Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனி தங்கம் மட்டுமில்லை.. வீடு கூட நினைச்சு பார்க்க முடியாது போல! சென்னையில் 81% உயர்ந்தது விலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ப்ராப் ஈக்விட்டி என்று அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் நமது நாட்டின் முக்கிய நகரங்களில் ரியல் எஸ்டேட் சந்தை எப்படி இருக்கிறது என்பது குறித்த தகவல்களை வெளியிடும். அதன்படி நடப்பு ஆண்டிற்கான லிஸ்ட் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் முதல் 10 நகரங்களில் வீடுகளின் விலைகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் 88% உயர்ந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.. எங்கு அதிகபட்சமாக விலை உயர்ந்துள்ளது. லிஸ்டில் சென்னை எங்கே என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

நம்ம வீட்டில் உள்ள பெரியவர்கள் எப்போதும் இரண்டு விஷயங்களில் முதலீடு செய்யச் சொல்வார்கள். ஒன்று தங்கம்.. இன்னொன்று வீடு அல்லது நிலம். இரண்டும் எப்போதும் நஷ்டத்தைக் கொடுக்காது என்பதாலேயே இப்படிச் சொல்வார்கள்.

business chennai

பெரியவர்கள் சொல்வது எந்தளவுக்குச் சரி என்பதைக் காட்டும் வகையில் ப்ராப் ஈக்விட்டி அமைப்பு வெளியிட்டுள்ள லிஸ்ட் இருக்கிறது. அதாவது நமது நாட்டில் டாப் 10 நகரங்களில் உள்ள வீடுகளின் விலை என்பது கடந்த 5 ஆண்டுகளில் 88% உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கே அதிகம்: குறிப்பாகத் தேசிய தலைநகர் பகுதியில் உள்ள குருகிராமில் அதிகபட்சமாகக் கடந்த 2019ல் சதுர அடிக்கு ₹7,500ஆக இருந்தது. அதன் விலை இப்போது 2024ல் சதுர அடிக்கு ₹19,500 ஆக உயர்ந்துள்ளது.. அதாவது கடந்த 4 ஆண்டுகளில் 160% அதிகரித்துள்ளது. குறைந்தபட்சமாக மும்பையில் ஒரு சதுர அடிக்கு ₹25,820லிருந்து ₹35,500ஆக உயர்ந்துள்ளது. அதாவது 37% மட்டுமே உயர்ந்துள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் பெங்களூர், சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, தானே, நவி மும்பை, புனே, நொய்டா மற்றும் குருகிராம் ஆகிய டாப் 10 ரியல் எஸ்டேட் நகரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகள், வில்லாக்கள் என மொத்தம் 15,000 கட்டுமான திட்டங்கள் தொடங்கப்பட்டன.

சென்னை எங்கே: அதிகபட்சமாக குருகிராமில் முன்பே குறிப்பிட்டது போல 5 ஆண்டுகளில் 160% விலை அதிகரித்துள்ளது. அதைத் தொடர்ந்து நொய்டா (146%), பெங்களூர் (98%), ஹைதராபாத் (81%), சென்னை (80%), புனே (73%), நவி மும்பை ( 69%), கொல்கத்தா (68%), தானே (66%) மற்றும் மும்பை (37%) வரை வீட்டின் விலைகள் அதிகரித்துள்ளன. அதாவது சென்னை இந்த லிஸ்டில் 5வது இடத்தில் இருக்கிறது.

எங்கே விலை அதிகம்: ரியல் எஸ்டேட் மார்க்கெட்டில் வழக்கம் போல மும்பை தான் டாப் இடத்தில் உள்ளது. அங்கு கடந்த 5 ஆண்டுகளில் 37% மட்டுமே உயர்ந்து இருந்தாலும் அங்கு ஏற்கனவே விலை உச்சத்தில் இருப்பதால் அது முதலிடத்தில் உள்ளது. மும்பையில் ஒரு சதுர அடி சராசரியாக ₹35,500ஆக உள்ளது. தொடர்ந்து குருகிராமில் ₹19,500ஆகவும், நொய்டா ₹16,000 ஆகவும் உள்ளது.

ரொம்ப காஸ்ட்லி: கடந்த 2019ல் நாட்டிலேயே மும்பையில் மட்டுமே புதிய கட்டுமானங்களின் சராசரி விலை ஒரு சதுர அடிக்கு ₹10,000-க்கு மேல் இருந்தது. அதேநேரம் 2024ல் ஹைதராபாத், சென்னை மற்றும் கொல்கத்தாவைத் தவிர, மற்ற ஏழு நகரங்களிலும் சராசரி விலை ஒரு சதுரடிக்கு ₹10,000க்கு மேல் ஏற்கனவே சென்றுவிட்டது.

இது குறித்து இந்த நிறுவனத்தின் இசிஇஓ சமீர் ஜசுவா கூறுகையில், "கடந்த 5 ஆண்டுகளில் அனைத்து முக்கிய நகரங்களிலும் ரியல் எஸ்டேட் விலை அதிவேகமாக உயர்ந்துள்ளன. உள்கட்டமைப்பு மேம்பாடு, என்ஆர்ஐக்கள் ஆர்வம் இதற்கு முக்கிய காரணமாகும். மக்கள் பங்குச் சந்தை லாபம் மூலம் செல்வத்தை உருவாக்கி, ரியல் எஸ்டேட் முதலீட்டின் மூலம் வருமானம் ஈட்ட விரும்புகிறார்கள். இதனால் அதிக விலையுர்ந்த சொகுசு வீடுகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+