For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வங்கிகளில் லோன் மராட்டியம் நம்பர் 1, தமிழகம் நம்பர் 2

இந்திய வங்கிகளிலிருந்து அதிகம் கடன் வாங்கியவர்களின் பட்டியலில் மராட்டியர்கள் முதலிடத்திலும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    மகாராஷ்டிரா, தமிழகம், கர்நாடகம் மாநிலங்களின் கடன் தொகைகள் தெரியுமா?- வீடியோ

    டெல்லி: 2018 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரையிலான மூன்று மாதத்தில் மட்டும் சுமார் 26.1 லட்சம் கோடி ரூபாயைக் கடனாகக் கொடுத்திருக்கின்றன. மகாராஷ்டிரா, தமிழகம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களும் மொத்தக் கடன் தொகையில் 40 சதவிகிதக் கடனை வாங்கியுள்ளன.

    2018-19ஆம் நிதியாண்டுக்கான ட்ரான்ஸ் யூனியன் சிபில் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவைப் பொறுத்தவரை கடன் வாங்குவதில் மகாராஷ்டிரா முதலிடத்திலும் அடுத்த மாநிலமாகத் தமிழகம் இருப்பது தெரியவந்துள்ளது.

    Maharashtra, Karnataka and TN comprise 40% of retail lending

    2018 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரையிலான மூன்று மாதத்தில் மட்டும் சுமார் 26.1 லட்சம் கோடி ரூபாயைக் கடனாகக் கொடுத்திருக்கின்றன வங்கிகள். இது கடந்த ஜூன் 2017இன் முதல் காலாண்டை விட 1.3 சதவிகிதம் அதிகம் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

    மகாராஷ்டிரா ரூ.5.50 லட்சம் கோடியும், தமிழகம் ரூ.2.77 லட்சம் கோடியும், கர்நாடகம் ரூ.2.74 லட்சம் கோடியும் கடன் வாங்கியுள்ளன. இந்த மூன்று மாநிலங்களும், இந்தியாவில் வாங்கப்பட்டுள்ள மொத்தக் கடன் தொகையில் 40 சதவிகிதக் கடனை வாங்கியுள்ளன.

    ஆட்டொமொபைல் கடன், பழைய கார்களை வாங்குவதற்கான கடன், இருசக்கர வாகனக் கடன், வீட்டுக் கடன், சொத்துகளைப் பணயம் வைத்து வாங்கப்பட்ட கடன், தனி நபர் கடன், கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் கடன், கல்விக் கடன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

    இந்திய வங்கிகள் கொடுத்திருக்கும் மொத்தக் கடன் தொகையான 26 லட்சம் கோடி ரூபாயில், சுமார் 11 லட்சம் கோடி ரூபாயை இந்த மூன்று மாநிலத்தவர்கள் மட்டுமே வாங்கியுள்ளனர். மொத்தம் கடன் வாங்கியவர்களில் 32 சதவிகிதத்தினர் இந்த மூன்று மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2017-18ஆம் நிதியாண்டில் அதிக அளவில் தனிநபர் கடன்கள் வாங்கியதில் தென் மாநிலங்கள் முன்னணியில் இருப்பதாக கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது. தென் மாநிலங்கள் வாங்கிய மொத்த கடன் ரூ.5.7 லட்சம் கோடியாகும். முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017-18 நிதியாண்டில் தென்னிந்தியாவின் தனிப்பட்ட கடன் மதிப்பு 37 சதவிகிதம் அதிகரித்துள்ளது. வட மாநிலங்களின் தனிப்பட்ட கடன் மதிப்பு 21 சதவிகிதம் ஆகும். மேற்கு மாநிலங்களின் கடன் மதிப்பு 14 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

    English summary
    Maharashtra, Tamil Nadu and Karnataka, which comprise just 20 per cent of the total population, make up for nearly 40 per cent of all retail loans in the country, a new report by TransUnion Cibil has found.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X