தேனி வரலாற்றில் பெரிய குட்நியூஸ்.. சத்தமே இல்லாமல் தமிழக அரசு சம்பவம்.. களம் இறங்கும் கேரள நிறுவனம்
தேனி: தேனி மாவட்டம் என்பது முப்போகம் விளையும் விவசாய பூமி.. எங்கு திரும்பினாலும் அருவிகளும், ஆறுகளும், மலைகளும் சூழந்து காணப்படும். மாவட்டத்தின் மூன்று பக்கமும் மலையால் சூழப்பட்ட அருமையான மாவட்டம் தேனி மாவட்டம் ஆகும். இங்கு விவசாயத்தை தவிர பெரிதாக எதுவும் இல்லாத காரணத்தால் பலர் திருப்பூர், கோவையில் குடும்பம் குடும்பமாக இடம் பெயர்ந்து வருகிறார்கள். இதனிடையே தொழில்துறை வரலாற்றில் திருப்புமுனையாக கொச்சியில் உள்ள என்எஸ்டி குழுமத்தின் அங்கமான எஸ்எப்ஓ டெக்னாலஜிஸ் நிறுவனம் தேனி மாவட்டத்தில் ஒரு பெரிய மின்னணு உற்பத்தி ஆலையை அமைக்க முடிவு செய்துள்ளது. தேனி மாவட்ட வரலாற்றிலேயே இல்லாத அளவாக சுமார் ₹2,270 கோடி முதலீடு செய்கிறது. இதில் 5500 பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.
கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி மதுரையில் தமிழ்நாடு வளர்கிறது என்ற பெயரில் முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்காக மொத்தம் ₹36,660 கோடி மதிப்பிலான 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியதாக தமிழக அரசு கூறியிருந்தது. இதில் கேரள எல்லையை ஓட்டியுள்ள தேனி மாவட்டம் பெரிய முதலீடுகளைப் பெற்றிருந்தது.

கொச்சி நிறுவனம் முதலீடு
அதன்படி கொச்சியை தலைமையிடமாக கொண்ட என்எஸ்டி குழுமத்தின் அங்கமான எஸ்எப்ஓ டெக்னாலஜிஸ் நிறுவனம் தான் தேனி மாவட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய முதலீடு ஆகும். இந்த நிறுவனம் மின்னணு உதிரிபாகங்கள் மற்றும் அச்சுச் சுற்றுப் பலகைகள் தயாரிக்கும் ஆலையை அமைக்க ₹2,270 கோடி முதலீடு செய்வதாக அறிவித்தது. இதன் மூலம் சுமார் 5,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த முதலீடு ஒப்பந்ததிற்கு நேற்று தமிழக அரசின் அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
திருப்பூருக்கு போகிறார்கள்
தேனி மாவட்டத்தை பொறுத்தவரை முற்றிலும் மலைகள் காடுகள் சூழ்ந்த மாவட்டமாக இருக்கிறது. இங்கு விவசாயம் தான் பிரதான தொழிலாக இருக்கிறது. போதிய வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால் கணிசமான மக்கள் கேரளாவிற்கு தேயிலை பறிக்க, ஏலக்காய் பறிக்க செல்கிறார்கள். அதேபோல் ஏராளமான மக்கள் கோவை, திருப்பூர் மற்றும் சென்னைக்கு பஞ்சம் பிழைக்க போய்விட்டனர்.
எஸ்எப்ஓ டெக்னாலஜிஸ்
தொழிற்சாலைகள் சரிவர இல்லாத காரணத்தால் தேனி மாவட்டத்தில் மக்கள் இடம் பெயர்வு வேகமாக நடந்து வந்தது. இந்நிலையில் தான் கொச்சியில் உள்ள என்எஸ்டி குழுமத்தின் அங்கமான எஸ்எப்ஓ டெக்னாலஜிஸ் நிறுவனம் தேனி மாவட்டத்தில் ஒரு பெரிய மின்னணு உற்பத்தி ஆலையை அமைக்க முடிவு செய்துள்ளது. தேனி மாவட்ட வரலாற்றிலேயே இல்லாத அளவாக சுமார் ₹2,270 கோடி முதலீடு செய்கிறது. இதில் 5500 பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற போகிறார்கள்.
மின்னணு உதிரிபாகங்கள்
இங்கு பிரிண்டெட் சர்க்யூட் போர்டுகள், கனெக்டர்கள் சென்சார்கள் மற்றும் பிற மின்னணு உதிரிபாகங்கள் தயாரிக்கப்பட இருக்கிறது. இந்த ஆலை தேனியில் அமைய காரணம். கேரள எல்லையில் இருப்பது தான். இதனை ஆரம்பிப்பது கேரள நிறுவனம் தான். கொச்சியை தலைமையிடமாக கொண்ட நிறுவனத்திற்கு நிர்வாக ரீதியாகவும், போக்குவரத்து ரீதியாகவும் இது மிகவும் வசதியான இடமாக தேனி இருப்பதால், நிறுவனம் அமைகிறது. .
60 ஏக்கரில் அமைகிறது
இந்த ஆலை தேனி மாவட்டத்தில் அமைவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குச் சில முக்கிய காரணங்களும் உள்ளது. இந்த ஆலை ஒரு புதிய பசுமை வளாகத் திட்டமாக அமைகிறது. சுமார் 60 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த ஆலை அமைக்கப்பட இருக்கிறது. பொதுவாக தேனி மாவட்டத்தில் காற்றாலை மின் உற்பத்தி திறன் அதிகமாக இருப்பதால், ஆலையின் மின் தேவையை இயற்கை எரிசக்தி மூலம் பூர்த்தி செய்ய நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. பற்றாக்குறைக்கு சோலாரும் பயன்படுத்தக்கூடிய சாதகமாக இடமான இருக்கிறது. எஸ்எப்ஓ டெக்னாலஜிஸ் நிறுவனம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் உற்பத்தியைத் தொடங்கவும், ஆறு ஆண்டுகளுக்குள் முழு உற்பத்தித் திறனை எட்டவும் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
கேரள நிறுவனங்கள் விருப்பம்
முன்னதாக கேராளவின் புகழ் பெற்ற ஈஸ்டன் மசாலா நிறுவனத்தின் மிகப்பெரிய ஆலை தேனியில் இருக்கிறது. அதனை பின்பற்றி அடுத்தடுத்து கேரள நிறுவனங்கள் தேனியில் முதலீடு செய்து வருகின்றனர். இதனிடையே தேனி மாவட்டத்தில் சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோருக்கு உதவும் வகையில் ஒரு பொதுப் பொறியியல் பூங்கா அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தேனிக்கு வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
அதேபோல் தேனி மாவட்டம் விவசாயம் செழித்த பகுதி என்பதால், அங்கு விளைபொருட்களை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்ற ஒரு பிரம்மாண்டமான உணவுப் பூங்கா அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதவிர ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தென் மாவட்டங்களில் உயிரி எரிசக்தி துறையில் ரிலையன்ஸ் நிறுவனம் ₹11,760 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்திருக்கிறது. இதன் ஒரு பகுதி தேனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் அமைய போகிறது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்?












Click it and Unblock the Notifications