ரூ. 5,900 கோடி மதிப்பிலான பிட்காயின்.. குப்பையில் வீசிய பெண்.. கதறி துடிக்கும் முன்னாள் காதலன்!

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இந்த உலகத்தில் யாருக்கு எப்படி அதிர்ஷ்டம் அமையும் என்று யாருக்குமே தெரியாது. அதுபோல வீட்டு வாசல் வரை வரும் அதிர்ஷ்டம் அப்படியே திரும்பிப் போய்விடும் நிகழ்வுகளும் கூட நடந்துள்ளது. அப்படியொரு சம்பவம் தான் இப்போது இங்கே ஒருவருக்கு நடந்துள்ளது. ரூ. 5,900 கோடி மதிப்பிலான பிட்காயினை முன்னாள் காதலி குப்பையில் போட்டதால், அதை தேடிக் கதறி வருகிறார் முன்னாள் காதலன். இது குறித்து நாம் பார்க்கலாம்.

டிரம்ப் அதிபர் தேர்தலில் வென்றது முதலே பிட்காயின் விலை எங்கோ ராக்ரெட்டில் பறக்கிறது. இப்போது ஒரு பிட்காயின் விலை இந்திய மதிப்பில் சுமார் 80 லட்சமாக இருக்கிறது.

bitcoin personal finance

ஒரு பிட்காயினை வைத்திருந்தாலே லைஃப் செட்டில் என்ற சூழல் இருக்கிறது. ஆனால், இங்கே ஒருவர் சுமார் 8,000 பிட்காயினுக்கு சொந்தக்காரராக இருந்தாலும் அதை என்ஜாய் செய்ய முடியாமல் இருக்கிறார்.

பிட்காயின்: அதாவது பிரிட்டன் நாட்டை சேர்ந்த பெண்ணின் முன்னாள் காதலன் ஜேம்ஸ் ஹோவெல் என்பவர் அவரது பிட்காயினை ஹார்ட் டிரைவில் சேமித்து வைத்துள்ளார். அந்த ஹார்ட் டிரைவை அவர் தெரியாமல் குப்பையில் வீசிவிட்டாராம். அந்த ஹார்ட் டிரைவில் இருந்த பிட்காயினின் தற்போதைய மதிப்பு சுமார் ரூ. 5,900 கோடி (அதாவது 569 மில்லியன் பவுண்டுகள்) ஆகும்.

ஹல்ஃபினா எடி-எவன்ஸ் என்ற அந்த பெண் இது தொடர்பாகக் கூறுகையில், "சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு எனது காதலனுக்கும் எனக்கும் பிரேக் அப் ஆனது. இதனால் அவரது பொருட்களை நான் அருகே உள்ள வேல்ஸ் நியூபோர்ட் குப்பைக் கிடங்கில் வீசினேன். எனது முன்னாள் காதலன் தான் அவருக்குச் சொந்தமான குப்பைகளை வீசச் சொன்னார். இதன் காரணமாகவே வீசினேன். எனக்கு உள்ளே என்ன இருந்தது என்று கூட அப்போது எனக்குத் தெரியாது. எனவே, இதில் எனது தவறு எதுவும் இல்லை" என்றார்.

8000 பிட்காயின்கள்: கடந்த 2009ம் ஆண்டு முதலே ஜேம்ஸ் ஹோவெல்ஸ் பிட்காயின்களை மைன் செய்து வந்துள்ளார். இதுபோல சுமார் 8,000 பிட்காயின்களை அவர் மைன் செய்து இருந்தார். அப்போது அதன் வெல்யூ மொத்தமாகவே 640 டாலர் தான். இதனால் அவர் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. காதலியுடன் பிரேக் அப்.. அது இது என்று போய்விடவே.. அவர் தன்னிடம் பிட்காயின் இருப்பதையே மறந்துவிட்டார்.

இப்படியே பல காலம் ஓடிவிட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் தன்னிடம் கிரிப்டோகரன்சி இருப்பதே அவருக்கு ஞாபகம் வந்துள்ளது. தனது பிட்காயின்களின் டிஜிட்டல் கீ இருக்கும் ஹார்ட் ட்ரைவ் முன்னாள் காதலி வீட்டில் இருந்து எடுத்து வரவில்லை என்பதை உணர்ந்த ஜேம்ஸ். இது தொடர்பாக முன்னாள் காதலி எவன்ஸை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அவருக்கு முதலில் எதைக் கேட்கிறார் என்றே புரியவில்லை.

குப்பைக் கிடங்கு: நன்கு யோசித்த பிறகே குப்பையில் போட்ட ஹார்ட் வேரை கேட்கிறார் என்பது தெரிந்தது. இதைக் கூறவே ஜேம்ஸ் ஒரு நொடி அதிர்ந்துவிட்டார். ஏனென்றால் அந்த பிட்காயின்களின் தற்போதைய மதிப்பு சுமார் 569 மில்லியன் பவுண்டுகள். அதாவது இந்திய மதிப்பில் ரூ. 5,900 கோடியாகும். அந்த பிட்காயின்களின் மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வந்தாலும் ஒரு லட்சம் டன் குப்பைகள் இருக்கும் குப்பைக் கிடங்கில் இருந்து அதை எடுக்க முடியாமல் திணறுகிறார் ஜேம்ஸ்.

ஜேம்ஸ் பிட்காயினை தேடுவது குறித்து அவரது முன்னாள் காதலி எவன்ஸ் கூறுகையில், "அவர் அதைக் கண்டுபிடித்துவிடுவார் என்று நம்புகிறேன். அதில் எனக்கு ஒரு பைசா கூட தேவையில்லை.. ஆனால், அவர் கண்டுபிடித்தால் தான் அதை அதைப் பற்றிப் பேசுவதை நிறுத்துவார். எனவே, அதற்காகவே அவர் அந்த ஹார்ட் டிரைவை கண்டுபிடிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதனால் எனது மன நிம்மதி தான் பாதிக்கப்பட்டுள்ளது" என்றார்.

கதறும் இளைஞர்: தனது பிட்காயின்கள் இருக்கும் ஹார்ட் டிரைவ் எங்கும் போகவில்லை.. குப்பைக் கிடங்கில் தான் இருக்கிறது என்பதைத் தெரிந்ததும் ஜேம்ஸ், அங்கு முழுமையாகத் தேட அனுமதி கோருகிறார். இருப்பினும், நியூபோர்ட்டில் உள்ள சுற்றுச்சூழல் விதிகளைக் காரணம் காட்டி அவரது கோரிக்கைகளை அந்த ஊர் கவுன்சில் நிராகரித்துள்ளது. பல முறை இதற்கான கோரிக்கைகளை அவர் எழுப்பிய போதிலும், இது மிக மோசமான சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் எனச் சொல்லி அதை நிராகரித்துவிட்டன.

தனது ஹார்ட் டிரைவ் மீட்கப்பட்டால், நியூபோர்ட் கவன்சிலுக்கு அதன் மதிப்பில் 10%ஐ நன்கொடையாக வழங்குவதாகக் கூட ஜேம்ஸ் சொல்லிப் பார்த்தார். ஆனாலும், அனுமதி கிடைக்கவில்லை.. இதையடுத்து நியூபோர்ட் நிர்வாகத்தை எதிர்த்து அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு டிச. தொடக்கத்தில் விசாரணைக்கு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+