டிரம்ப் + அமெரிக்க டாலர் மதிப்பு! ஜெட் வேகத்தில் பாயும் தங்கம் விலை! இனிமேல் குறைய வாய்ப்பு இருக்கா?

Subscribe to Oneindia Tamil

மும்பை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஜெட் வேகத்தில் அதிகரித்தே வருகிறது. இதனால் தங்கத்தை வாங்குவது என்பது மிடில் கிளாஸ் மக்களுக்கு முடியாத ஒன்றாகி வருகிறது. இதற்கிடையே தங்கம் விலை இந்தளவுக்கு உயர என்ன காரணம்.. இதன் விலை எப்போது மீண்டும் குறையத் தொடங்கும் என்பது குறித்து வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை நாம் பார்க்கலாம்.

கொரோனா காலத்தில் அதிகரித்த தங்கம் விலை அதன் பிறகு குறையவே இல்லை.. தொடர்ந்து அதிகரித்து உச்சம் தொட்டது. இடையில் மத்திய அரசின் வரி குறைப்பு, டிரம்ப் வருகை ஆகியவை காரணமாகச் சற்று குறைந்திருந்தது.

gold rate gold price

தங்கம் விலை:

சூப்பர், விலை குறைஞ்சு இருக்கு என நாம் நினைப்பதற்குள் தங்கம் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. அதிலும் குறிப்பாகத் தங்கம் விலை கடந்த சில நாட்களாக மிக வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் 24 கேரட் தங்கம் 10 கிராம் முதல்முறையாக ரூ.80 ஆயிரத்தைத் தாண்டியது. நேற்றைய தினம் 22 கேரட் தங்கம் ஒரு சவரன் அதாவது 8 கிராம் ரூ.60 ஆயிரத்தைத் தாண்டியது.

தங்கம் விலை அதிகரிக்க உண்மையில் என்ன காரணம்.. இது எப்போது தான் குறையும்.. உண்மையாகவே தங்கம் விலை குறைய வாய்ப்பு இருக்கிறதா.. இது குறித்து வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

என்ன காரணம்:

அமெரிக்க அதிபராக மீண்டும் டிரம்ப் பதவியேற்றுள்ள நிலையில், அவரது நடவடிக்கைகளால் சர்வதேச வணிகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தில் பாதுகாப்பான முதலீடாகக் கருதி தங்கத்தில் முதலீடு அதிகரித்து வருகிறது.

டிரம்ப் வருகையை ஒட்டி கடந்த சில வாரங்களாகவே சர்வதேச சந்தையில் டாலர் மதிப்பு அதிகரித்து வந்தது. டிரம்ப் வந்தால் பெருநிறுவனங்களுக்கான வரி குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு காரணமாகவே டாலர் மதிப்பு அதிகரித்தது. ஆனால், கடந்த ஒரு வாரமாகச் சர்வதேச தந்தையில் டாலர் மதிப்பு கணிசமாகச் சரிந்துள்ளது. இதுவும் கூட தங்கம் விலை கணிசமான அளவுக்கு அதிகரிக்க முக்கிய காரணமாக இருக்கிறது. பொதுவாகவே பொருளாதார மற்றும் புவிசார் அரசியலில் நிச்சயமற்ற சூழல் நிலவும் போது தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச முதலீட்டாளர்கள்

இதன் காரணமாகவே சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்கிறார்கள். இதனால் இந்தியாவிலும் தங்கம் விலை உயர்கிறது. அதேநேரம் தங்கம் விலை உயர்வதால் எதிர்வரும் திருமண சீசனில் தங்கம் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இருக்குமா என்ற சந்தேகமும் தங்க நகை விற்பனையாளர்களிடையே எழுந்துள்ளது.

எப்போது குறையும்:

டிரம்ப் வருகையால் கூடுதல் வரி, பொருளாதாரத் தடைகளால் சர்வதேச வணிகம் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாலேயே தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் அதிகரிப்பதாக வல்லுநர் ரெனிஷா சைனானி குறிப்பிடுகிறார். புவிசார் அரசியலில் தெளிவு ஏற்பட்டு, டாலர் டிரெண்ட் மீண்டும் மாறும் போதுதான் தங்கம் விலை குறையத் தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "பெரு நிறுவனங்களுக்கு வரி குறைப்பு, சர்வதேச வர்த்தகத்தில் சிக்கல் எதுவும் ஏற்படாது என்பது தெளிவாகத் தெரியும் போது தங்கம் விலை உயர்வு நிற்கும். இந்தாண்டு நடுப்பகுதியில் இந்த நிலையை நாம் அடைவோம். அதுவரை தங்கம் விலை உயரவே செய்யும். அதன் பிறகே தங்கம் விலை உயர்வு சற்று கட்டுக்குள் வரும். இந்தியா போல விலைக்கு முக்கியத்துவம் தரும் மக்கள் அதிகம் இருக்கும் சந்தையில் இதனால் தங்க விற்பனை நிச்சயம் பாதிக்கப்படும்" என்றார்.

இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+