நமது மருத்துவம், நமது விளையாட்டு, நமது விவசாயம் என்ற வரிசையில் இன்று நமது உணவுக் கலாச்சாரம்...

Subscribe to Oneindia Tamil

மூன்று ஆண்டு முடிந்து நான்காம் ஆண்டில் களிப்புடன் கால்பதிக்கும் நேட்டிவ்ஸ்பெஷல்.com உடன் ஒரு சிறு கேள்வி பதில் உரையாடல்,

நேட்டிவ்ஸ்பெஷல்.com போன்ற ஒரு முயற்சிக்கான தூண்டுகோல் என்ன?

நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை கூர்ந்து கவனித்ததன் விளைவே இந்த முயற்சிக்கான மூல கரணம். அமெரிக்காவில் காலம் தள்ளிக் கொண்டிருந்த பொழுது, நம்மை விட சிறிய நாடுகள், தங்களைப் பறைசாற்றிக் கொள்ளும் அளவுக்கு கலாச்சார அடிப்படை இல்லாத நாடுகளெல்லாம் தங்களின் தின்பண்டங்களை உலகறிய எடுத்து வந்து சந்தை செய்வதைக் காண நேர்ந்தது.

Wanna buy snacks online?

அப்பொழுதுதான் இந்த பொருட்களுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத யாரும் தொட்டு விட முடியாத அளவுக்கான பாரம்பரிய பண்டங்கள் நம்மிடையே இருந்தும் அவற்றைப் பொதுச் சந்தைக்கு இன்னும் நாம் கொண்டு வரவில்லை என்ற எண்ணம் மேலோங்கியது. எனவே அதற்கான ஒரு பொது மேடையாக நேட்டிவ்ஸ்பெஷல்.com எனும் இணையதளம் துவங்கப் பெற்றது

இன்றைய சூழலில் இப்படி ஒரு இணையத்திற்கான கட்டாயத் தேவை என எதைச் சுட்டலாம்?

நமது மருத்துவம், நமது விளையாட்டு, நமது கல்வி முறை, நமது விவசாயம் என ஒவ்வொன்றாக நமது அடையாளங்களை நாம் இழந்து கொண்டே வந்திருக்கிறோம். இந்த வகையில் நமதென்று நாம் கூறிக் கொள்ளவும் நம்மை அடையாளப் படுத்தவும் இறுதியாய் நம் கையில் இருப்பது நமது உணவுக் கலாசாரம் மட்டுமே. அதுவும் இன்று நம் கை விட்டு நகரத் துவங்கி விட்டது. எனவே நேட்டிவ்ஸ்பெஷல்.com இன் தேவை இந்த கால கட்டத்தில் அவசியமாகிறது.

Wanna buy snacks online?

உணவுக் கலாசாரம் என்பது காலம் காலமாக பிறருடன் கொடுத்து எடுத்து வளர்ந்ததல்லவா?

ஆம். ஆனால் பிரியாணி போன்ற பண்டங்கள் பாரசீகத்தில் இருந்து வந்திருந்தாலும் அவை நம் சுவைக்கும், நம் சூழலுக்கும் ஏற்றவாறு மாற்றப் பெற்று பயன்படுத்தப் பெற்றது. இன்றைய பாரசீக பிரியாணிக்கும் நமது தளப்பாகட்டிப் பிரியாணிக்கும் பார தூர வித்தியாசம் உண்டு. ஆனால் இன்று நாம் உள்வாங்கும் பிஸ்ஸா, பர்கர், போன்ற உணவுமுறைகள் எந்த மாற்றமும் இல்லாமல், மூலப் பொருட்கள் இறக்குமதி செய்யப் பெற்று நம் சந்தையில் விற்கப்படுகின்றன. இத்தகைய பயன்பாடே நமது தனித்துவத்தை இழக்க வைக்கக் கூடிய ஆபத்தைக் கொண்டது.

Wanna buy snacks online?

நேட்டிவ்ஸ்பெஷல்.com இல் என்ன வாங்கலாம்?

திருநெல்வேலி அல்வா, குருக்கத்தி சீடை, வெள்ளியணை அதிரசம், என நம்ம ஊர் பாரம்பரிய தின்பண்டங்கள் அனைத்தும் ஆர்டர் செய்யலாம். இருப்பிடத்தைப் பொருத்து ஓரிரு நாட்களில் வீட்டில் டெலிவர் செய்யப்படும். அனைத்துப் பொருட்களும் அந்தந்த ஊர்களில் இருந்தே வாங்கப் படுவதால் அதே தரமும் சுவையும் உறுதி.

தங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்!!நன்றி!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+