பணவாட்டத்திலிருந்து மீள 182 பில்லியன் பொருளாதார சலுகைகள்- ஜப்பான் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

Japan money
டோக்யோ: பணவாட்டத்திலிருந்து மீள 182 பில்லியன் பொருளாதார சலுகைகளை ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ ஏப் அறிவித்துள்ளார்.

ஆனாலும் இந்த சலுகை அறிவிப்பால் எந்த அளவு நன்மை கிடைக்கும் என்பதுதான் சந்தேகம் என பொருளாதார வல்லுநர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

ஜப்பானிய நாணயமான யென்னின் மதிப்பில் 18.6 ட்ரில்லியன் அளவுக்கு இந்த நிதிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டன.

2,50,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும் இந்த நிதிச் சலுகைகளில் ஒரு பகுதியாக ஷின்ஸோ ஏப் அறிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் நாடு தழுவிய அளவில் விற்பனை வரி உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பொருளாதாரத்தை மேலும் வலுவாக்க 5.5 ட்ரில்லியன் யென் அளவுக்கு புதிய சலுகைகளை அக்டோபர் மாதம் அறிவித்தார் ஏப். ஆனால் இதற்கென புதிய கடன்கள் எதையும் ஜப்பான் எழுப்பவில்லை.

"இப்போதைக்கு ஜப்பான் அரசு பொருளாதார கொள்கைகளை இன்னும் வலுவாக மாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும். பூகம்பம், இயற்கைப் பேரழிவுகளால் ஏற்பட்டுள்ள அழிவுகளை சரி செய்வதில் ஏற்கெனவே போதிய கவனம் செலுத்தி வருகிறது," என்கிறார் பொருளாதார அறிஞர் ஹிரேஷி மியாசகி.

ஆனால் இந்த பேக்கேஜ்களால் எந்த அளவு பொருளாதாரம் மீட்சியடையும் என்பதில் சந்தேகம் கிளப்பியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+