"தங்கம் விலை ரூ. 6800 வரை குறையலாம்! ஆனால்.." மிக பெரிய செக் வைத்த ஆனந்த் சீனிவாசன்! என்ன பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை கடந்த சில காலமாகவே ஏற்ற இறக்கங்களுடன் வர்த்தகமாகி வருகிறது. இதனால் தங்கம் விலை அதிகரிக்குமா இல்லை குறையுமா என்பது தெளிவாகத் தெரியாமல் பொதுமக்கள் குழம்பிப் போய் இருக்கிறார்கள். இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் தங்கம் விலை குறைவது ஏன்.. இன்னும் எந்தளவுக்கு இது குறையும்.. அதிகரிக்கத் தொடங்கும் போது எந்தளவுக்கு அதிகரிக்கும் என்பதை எளிமையாக விளக்கியுள்ளார். அது குறித்து நாம் பார்க்கலாம்.

கொரோனா சமயத்தில் எகிற தொடங்கிய தங்கம் விலை அதன் பிறகு தொடர்ந்து அதிகரித்தே வந்தது. கொரோனாவுக்கு முன்பு 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.3000 என்ற ரேஞ்சில் இருந்தது.

anand srinivasan personal finance

ஆனால், கொரோனாவுக்கு பிறகு குறையாமல் தொடர்ந்து அதிகரித்தே வந்தது. இந்தச் சூழலில் தான் அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பிறகு தங்கம் விலை சற்று குறைந்தது.

தங்கம் விலை: அதிபர் தேர்தலுக்கு முன்பு ரூ.7300ஆக இருந்த 22 கேரட் தங்கம் விலை, அதன் பிறகு தொடர்ந்து குறைந்தது. சில நாட்கள் ரூ.7000க்கு கீழ் கூட போனது. இப்போது கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கங்கள் உடனேயே வர்த்தகமாகி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை 3 நாட்கள் குறைந்துள்ளது, அதேநேரம் 3 நாட்கள் அதிகரித்தும் இருக்கிறது.

இப்படி தங்கம் விலை மாறி மாறி குறைந்தும் அதிகரித்தும் வருவதால்... பொதுமக்கள் குழம்பிப் போய் இருக்கிறார்கள். இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் தங்கம் விலை எதற்காகக் குறைகிறது. அதேபோல அதிகரித்தால் இது எந்தளவுக்கு அதிகரிக்கும் என்பதை விளக்கியிருக்கிறார்.

ஆனந்த் சீனிவாசன்: இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில், "தங்கம் தான் எப்போதுமே பாதுகாப்பான முதலீடாக இருந்து வந்துள்ளது. இப்போது அதன் விலை சற்று குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரூ.6980 வரை போனது. குறுகிய காலத்தில் தங்கம் விலை குறையலாம். அதாவது அடுத்த மார்ச் மாதம் வரை தங்கம் விலை கொஞ்சம் குறையலாம்.

எந்தளவுக்குக் குறையும்: என்னைப் பொறுத்தவரை ரூ. 6800 வரை தங்கம் விலை போக வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அதற்குக் கீழ் போகாது. மேலே எனப் பார்த்தோம் என்றால் அடுத்த 18 முதல் 24 மாதங்களில் தங்கம் விலை ரூ.8500 முதல் ரூ.9000 வரை போகும்.

செக் இருக்கு: அதிகபட்சம் தங்கம் விலை இப்போது இருக்கும் மதிப்பில் இருந்து ரூ.100 முதல் ரூ.150 வரை குறையலாம். அதுவும் ரூபாய் மதிப்பைப் பொறுத்துத் தான். அதாவது டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரியளவில் குறைந்தால் தங்கம் விலை குறையாது. இப்படி சர்வதேச சந்தையில் தங்கம் விலை அதிகரிப்பது, இந்திய ரூபாய் மதிப்பு சரிவது ஆகியவை தான் தங்கம் விலை உயரக் காரணமாக இருக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.100ஐ தொட்டுவிடும். அப்போது நிச்சயம் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10,000ஐ தாண்டிவிடும்.

தங்கத்திற்கும் அமெரிக்க டாலருக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது. இப்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வென்று இருக்கிறார். இதன் காரணமாகவே தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. ஆனால், சில மாதங்களில் நிலைமை மாறும்" என்றார்.

இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+