For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நேபாளத்திற்கு குறைந்த பயணக் கட்டணத்தில் விமானங்களை இயக்கும் ஜெட் ஏர்வேஸ்

Google Oneindia Tamil News

மும்பை: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு, குறைந்த பயணக் கட்டணத்தில் விமானங்களை இயக்குவதாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:

Jet Airways statement on Kathmandu operations – 28-04-15:

28.4.15 அன்று மொத்தம் 3 விமானங்களை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் காத்மாண்டு நகருக்கு இயக்கியது. அதில் இரண்டு விமானங்கள் டெல்லியிலிருந்தும், ஒரு விமானம் மும்பையிலிருந்தும் இயக்கப்பட்டது.

நேபாளத்தில் சனிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது முதல் இதுவரை 800க்கும் மேற்பட்டோர் ஜெட் ஏர்வேஸ் மூலம் நேபாளத்திலிருந்து இந்தியாவுக்கு வந்துள்ளனர்.

இந்தியாவிலிருந்து காத்மாண்டுக்கும், அங்கிருந்து இந்தியாவுக்கும் எளிய முறையில் பயணிகள் வந்து செல்வதற்கு வசதியாக, ஜெட் ஏர்வேஸ் நிறுவத்தின் காத்மாண்டு விமானங்களில் அனைத்து வகையான டிக்கெட்களும் குறைந்த கட்டணத்தில் விற்கப்படும். மே 10ம் தேதி வரை இந்த சலுகை தொடரும்.

மேலும் இந்த காலகட்டத்தில் முன்பதிவு செய்த டிக்கெட்களை பயணிகள் எந்தவித கட்டணப் பிடித்தமும் இன்று கேன்சல் செய்யலாம் அல்லது வேறு தேதிக்கு மாற்றிக் கொள்ளலாம்.

மேலும் காத்மாண்டு செல்லும் விமானங்கள் மூலம் அனுப்பபடும் மருந்து உள்ளிட்ட நிவாரணப் பொருட்களுக்கு சரக்குக் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் ஜெட் ஏர்வேஸ் கூறியுள்ளது.

English summary
Jet Airways has announce that it is operating flights to Kathmandu from India in lowest fare ujpto May 10.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X