ரூ. 7000க்கு கீழ் போன தங்கம் விலை.. இன்னும் எவ்வளவு குறையும்.. ஆனந்த் சீனிவாசன் சொன்ன ஹேப்பி நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை சென்னையில் பல வாரங்களுக்குப் பிறகு மீண்டும் ரூ. 7000க்கு கீழ் வந்துள்ளது. டிரம்ப் அதிபர் தேர்தலில் வென்றது முதலே தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், இது வரும் காலங்களில் தொடருமா.. அப்படியே தொடர்ந்தாலும் எவ்வளவு காலம் தங்கம் விலை குறையும்.. எப்போது முதல் அதிகரிக்கத் தொடங்கும் என்பது குறித்து பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.

நமது நாட்டில் தங்கம் விலை இம்மாத தொடக்கம் முதலே தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.200க்கு மேல் குறைந்துள்ளது.

anand srinivasan business personal finance

அமெரிக்க அதிபர் தேர்தலில் எப்போது டிரம்ப் வென்றாலோ அப்போதே முதலே தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இதற்கிடையே சுமார் 2 மாதங்களுக்குப் பிறகு இப்போது மீண்டும் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7000க்கு கீழ் வந்துள்ளது.

ஆனந்த சீனிவாசன்: தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் இப்போது வாங்குவதற்குப் பதிலாக மேலும் சில காலம் காத்திருந்து தங்கத்தை வாங்கலாமா எனப் பலரும் யோசித்து வருகிறார்கள். இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் தங்கம் விலை சரிவது குறித்து விளக்கியுள்ளார்.

இன்னும் எத்தனை காலம் தங்கம் விலை சரியும்.. மீண்டும் எப்போது உயரத் தொடங்கும் என்பதெல்லாம் குறித்து தனது கருத்துகளை முன்வைத்து இருக்கிறார். மேலும், பிட்காயின் விவகாரத்தில் என்ன நடக்கிறது என்பது தொடர்பாகவும் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

என்ன சொன்னார்: இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில், "இப்போது உங்கள் அனைவருக்கும் நல்ல செய்தி. 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7000க்கு கீழ் போய் இருக்கிறது. தங்கம் விலை இன்னும் குறைய வாய்ப்பு இருக்கிறது. கடந்த சில நாட்களில் மட்டும் ரூ. 100க்கு மேல் விலை குறைந்துள்ளது.

ரூபாய் மதிப்பு சரிந்தாலும் கூட அதையும் தாண்டி தங்கம் விலை சரிந்துள்ளது. தங்கம் விலை குறையுமா என்று பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், அதன் விலை நன்றாகவே குறைந்துள்ளது. 5%க்கு மேல் குறைந்துள்ளது. இன்னும் தங்கம் குறையுமோ எனக் காத்திருக்கக் கூடாது.

எவ்வளவு காலம்: இன்னும் 3 மாதங்கள் தங்கம் விலை இப்படி தான் இருக்கும். ஆனால், குறைந்தபட்ச விலையில் தான் வாங்குவேன் என இருக்காதீர்கள். எது குறைந்தபட்ச விலை என்பதைக் கணிக்க முடியாது. நமக்கு இப்படி சில மாதங்கள் கேப் கிடைத்துள்ளது. அதன் பிறகே தங்கம் விலை உயரத் தொடங்கும்.

1.5 ஆண்டுகள் கழித்து நிச்சயம் தங்கம் விலை ராக்கெட்டில் ஏறும்.. அதில் சந்தேகமே வேண்டாம். டிரம்ப் பொருளாதார கொள்கைகளை மார்கெட் அப்போது தான் புரிந்து கொள்ளும். அவரது ஆட்சியில் வட்டி குறைப்பு செய்தால், உடனடியாக பணவீக்கம் வந்துவிடும். இதனால் தங்கம் விலை அதிகரிக்கும். எனவே தங்கம் விலையை விட்டு வேண்டாம். நல்லா கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.

பிட் காயின் என்னவாகும்: பிட்காயின் 90 ஆயிரம் டாலரை தாண்டிவிட்டது. ஆனாலும், எனது நிலைப்பாட்டில் எந்தவொரு மாற்றமும் இல்லை. பிட்காயின் ஒரு போதும் மாற்று கரன்சியாக மாறாது. பிட்காயினை சட்டப்பூர்வ கரன்சியாக மாற்றுவேன் என டிரம்ப் சொல்லி இருக்கிறார். ஆனால், அப்படிச் செய்தால் டாலர் விலை குறையும். இதனால் அப்படி நடக்காது என்றே நினைக்கிறேன்" என்றார்.

இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+