30 லட்சம் சம்பளம்- 7.5 லட்சம் வருமான வரி.. ₹40 கோடி விவசாய வருவாய் → ₹0 வரி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: "இந்த வருடம் நான் செலுத்திய வருமான வரி என்பது, நான் கொடுத்த வீட்டு வாடகையை விட அதிகம்! நான் கட்டிய வருமான வரிப் பணத்தைக் கொண்டே ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் 3 BHK வீட்டை வாடகைக்கு எடுத்து ஜாலியாகத் தங்கியிருக்க முடியும். இவ்வளவு வரியைக் கட்டிய பிறகும், நான் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் ஜிஎஸ்டி மற்றும் இதர வரிகளையும் தனியாகச் செலுத்துகிறேன். இது முழுக்க முழுக்க பகல் கொள்ளை என்று நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார். அவரது சமூக வலைதளப்பதிவு பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

வடமாநிலத்தைச் சேர்ந்த இன்னொரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில், "₹30 லட்சம் சம்பளம் வாங்குவோருக்கு ₹7.5 லட்சம் வருமான வரி

₹10 லட்சம் நீண்ட கால மூலதன ஆதாயம் பெறுவோருக்கு ₹1,09,375 வரி (₹1.25 லட்சம் விலக்குக்குப் பிறகு)

₹40 கோடி விவசாய வருவாய் → ₹0 வரி?

₹7,000 கோடி அரசியல் கட்சி வருவாய் → ₹0 வரி?

30 lakh salary 7 5 lakh income tax 40 crore agricultural income 0 tax

₹12,000 கோடி ஐபிஎல் (IPL) வருவாய் → ₹0 வரி? (நெட்டிசனின் இந்த பாயிண்ட் மட்டும் தவறு)

சம்பளம் பெறும் நடுத்தர வர்க்கத்தினர் மட்டும் ஏன் தொடர்ந்து அதிக வரி செலுத்துகிறார்கள்?

வெவ்வேறு வருமான ஆதாரங்களுக்கு ஏன் வெவ்வேறு விதிகள் பின்பற்றப்படுகின்றன?

உண்மையில் இந்தியாவின் வரிச் சுமையை யார் சுமக்கிறார்கள்?

இது உண்மையில் ஒரு நியாயமான வரி முறையா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்த நெட்டிசன் கேட்பதில் ஓரளவு உண்மை இல்லாமல் இல்லை என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.. ஏனெனில் மாத சம்பளம் வாங்குபவர்களின் வரியை 'டிடிஎஸ்' மூலம் மத்திய அரசு வருமானத்தை கையில் வாங்குவதற்கு முன்பே பிடித்துவிடும். இவர்களால் எந்தச் செலவையும் 'வணிக செலவு' என்று காட்டி வரி விலக்கு எல்லாம் பெற வாய்ப்பே கிடையாது.

அதேபோல் பங்கு சந்தை முதலீட்டாளர்கள் ( ₹10 லட்சம் வருமானத்திற்கு ₹1,09,375 மூலதன வரி)

ஷேர் மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீட்டை ஊக்குவிக்க 12.5% என்கிற அளவில் குறைந்த வரி விதிக்கப்படுகிறது எனவே வரி குறைவாகவே இருக்கும்.

விவசாய வருமானம் 40கோடி என்றால் வரியே கிடையாது

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 10(1)-ன் படி ஏழை விவசாயிகளைக் காப்பதற்காக விவசாய வருமானத்திற்கு 100% வரி விலக்கு உள்ளது. ஆனால், இதை வைத்து கார்ப்பரேட் நிறுவனங்களும், அரசியல்வாதிகளும் தங்கள் கருப்புப் பணத்தை "விவசாய வருமானம்" என்று காட்டி வரி ஏய்ப்பு செய்வதாக பிரச்சனை இன்று வரை பேசுபொருளாகவும், முணுமுணுப்பாகவும் உள்ளது.

அரசியல் கட்சிகளை பொறுத்தவரை ₹7,000 கோடி வருமானத்திற்கு பூஜியம் வருமானம் வரி.. எவ்வளவு வருமானம் வந்தாலும் வரியே கிடையாது என்பது மிகப்பெரிய நகை முரண். ஏனெனில் வருமான வரிச் சட்டப்பிரிவு 13A படி, அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகளுக்கு வரி விலக்கு உள்ளது.

₹12,000 கோடி ஐபிஎல் (IPL) வருவாய் → ₹0 வரி? என்று நெட்டிசன் கூறியது மட்டும் தவறு. ஆனால் இவ்வளவு நாளாக இருந்து வந்த நடைமுறையைத்தான் அவர் கூறியிருந்தார். ஏனெனில் "பிசிசிஐ வரி கட்டுவதில்லை" என்றே கருத்து உள்ளது. ஆனால், பிசிசிஐ தன்னை "விளையாட்டை ஊக்குவிக்கும் தொண்டு நிறுவனம் என்று காட்டி வரி விலக்கு கோரி வந்தது. ஆனால் வருமான வரித்துறை அதை ஏற்க மறுத்து ஆயிரக்கணக்கான கோடிகளை வரி விதித்துள்ளதுது. ஜிஎஸ்டியு வசூலித்து வருகிறது.

வடநாட்டு நெட்டிசன் கேட்டபடி, உண்மையில் இந்தியாவின் வரிச்சுமையைச் சுமப்பது யார் என்றால், அதுவும் 40 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் வெறும் 2% முதல் 3% மக்கள் தான் வருமான வரியே கட்டுகிறார்கள். பணக்காரர்கள், வியாபாரிகள் தப்பித்துவிடுவது அதிகமாக உள்ளது. ஆனால் உண்மையில் மாதக்கடைசியில் சம்பளம் பற்றாமல் மாதம் மாதம் சம்பளம் வாங்குவோர் தான், 100% நேர்மையாக வரியைக் கட்டிவிட்டு, சாலை வரி, பெட்ரோல் வரி, ஜிஎஸ்டி என மறுபடியும் வரியை செலுத்தி தேசத்தின் சிலுவையாக உள்ளார்கள். ஆனால் அவர்களுக்கு எந்த சலுகையும் கிடையாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+