எலான் மஸ்க்கும் இடி அமீனும்! அமெரிக்காவை பாருங்க! குலுங்க குலுங்க சிரித்த ஆனந்த் சீனிவாசன்! என்னாச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் தொழிலதிபர் எலான் மஸ்க் அங்கு எடுக்கும் முடிவுகள் சர்வதேச அளவில் தாக்கங்களை ஏற்படுத்துவதாக உள்ளன. இதற்கிடையே எலான் மஸ்க்கின் சமீபத்திய செயலை குறிப்பிட்டு விமர்சித்த ஆனந்த் சீனிவாசன், மஸ்கிற்கு பொருளாதாரமே தெரியாது என்பதை அவரது பேச்சே காட்டுவதாகவும் சாடினார்.

தொழிலதிபர் எலான் மஸ்க் அமெரிக்க அதிபரான டிரம்ப் உடன் இணைந்து பணியாற்றி வருகிறார். அரசு செலவுகளைக் குறைக்கும் டாஜ் துறையை டிரம்பும் எலான் மஸ்கிற்கு ஒதுக்கியுள்ளார்.

Anand Srinivasan Business Elon Musk

எலான் மஸ்க்:

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு டிரம்பை சந்திக்க அதிபரின் ஓவல் அலுவலகத்திற்குச் சென்ற எலான் மஸ்க், அவரது 4 வயது மகனையும் உடன் அழைத்துச் சென்றிருந்தார். இது தொடர்பான போட்டோ வீடியோ வெளியாகி அது டிரெண்டானது. இது தொடர்பாகப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில கருத்துகளைக் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தனது யூடியூப் சேனலில், "அமெரிக்காவில் இப்போது இரு பாகவதர்களின் கச்சேரி நடக்கிறது. டிரம்பின் தினசரி கச்சேரி அங்கு இருக்க.. அதில் எலான் மஸ்கும் இணைந்தார். அதிபர் அலுவலகத்திற்கு அவரது 4 வயது மகனான எக்ஸை கையோடு அழைத்து வந்துவிட்டார். இதைப் பார்த்தால் எனக்கு இடி அமீனின் ரைஸ் ஆண்ட் ஃபால் ஆஃப் இடி அமீன் படம் தான் நினைவுக்கு வந்தது.

குலுங்கி சிரித்த ஆனந்த் சீனிவாசன்

அந்த படத்தில் இடி அமீன் தனது 6 வயது மகனுக்கும் பீல்ட் மார்ஷல் பட்டம் கொடுப்பார். அந்த ரேஞ்சில் தான் இப்போது அமெரிக்காவில் நடந்து வருகிறது. கேட்டால் நாங்கள் தான் உலகின் வலிமையான ஜனநாயகம் என்று வேறு சொல்லிக் கொள்கிறார்கள். ரைஸ் ஆண்ட் ஃபால் ஆஃப் இடி அமீன் படத்தில் அனைவரையும் வைத்துக் கொண்டு தனது மகனுக்கும் பீல்ட் மார்ஷல் பட்டம் கொடுப்பதாக அறிவிப்பார். அப்படி தான் இருக்கு" எனச் சொல்லும்போதே குலுங்கி குலுங்கி சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.

தொடர்ந்து பேசிய ஆனந்த் சீனிவாசன், "அமெரிக்க பெடரல் அரசில் பணியாற்றும் பலரை வேலையில் இருந்து தூக்கப் போவதாக எலான் மஸ்க் கூறுகிறார். மேலும், பல ஏஜென்சிக்களை மொத்தமாகவே மூட வேண்டும் என்கிறார். இதை எல்லாம் செய்யவில்லை என்றால் அமெரிக்காவே திவால் ஆகிவிடும் என்கிறார். இதில் இருந்தே எலான் மஸ்கிற்கு பொருளாதாரம் என்றாலே என்னவென்று தெரியாது என்பது தெளிவாகத் தெரிகிறது.

திவால் ஆகவே முடியாது

ஏனென்றால் ஒரு நாடு என்பது மொத்தமாக திவால் ஆகவே ஆகாது. அவர்கள் நினைத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் பணத்தை அடித்துக் கொண்டே இருக்கலாம். எனவே, நாட்டின் நிதிப் பற்றாக்குறை தாக்க முடியாத அளவுக்கு உயரும் எனச் சொல்லலாமே தவிர.. நாடு திவால் ஆகும் எனச் சொல்ல முடியாது. எலான் மஸ்கின் நடவடிக்கைகள் நிச்சயம் நீதிமன்றத்திற்குப் போகும்.

சிக்கலில் அமெரிக்கப் பொருளாதாரம்

மேலும், டிரம்ப் நிர்வாகத்தில் எலான் மஸ்க் இருக்கிறார். அதேநேரம் அவர் பல நிறுவனங்களை நடத்தியும் வருகிறார். இது கான்பிளிக்ட் ஆப் இன்ட்ரஸ்ட் ஆகலாம். நாசா இப்போது ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் போயிங் என இரு நிறுவனங்களுடன் வேலை செய்து வருகிறது. இப்போது போயிங் நிறுவனத்தின் எத்தனை ஒப்பந்தங்கள் எலான் மஸ்கிடம் வருகிறது என்பதையும் நாம் பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்" என்றார்.

அமெரிக்கப் பொருளாதாரம் இப்போது சிக்கலான சூழலில் இருப்பதாக பல்வேறு பொருளாதார வல்லுநர்களும் குறிப்பிட்டுள்ளதாகக் கூறிய ஆனந்த் சீனிவாசன், இதே நிலை தொடர்ந்தால் அமெரிக்காவில் விலைவாசி உயரும் என்றும் கூறினார்.

Anand Srinivasan Business Elon Musk

இடி அமீன்

உலகில் வாழ்ந்த மிக மோசமான கொடுங்கோல் ஆட்சியாளர்களில் ஒருவராக இடி அமீன் கருதப்படுகிறார். இவர் 1971 முதல் 1979 வரை உகாண்டாவை ஆட்சி செய்தார். ராணுவம் மூலம் ஆட்சிக்கு வந்த இடி அமீன், அப்போது செய்யாத அட்டூழியங்களே இல்லை. தனது எதிரிகளையும் குறிப்பிட்ட இன மக்களையும் அழித்தார் ஒழித்துக் கட்டினார். ஆண்டுகள் செல்ல செல்ல அவரது ஆட்சி கொடூரமானதாகவும் கணிக்க முடியாததாகவும் மாறியது.

மேலும், அதிகார பசியிலிருந்த இடி அமீன் மொத்த அதிகாரத்தையும் தானே எடுத்துக் கொண்டார். தன்னை தானே புகழ்ந்து பல பட்டங்களைக் கொடுத்துக் கொண்டார். தனது குடும்பத்தினருக்கும் இதுபோல பல பட்டங்களைக் கொடுத்தார். ஒரு கட்டத்தில் இதுபோல அவரை அவரே புகழ்ந்து கொள்வது கேலிக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+