இருந்து தொடர்ச்சியாக கர்நாடகாவில் சர்ச்சைகள் வெடித்தன. ஹிஜாப் பிரச்சனை, ஹலால் உணவு பிரச்சனை, ஒப்பந்ததாரர்களிடம் 40 சதவீத கமிஷன் பெறுதல் உள்ளிட்ட பல பிரச்சனைகள் அடுத்தடுத்து வந்தன. இது வரும் தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது. இதனை சரிசெய்ய வேண்டிய பொறுப்பில் பாஜக மேலிடம் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் தான் கர்நாடகாவில் நேர்மையான அதிகாரியாக பெயர் பெற்ற அண்ணாமலையை அம்மாநிலத்தில் பாஜக தேர்தல் இணை பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் பாஜக இளம் வாக்காளர்களின் ஓட்டுக்களை கவர முயற்சிக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நியமனத்துக்கு காரணம் என்ன?
மேலும் கர்நாடகா தலைநகர் பெங்களூரில் மட்டும் 28 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு தமிழக மக்கள் அதிகமாக உள்ளனர். இதேபோல் கோலார், கோலார் தங்கவயல் உள்பட பெங்களூரை சுற்றிய பல தொகுதிகளிலும் தமிழர்கள் அதிகமாக உள்ளனர். ஓல்டு மைசூர் என அழைக்கப்படும் மைசூர், சாம்ராஜ்நகர், மண்டியா, ராமநகர் உள்ளிட்ட இடங்களிலும் தமிழ்பேசும் மக்கள் கணிசமாக உள்ளனர். இது காங்கிரஸ், ஜனதாதளம் எஸ் கட்சிகளின் கோட்டையாக அறியப்படும் நிலையில் அங்கு தற்போது பாஜக அதிக கவனம் செலுத்தி வருகிறது. தற்போதைய அண்ணாமலையின் நியமனம் என்பது அங்கு பலம் சேர்க்கலாம் என பாஜக மேலிடம் நம்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் அண்ணாமலைக்கு கன்னட மொழி நன்றாக தெரியும். இதனால் உள்ளூர் கட்சி நிர்வாகிகளுடன் அவரால் எளிதாக உரையாட முடியும் எனவும் கட்சி மேலிடம் நினைக்கிறது.

மேலிட குட்புக்கில் அண்ணாமலை
மேலும் தமிழ்நாடு மாநில பாஜக தலைவராக செயல்பட்டு வரும் அண்ணாமலைக்கு முதல் முறையாக வெளிமாநிலத்துக்கு தேர்தல் சார்ந்த பொறுப்பை கட்சி மேலிடம் வழங்கி உள்ளது. அதுவும் அவர் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அண்டை மாநிலமான கர்நாடகாவிலேயே வழங்கி உள்ளது. பொதுவாக இத்தகைய பொறுப்புகள் என்பது மிகுந்த நம்பிக்கைக்குரியவர்களுக்கு தான் பாஜக வழங்கும். தற்போது இந்த பொறுப்பு அண்ணாமலைக்கு வழங்கப்பட்டு உள்ளது என்பது அவர் மீது கட்சி மேலிடம் அதிக நம்பிக்கை வைத்துள்ளதையும், குறுகிய காலத்தில் அவர் கட்சி மேலிடத்தின் குட்புக்கில் இடம்பிடித்துள்ளதை காட்டுவதாக பாஜகவினர் கூறுகின்றனர். இதனால் தனது திறமையை வெளிக்காட்டி கட்சி மேலிடத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு அண்ணாமலைக்கு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications