"அடுத்த 2, 3 மாதம் தங்கம் விலை குறையும்.. ஆனால் அதன் பிறகு.." ஆனந்த் சீனிவாசன் சொல்வதை கேளுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வென்ற பிறகு தங்கம் விலை குறைந்தது. இந்த வீழ்ச்சி எவ்வளவு நாட்கள் தொடரும்.. இல்லை இப்போதே தங்கத்தை வாங்கலாமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. இதற்கான பதிலைப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் அளித்துள்ளார். இது குறித்து நாம் பார்க்கலாம்.

நமது நாட்டில் தங்கம் விலை கடந்த சில காலமாகவே தொடர்ந்து அதிகரித்து வந்தது. 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 7450 வரை கூட சென்றது. 24 கேரட் தங்கமும் ரூ. 8100ஐ தாண்டி இருந்தது.

anand srinivasan business personal finance

ஆனால், அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வென்றவுடன் தங்கம் விலை பட்டென சரிந்தது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 22 கேரட் தங்கம் ரூ. 165 வரை சரிந்தது. ஆனால், நேற்று ரூ. 85 உயர்ந்து ரூ.7285க்கு வந்தது. கடந்த சில காலமாகத் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை சட்டென சரிந்தது பலருக்கும் ஆச்சரியமாகவே இருந்தது.

ஆனந்த் சீனிவாசன்: அதேநேரம் தங்கம் விலை தொடர்ந்து சரியுமா.. இல்லை அது மீண்டும் அதிகரிக்குமா என்பது குறித்து பலருக்கும் கேள்வி இருந்தது. இந்தச் சூழலில் அதற்கான பதிலைப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் அளித்துள்ளார். அடுத்த சில மாதங்களுக்குத் தங்கம் விலை குறைய வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இதனால் தங்கம் வாங்க விரும்புவோர் உடனடியாக வாங்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

குறையும்: இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில், "தங்கம் விலை நேற்று முன்தினம் கணிசமாக விழுந்து இருந்தது. ரூபாய் மதிப்பு சரிந்ததால் தான் ஒரு கிராம் ரூ.160 மட்டும் குறைந்தது. ரூபாய் மதிப்பு நன்றாக இருந்திருந்தால் ஒரு கிராம் தங்கம் ரூ.200 கூட குறைந்து இருக்கும். தங்கம் விலை அடுத்த 3, 4 மாதங்களுக்கு இப்படி தான் இருக்கும். அமெரிக்க மத்திய வங்கி 2, 3 முறை வட்டியைக் குறைக்கும் வரை தங்கம் விலை இப்படி தான் இருக்கும். யாருக்கு எல்லாம் தங்கம் வாங்க வேண்டுமோ.. அவர்கள் எல்லாம் தங்கத்தை வாங்கிக் கொள்ளலாம்.

அமெரிக்க டாலர் மதிப்பு அதிகரிக்க அதிகரிக்கத் தங்கம் விலை குறையும். இன்னும் குறையுமா எனக் காத்திருக்காமல்.. அவ்வப்போது குறையும் போது தங்கத்தை வாங்கலாம். கோல்ட் பீஸ் மூலமாக ரூ 100, ரூ 200க்கு கூட தங்கம் வாங்கலாம்" என்றார்.

அதேபோல மற்றொரு வீடியோவில் அவர், "நமது நாட்டில் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் நேற்றைய தினம் ரூ.85 அதிகரித்தது. சர்வதேச சந்தையிலேயே கூட தங்கம் விலை அதிகரித்தது. இப்போது 24 கேரட் தங்கம் ரூ. 7947ல் இருக்கிறது. இத்தோடு கூடுதலாக 3% ஜிஎஸ்டியை சேர்க்க வேண்டும். அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை 0.25% குறைத்துள்ளனர்.

அமெரிக்காவில் நடக்கும் மாற்றம்: அமெரிக்காவில் டிரம்ப் பெரியளவில் வென்று இருக்கிறார். இதனால் அமெரிக்கப் பங்குச் சந்தை உயர்ந்துள்ளது. அதேநேரம் இந்திய பங்குச்சந்தை உயரவில்லை.. சர்வதேச அளவில் பார்க்கும் போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கூட மக்கள் தங்கம் வாங்க ஆரம்பித்துவிட்டனர். அமெரிக்க டாலர் மதிப்பு அதிகரித்தால் தங்கம் விலை குறையும்.

சர்வதேச அரங்கில் தங்கம் விலை குறைந்த அளவுக்கு இந்தியாவில் தங்கம் விலை குறையவில்லை. நமது நாட்டின் ரூபாய் மதிப்பு சரிவதே இதற்குக் காரணமாகும். இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 84க்கு சரிந்துவிட்டது. இதன் காரணமாகவே தங்கம் விலை சரிவின் முழு பலன் நமக்குக் கிடைக்கவில்லை" என்றார்.

இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+