Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கல்லூரியில் செய்த தவறு.. 11 ஆண்டுகளுக்கு பிறகு பழிதீர்த்த வழக்கு.. பாஜக எம்எல்ஏவுக்கு சிறை தண்டனை!

Subscribe to Oneindia Tamil

போபால்: மத்தியப் பிரதேசத்தில் எம்பி எம்ல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் பந்தனா தொகுதி பாஜக எம்ல்ஏ ராம் டாங்கூர் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இவர்கள் மீது கடந்த 11 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கில் தற்போது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பந்தனா தொகுதியின் பாஜக எம்எல்ஏவாக இருப்பவர் 29 வயதான ராம் டாங்கூர். இவர், கடந்த 2018ம் ஆண்டு நடந்த தேர்தலில் இந்த தொகுதியில் வெற்றி பெற்றார். ஆனால் 11 ஆண்டுகளுக்கு முன்னர் இவர் செய்த குற்றம் ஒன்று பூம்பராங் போல இவரை தற்போது பழி தீர்த்துள்ளது.

அதாவது இவர் கடந்த 2011ம் ஆண்டு கந்த்வாவில் உள்ள வேளாண் கல்லூரியில் பயின்று வந்துள்ளார். அப்போது வலதுசாரி அமைப்பான ஏபிவிபியில் (ABVP) இருந்து பணியாற்றி இருக்கிறார். இக்காலகட்டத்தில் இந்த அமைப்பு கல்லூரியில் தீவிரமாக இயங்கி வந்திருக்கிறது. அப்போது இந்த அமைப்பினரின் கோபத்தை தூண்டும் வகையில் சில உத்தரவுகளை கல்லூரி முதல்வர் அசோக் சவுத்ரி பிறப்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

போராட்டம்

போராட்டம்

இதனையடுத்து போராட்டத்தை ஏபிவிபி கையில் எடுத்தது. இரண்டு நாட்களாக கல்லூரியின் உள்ளே மாணவர்கள் யாரையும் அனுமதிக்காமல் இவர்கள் தடுத்து வந்திருக்கின்றனர். அதே போல கல்லூரி முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் முதல்வர் அசோக் சவுத்ரி இதற்கு இணங்கவில்லை. போராட்டத்தில் ஈடுபட்ட ஏபிவிபி அமைப்பினரும் பின்வாங்கவில்லை. போராட்டத்தின் மூன்றாவது நாளில் மோதல் முற்றியது. அதுவரை ஒரு ஓரமாக நின்று போராடிக்கொண்டிருந்தவர்கள் திடீரென முதல்வர் அறையை முற்றுகையிட்டனர்.

கறுப்பு மை பூச்சு

கறுப்பு மை பூச்சு

இதனை எதிர்பாராத பணியாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் நின்றுகொண்டிருக்க, ஏபிவிபி அமைப்பினர் கையில் கிடைத்ததையெல்லாம் உடைக்க தொடங்கியுள்ளனர். ஜன்னல்கள், பெஞ்சுகள், அலுவலகத்தில் இருந்த இதர பொருட்கள் என அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டது. இறுதியாக கல்லூரி முதல்வர் சிறைபிடிக்கப்பட்டார். இவரை சூழ்ந்துகொண்ட ராம் டாங்கூர் தலைமையிலான மாணவர்கள் கறுப்பு மையை அவர் முகத்தில் பூசினர். இது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ராம் டாங்கூர் உள்ளிட்ட இதர ஏபிவிபி அமைப்பினர் வெற்றி முழக்கமிட்டனர்.

தற்கொலை

தற்கொலை

ஆனால், அடுத்த நாள் கல்லூரி முதல்வர் அசோக் சவுத்ரி அவரது வீட்டிலிருந்து பிணமாக மீட்கப்பட்டார். உண்மையில் விஷயம் அப்போதுதான் பெரியதாக வெடித்தது. விசாரணையில் அவர் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டார் என்று காவல்துறை அறிக்கையை சமர்ப்பித்தது. இதனை ஊடகங்கள் விவாத பொருளாக்கின. அடுத்த ஒன்னரை ஆண்டுகளில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இப்பிரச்னை ஆளும் பாஜக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சி இப்பிரச்னையிலிருந்து பின்வாங்குவதாக தெரியவில்லை. எனவே வேறு வழியின்றி தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான மாநில அரசு உத்தரவிட்டது.

கைது

கைது

உத்தரவைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையில் இறங்கினர். விசாரணையில் ஏபிவிபி அமைப்பினர்தான் காரணம் என்பது உறுதியானது. எனவே இந்த போராட்டத்தை தலைமை தாங்கி அசோக் சவுத்ரி முகத்தில் கரியை பூசிய ராம் டாங்கூர் உட்பட பல மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு விரைவிலேயே ஜாமீன் கிடைத்தது. இதற்கிடையில் 2018ம் ஆண்டு தேர்தலில் ராம் டாங்கூர் பாஜக சார்பில் பந்தனா தொகுதியின் வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். இதில் வெற்றியும் பெற்றார்.

தீர்ப்பு

தீர்ப்பு

அதுவரை வேறு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த அசோக் சவுத்ரி தற்கொலை வழக்கு பின்னர் எம்பி எம்ல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பில் அப்போதைய ஏபிவிபி நிர்வாகியாகவும், தற்போது பாஜக எம்எல்ஏவாகவும் இருக்கும் ராம் டாங்கூர், பாஜக மாவட்டத் தலைவர் அனூப் படேல் உட்பட 12 பேர் குற்றவாளிகள் என்றும், இவர்கள் அனைவரும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+