ஒருவழியாக ஸ்கைப், வைபர் கட்டண சேவையை வாபஸ் பெற்ற ஏர்டெல் நிறுவனம்!
டெல்லி: இலவச இன்டர்நெட் சேவைகளான ஸ்கைப், வைபரை கட்டணமாக்கும் திட்டத்தினைக் கைவிட்டுள்ளது ஏர்டெல் நிறுவனம்.
ஸ்கைப், வைபர், லைன் போன்ற நிறுவனங்கள் இணைய வழியாக பேசும் சேவையை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தின் அப்ளிகேஷனும், இணைய வசதியும் கொண்ட ஒருவர் உலகில் எங்கிருந்தாலும் இதே வசதி கொண்ட எவருடனும் எந்த கட்டணமும் இல்லாமல் பேச முடியும்.

பாதிக்கப்படும் வருமானம்:
மேற்கண்ட நிறுவனங்களின் சேவை வசதியால் தங்களது வருமானம் பாதிக்கப்படுவதாக தொலை தொடர்பு நிறுவனங்கள் முறையிட்டு வந்தன.
வாய்ஸ் கால் பேக்:
இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி முன்னணி தொலை தொடர்பு நிறுவனமான ஏர்டெல், வாய்ஸ் கால் பேக் என்ற புதிய பேக்கை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்தது.
கட்டண சேவை:
இதனால் பணம் கொடுத்து இந்த பேக்கை வாங்கினால் மட்டுமே வாய்ஸ் கால் சேவையை பயன்படுத்தமுடியும் என்ற நிலை உருவாகும் வாய்ப்பு இருந்தது.
கோபத்தை ஏற்படுத்திய திட்டம்:
இந்த திட்டம் ஆன்ட்ராய்டு போனில் ஸ்கைப், வைபர் போன்ற அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தி இலவச வாய்ஸ் கால் சேவையைப் பயன்படுத்திவந்த ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
கைவிட்ட ஏர்டெல்:
இதனால் ஏர்டெல் நிறுவனத்திற்கு பல்வேறு வகையில் கடும் நெருக்கடி ஏற்பட்ட நிலையில், இன்று வாய்ஸ் கால்களுக்கு கட்டணம் விதிக்கும் தன் திட்டத்தை கைவிடுவதாக ஏர்டெல் அறிவித்தது.
வாபஸ் வாங்கியது:
மேலும் தொலை தொடர்புக் கட்டுப்பாட்டு அமைப்பான டிராய் விரைவில் வாய்ஸ் கால் உள்ளிட்ட சேவைகளைப் பற்றிய ஆலோசனைகளை வழங்க இருப்பதால் முன்பு வெளியிட்ட வாய்ஸ் கால் பேக் திட்டத்தை செயல்படுத்தப் போவதில்லை என்றும் திட்ட வட்டமாகக் கூறியுள்ளது.
இனி நோ பிராப்ளம்:
இதனால் முன்பு போலவே ஆன்ட்ராய்டு பயனாளர்கள் இலவசமாக வாய்ஸ் கால் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
