கத்திரிக்கோலால் குத்தி.. நெருப்பை வைத்து பெண்ணை எரித்த 17 வயது சிறுவன்.. கள்ளக்காதல் கொடூரம்.. ஷாக்
பெண்ணை கொலை செய்த விவகாரத்தில் 17 வயது சிறுவன் கைதாகி உள்ளான்
பெங்களூரு: இளம்பெண் கொலையான விவகாரத்தில், 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளது பெருத்த அதிர்ச்சியை பெங்களூருவில் உண்டுபண்ணி வருகிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு பனசங்கரி பகுதியை சேர்ந்தவர்கள் லாலுகான்.. இவரது மனைவி அப்ரீனா கானம்.. 28 வயதாகிறது.. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 19-ம் தேதி அப்ரினா கொலை செய்யப்பட்டார்.. வீட்டில் தனியாக இருந்தபோது, யாரோ உள்ளே நுழைந்து, கத்திரிகோலால் அப்ரினாவை குத்தி கொன்றுள்ளனர்..

குத்தி கொலை
அதுமட்டுமல்லாமல், ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து இறந்தபோதும், அவரது சடலத்துக்கு தீவைத்து விட்டும் சென்றிருக்கிறார்கள்... எனவே இதுதொடர்பாக விசாரணையை போலீசார் மேற்கொண்டனர்.. முதல் விசாரணையே, அந்த பெண்ணின் கணவர் லாலுகானிடம்தான் ஆரம்பித்தனர்.. காரணம், சம்பவத்தன்று தம்பதிக்குள் தகராறு வந்திருக்கிறது.. அதனால், 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு அவரது மாமியார் வீட்டில் விட்டுவிட்டு லாலுகான் வேலைக்கு சென்றிருக்கிறார்.

மனைவி
ஆனால், போலீசாரிடம் லாலுகான் இதை பற்றி சொல்லும்போது, எங்களுக்குள் பிரச்சனை இருந்தது உண்மைதான்.. சம்பவத்தன்று தகராறு நடந்ததும் உண்மைதான்.. அது வழக்கம்போல வந்து போகும் பிரச்சனைதான்.. என் மனைவியை கொலை செய்யும் அளவுக்கு நான் துணியமாட்டேன்.. ஆனால், 17 வயது சிறுவன் ஒருவன் மீது சந்தேகமாக இருக்கிறது.. காலேஜ் படிக்கும் அந்த சிறுவன் என்னுடைய உறவினர் மகன்தான்..

தகராறு
என்னுடைய மனைவிக்கும், அவனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது... இது எனக்கு தெரிந்து, நான் இருவரையும் கண்டித்தேன்.. ஆனால், என் பேச்சை மனைவி கேட்கவில்லை.. சம்பவத்தன்றுகூட இது தொடர்பாகத்தான் தகராறு எங்களுக்குள் வந்தது.. அதனால், என்னுடைய குழந்தைகளை அழைத்துக்கொண்டு மாமியார் வீட்டில் விட்டுவிட்டு, டியூட்டிக்கு சென்றுவிட்டேன்" என்றார்.

வாக்குமூலம்
இதனையடுத்து போலீசார் அந்த 17 வயது சிறுவனை பிடித்து விசாரித்தபோதுதான், பெண்ணை கொலை செய்ததை ஒப்புக்கொண்டான்... இதுகுறித்து சிறுவன் தந்த வாக்குமூலத்தில், "எனக்கு போன் செய்து, வீட்டில் ஒரு பிரச்சனை, கிளம்பி வா என்று கூப்பிட்டார்.. அதனால் நானும் போனேன்.. என்ன நடந்தது என்று அவரிடம் கேட்டதற்கு, நம்ம விஷயம் கணவருக்கு தெரிந்துவிட்டது.. இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு வருகிறது.. காலையிலும் சண்டைதான்..

கத்தரிக்கோல்
அதனால் என்னை எங்காவது கூட்டிட்டு போய்விடு என்று சொன்னார்.. நான் அதை கேட்டு அதிர்ச்சி அடைந்து மறுப்பு தெரிவித்தேன்.. அதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண், ரூமுக்குள் சென்று கத்திரிக்கோல் எடுத்து கொண்டு என்னை குத்த வந்தார்.. அந்தப்பெண்தான் என்னை கொல்ல பார்த்தார்.. நான் தப்பித்து கொள்ள முயன்று, அந்த கத்திரிக்கோலை பிடுங்கி அவரை சரமாரியாக குத்திவிட்டேன்.. அவர் இறந்துவிடுவார் என்று நினைக்கவில்லை..

கைது
சரிந்து விழுந்து இறந்ததை பார்த்ததும் பயந்துபோய், என்ன செய்வது என்று தெரியாமல் உடலுக்கு தீவைத்து ஓடிவந்துவிட்டேன்.. நான் வேண்டுமென்றே இந்த கொலையை செய்யவில்லை.. திட்டமிட்டும் செய்யவில்லை" என்றார்.. இதனையடுத்து அந்த சிறுவனை கைது செய்த போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்... இளம்பெண் கொலையில் 2 நாட்கள் கழித்து உண்மை குற்றவாளி பிடிபட்டுள்ள சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications