அட்சய திருதியை ஸ்பெஷல்... வாடிக்கையாளர்களை கவரும் வண்ண நகைகள்!
தங்கம் என்றாலே மஞ்சள்தான்... இந்த ஆண்டு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வண்ண நகைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
சென்னை: அட்சய திருதியை தினம் இன்னும் சில தினங்களில் கொண்டாடப்பட உள்ளது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல வண்ண தங்க நகைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
சென்னையில் உள்ள தங்க நகைக்கடைகள் அட்சய திருதியை திருவிழாவிற்கு தயாராகி வருகின்றன. பண மதிப்பு நீக்கத்திற்குப் பிறகு புதுப்புது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டு நகை விற்பனை நடைபெறுமா என்பது கேள்விக்குறிதான் என்றாலும் நாளிதழ்கள், ஊடகங்களில் அட்சய திருதியை விளம்பரங்கள் களை கட்டி வருகின்றன.

அட்சய திருதியை
இந்த ஆண்டு ஏப்ரல் 28 மற்றும் 29 என இரண்டு தினங்கள் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மங்கல பொருட்களை வாங்க வேண்டும் என்றும் அன்னதானம் செய்ய வேண்டும் என்றும் கூறுவதால் மக்கள் அந்த நாட்களில் என்ன வாங்க வேண்டும் என்று இப்போதே லிஸ்ட் போட ஆரம்பித்து விட்டனர்.

செல்வம் பெருகும்
அட்சய திருதியை நாளில் ஒரு கிராம் தங்கமாவது வாங்கவேண்டும் என்பது பெண்களின் விரும்பமாகும். வசதிக்கு தகுந்தாற்போல வீட்டுக்காரர்களிடம் சிட்டையைப் போடுவார்கள். நகைக்கடைக்காரர்களும் அட்சய திருதியைக்காக பல டிசைன் நகைகளை உற்பத்தி செய்து வைத்துள்ளனர்.

வண்ண நகைகள்
பொதுவாக தங்கம் என்றாலே மஞ்சள் வண்ணம்தான். அந்த வண்ணத்தின் மீது தனி மதிப்பும், ஈர்ப்பும் பெண்களுக்கு உண்டு. கல்வைத்த நகைகளை பலர் ஆடம்பரமாக வாங்கி அணிவார்கள். இந்த ஆண்டு பச்சை, வெள்ளை, பிங்க், சிவப்பு என பல வண்ண நிறங்களில் தங்க நகை டிசைன்களை தயாரித்து வைத்துள்ளனர். 500க்கும் மேற்பட்ட டிசைன்கள் விற்பனைக்கு தயாராக உள்ளதாக நகைக்கடைக்காரர்கள் கூறியுள்ளனர்.

மனதை கவரும் டிசைன்கள்
இளம்பெண்களை கவரும் வகையில் மெல்லிய, அதே நேரத்தில் மனதைக் கவரும் வகையிலான டிசைன்களில் தங்க நகைகளை தயாரித்து விற்பனைக் வைத்துள்ளதாகவும் நகைக்கடைக்காரர்கள் கூறியுள்ளனர். என்ன இளம்பெண்களே! இல்லத்தரசிகளே! அட்சய திருதியை பர்சேஸ்க்கு தயாரா?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications