பிரீமியம் பெற அசுர வேகம்.. பணம் கேட்டால் விபூதி அடிக்கும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள்.. வருகிறது கடிவாளம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பொதுவாகச் சில காப்பீட்டு நிறுவனங்கள் உங்களிடம் பிரீமியம் தொகையை வாங்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். தேனாகப் பேசி, காப்பீட்டை விற்பதில் மிகப்பெரிய வேகத்தில் செயல்படுவார்கள். ஆனால், அசாதாரண சூழலிலும் அவசரக் காலத்திலும் மக்களுக்குத் தர வேண்டிய இழப்பீட்டை உடனே தரமாட்டார்கள். நீண்ட நாட்கள் இழுத்தடிப்பார்கள்; நீதிமன்றங்கள் மண்டையில் கொட்டு வைத்தால் தான் தருவார்கள். சாமானிய மக்களால் நீதிமன்றத்திற்கு அலைய முடியாத நிலை இருப்பதால், பலர் அவதிப்படுகிறார்கள். இந்தச் சூழலில் இழுத்தடிப்பு செய்யும் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்குக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) கடிவாளம் போட்டுள்ளது.

இந்தியாவில் வாகனக் காப்பீடு, ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு என எதுவாக இருந்தாலும் மிக எளிதாக எடுத்துவிட முடியும். எந்த விவாதமும் இல்லாமல் நீங்கள் எளிதாகக் காப்பீடு வாங்கிவிட முடியும். ஆனால், காப்பீடு வாங்கிய பலருக்கு அது குறித்த முழுமையான தகவல்கள் போய்ச் சேருவதில்லை. அதாவது சரியான தகவல்கள் போய்ச் சேராமல், தவறான புரிதலுடன் காப்பீடு வாங்கிவிடுவார்கள். நிறுவனங்களும் காப்பீடு விற்ற வரை லாபம் என்று பிரீமியம் தொகையை வாங்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றன. ஆனால், அதே வேகத்தை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீட்டுத் தொகையைத் திருப்பித் தருவதில் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு வலுத்து வருகிறது.

Insurance Regulatory and Development Authority cracks down on insurance companies that delay claims

பாலிசி எடுக்கும்போது ஆசைவார்த்தை கூறும் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள், விண்ணப்பங்களில் மிகச்சிறிய எழுத்துகளில் "விதிமுறைகளுக்கு உட்பட்டது" என்று அச்சிட்டு, நுகர்வோரைச் சட்டப் பொறியில் சிக்க வைத்து கதறவிடுகின்றன. அவசரக் காலத்தில் மருத்துவமனைகளில் அனுமதிக்கும்போது பல்வேறு காரணங்களைக் காட்டி இழப்பீடு தருவதில்லை அல்லது மிகக் குறைவான அளவே காப்பீடு கிடைக்கச் செய்கின்றன. இதனால், நடுத்தரக் குடும்பங்கள் கடன் வலையில் சிக்கிவிடுகின்றன. விபத்து ஏற்படும் போது நூறு விதிகளைச் சொல்லி, தேய்மானம் என்ற பெயரில் சொற்பத் தொகையை மட்டுமே வழங்கி வாடிக்கையாளர்களை ஏமாற்றுவது தொடர்கிறது.

இது ஒருபுறம் எனில், பாலிசிக்கு விண்ணப்பித்தவர்கள் இறந்துபோன நிலையில், அவர்களின் வாரிசுகளுக்கு அதுபற்றிப் போதிய அறிவு இல்லாத காரணத்தால், பல ஆயிரம் கோடி ரூபாய் உரிமை கோரப்படாமல் தேங்கிக்கிடக்கிறது. இன்னும் சில குடும்பத்தினருக்கு பாலிசி எடுத்தது தெரியும் என்றாலும், காப்பீடு எங்கே எடுத்தார், காப்பீடு எண் என்ன என்பது குறித்த தகவல்கள் இருப்பதில்லை. இதனால் காப்பீட்டுத் தொகை கிடைக்காமல் இருக்கிறது.

கடந்த மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் (எல்.ஐ.சி.) ரூ.7,318 கோடியும், வருங்கால வைப்பு நிதியில் (பி.எஃப்.) ரூ.9,330 கோடி அளவிலும் உரிமை கோரப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. நாம் முன்பே பார்த்தது போல் எளிய மக்களின் அறியாமை, அற்பக் காரணங்களுக்காக நிறுவனங்கள் கிளைம்களை மறுப்பது, மறுபுறம் காப்பீடு வாங்கியவர்கள் குடும்பத்தினரிடம் சொல்லாமல் விட்டது போன்ற காரணங்களால், உரிமை கோரப்படாத கோடிக்கணக்கான ரூபாய் பணம் இன்சூரன்ஸ் மற்றும் நிதி நிறுவனங்களில் முடங்கிக் கிடக்கிறது.

இந்த நிலையில், காப்பீட்டு நிறுவனங்களின் ஏமாற்று வேலையை இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் அஜய் சேத் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்துப் பேசும்போது, "வெறும் இழப்பீடு செட்டில்மென்ட் விகிதத்தை (Claim Settlement Ratio) மட்டும் காட்டி ஏமாற்றாமல், பாலிசிதாரர்களுக்குச் சேர வேண்டிய உண்மையான பணப்பலன்களை முழுமையாக வழங்குவதில் காப்பீட்டு நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கிளைம்களை முடித்துவிட்டதாகக் காகிதத்தில் கணக்கு காட்டுவது நிறுவனங்களுக்குச் சாதகமாக இருக்கலாம்.

ஆனால், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற நியாயமான மற்றும் வெளிப்படையான பணப் பட்டுவாடா மிக முக்கியம். தொழில்நுட்பக் காரணங்களையும், சிறு விதிகளையும் காட்டி வாடிக்கையாளர்களின் நியாயமான பணப்பலன்களை நிராகரிப்பதோ அல்லது தொகையைக் குறைப்பதோ கூடாது" என்றார். மேலும் அவசரக் காலங்களில் மக்களுக்கு உரியப் பணம் கிடைப்பதைக் கண்காணிக்கக் கடுமையான விதிகளைக் கொண்டுவர உள்ளதாகவும் அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+