ரூபாய் மதிப்பு சரிவதால் இந்தியாவுக்கு நல்லதா.. கெட்டதா? எதிர்பார்க்காத பதிலை சொன்ன ஆனந்த் சீனிவாசன்
சென்னை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்குச் சரிந்து வருகிறது. இதனால் இந்தியப் பொருளாதாரம் பாதிக்கும் எனப் பலரும் சொல்லி வரும் நிலையில், அதற்கு நேர்மாறான கருத்துகளை ஆனந்த் சீனிவாசன் கூறியிருக்கிறார். அதாவது ரூபாய் மதிப்பு சரிவது உண்மையில் இந்தியாவுக்கு நல்லது தான் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஏன் அவர் இப்படிச் சொன்னார்.. இதற்கு என்ன காரணம் என்பதை நாம் பார்க்கலாம்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு என்பது கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்தாண்டு நவ. மாதம் அது ரூ.82.98ஆக இருந்தது. இப்போது ஒரு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.84.45ஆக இருக்கிறது.

ரூபாய் மதிப்பு: குறிப்பாக அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்தவுடன் ரூபாய் மதிப்பு வேகமாகவே சரிகிறது. அமெரிக்காவில் டிரம்ப் வந்துவிட்டதால் டாலர் மதிப்பு உயர்கிறது. இதன் காரணமாகவே மற்ற கரன்சி மதிப்பு வேகமாகச் சரிகிறது. பொதுவாக ரூபாய் மதிப்பு சரிவதால் இந்தியப் பொருளாதாரம் பாதிக்கும் எனப் பலரும் சொல்லி நாம் கேட்டு இருப்போம். ஆனால், பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் இதற்கு நேர்மாறான கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
ஆனந்த் சீனிவாசன்: ரூபாய் மதிப்பு சரிவது இந்தியாவுக்கு, அதிலும் தென்னிந்தியாவுக்கு ரொம்பவே நல்லது என அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில் கூறுகையில், "இந்திய ரூபாய் மதிப்பு ரூ.86 வரை போகலாம் என்கிறார். ரிசர்வ் வங்கி தேவையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ.90 தொட்டுவிடும். அதேநேரம் இந்தியப் பொருளாதாரத்திற்கும் ரூபாய் மதிப்பிற்கும் எல்லாம் எந்தவொரு தொடர்பும் இல்லை.
ஐடியில் கடந்த சில காலமாகவே நமது இளைஞர்களுக்கு வேலை கிடைக்காமலேயே இருக்கிறது ரூபாய் மதிப்பு குறைந்தால் வேலைவாய்ப்பு அதிகரிக்கவே செய்யும். நமது நாட்டில் ஐடி துறையும் மருத்துவத் துறையிலும் தான் நாம் அதிகம் ஏற்றுமதி செய்கிறோம். திருப்பூரில் இருந்து துணிகளும் கணிசமாகப் போகிறது. இங்கெல்லாம் தான் நமக்கு வேலைவாய்ப்புகளும் அதிகம் உள்ளன. எனவே, ரூபாய் மதிப்பு 100ஆக ஆனால், ஆர்டர் அதிகரிக்கும் 3 துறைகளிலும் ஏற்றுமதி அதிகரிக்கவே செய்யும்
என்ன காரணம்: ரூபாய் மதிப்பை நீங்கள் மட்டும் வலிமையாக வைத்தால் போதாது.. சீனா மற்றும் ஜப்பானில் அந்தத்தந்த நாடுகளின் கரன்சி மதிப்பு சரிகிறது. அப்படி இருக்கும் போது உங்கள் ரூபாய் மதிப்பை அதிகமாக இருந்தால்.. உங்களிடம் இருந்து வாங்குவதற்குப் பதிலாகச் சீனா, ஜப்பான், வியட்நாம் நாடுகளில் இருந்து பொருட்களை வாங்கிக் கொள்வார்கள். அதாவது வெளிநாடுகள் நமது பொருட்களை வாங்க வேண்டும் என்றால் நமது ரூபாய் மதிப்பு மலிவாக இருக்க வேண்டும்.
நாம் இந்திய ரூபாயை மட்டும் தனித்துப் பார்க்க முடியாது. சீனா, ஜப்பான், வியட்நாம் நாடுகளிலும் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் தான் பிரதான போட்டியாளர்கள். இப்போது ரூபாய் மதிப்பை நீங்கள் ரூ. 75ஐ ஆக்கினால் திருப்பூரில் இருந்து ஒரு டீசர்ட் கூட வெளியே போகாது. எங்குக் குறைவாகக் கிடைக்கிறதோ.. அந்த நாட்டில் வாங்கிக் கொள்வார்கள்.
தென்னிந்தியாவுக்கு நல்லது: உண்மையில் ரூபாய் மதிப்பை வேகமாகக் குறைய விட்டால் அது இந்தியாவுக்கு நல்லதுதான். இரு தொழிலதிபர்களுக்கு நல்லது இல்லை என்றாலும் மற்ற தொழில்களுக்கு இதனால் நல்லது. குறிப்பாக ஐடி அதிகம் இருக்கும் தென்னிந்தியாவுக்கு நல்லது. நானே பொதுவாக ரூபாய் மதிப்பு சரிந்துவிட்டது எனக் கேலி செய்வேன். ரூபாய் மதிப்பு சரிவது நல்லது என அவர்களுக்குப் புரிவதில்லை என்பதே கிண்டல் செய்தே அப்படி சொல்வேன்" என்றார்.












Click it and Unblock the Notifications