உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தமிழ் பாரம்பரிய பண்டங்களுடன் இந்த தீபாவளியினைக் கொண்டாடுவது எப்படி

Posted By:
Subscribe to Oneindia Tamil

உள்நாடு, வெளிநாடுகளில் அதி விரைவாக தமிழ்நாட்டு பாரம்பரிய உணவுப் பண்டங்களை ஆன்லைன் மூலம் டெலிவெரி செய்து அசத்தி வருகிறார்கள் தமிழக இளைஞர் குழுவினர். தமிழக நகரங்கள் மற்றும் பெங்களூர் நகருக்கு ஆன்லைனில் ஆர்டர் செய்த ஒரே நாளில் டெலிவரி செய்கிறார்கள், 98% ஒரே நாளில் டெலிவரி செய்து வெற்றி அடைகின்றனர். மிக அரிதாக கூடுதலாக ஒருநாள் தேவைப்படும்.

nativespecial.com is doing tremendous job to deliver Tamilnadu native foods

அமேரிக்கா, லண்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் என அனைத்து வெளிநாடுகளுக்கும் ஐந்தே நாளில் டெலிவரி செய்து களத்தில் சாதனை நிகழ்த்துகிறார்கள் நம் தமிழக இளைஞர்கள். அமேரிக்கா, லண்டன் என வெளிநாடுகளில் உயர் பதவிகளில் வேலை செய்து வந்த மூன்று இளைஞர்கள் தங்களின் கனவு ப்ராஜக்ட் ஆன நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையத்தை வெற்றி பெற செய்ய தங்களின் அதி உயர் சம்பள வேலையினை உதறித் தள்ளி விட்டுத் தங்களை இதில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர் என்பது கூடுதல் சிறப்பு.

nativespecial.com sweets online delivery india, usa and uk

நேட்டிவ்ஸ்பெஷல்.காம் பற்றி அவர்களிடம் கேட்டபோது இவ்வாறு கூறினர்: "மொழி, கலை, இலக்கியம் ஆகியவை நம் பண்பாட்டுச் சங்கிலித் தொடர்ச்சிக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு நமது உணவுக் கலாச்சாரமும் முக்கியம். தித்திக்கும் சுவை, மருத்துவ குணம், என அனைத்து அம்சங்களும் இருந்தும் நமது உணவுப் பண்டங்கள் தனக்கான இடத்தினை இன்று மெல்ல இழந்து வருகின்றன. எனவே இதனை மீட்கும் நோக்கில், சத்தான, சுவையான நம்ம ஊர்ப் பண்டங்களை அவை புகழ்பெற்ற ஊர்களில் இருந்து மக்களிடம் நேரடியாக கொண்டு சேர்க்கும் முதல் முயற்சியாக தொடங்கப்பட்டதே நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையம்.

அடுத்து தரமான நம் பண்டங்களை ப்ரெஷ்ஷாக வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்க்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து அதற்கென தனித்த வழிமுறைகளை ஏற்படுத்தி இன்று வெற்றிகரமாக முன்னணி ஈ-காமர்ஸ் நிறுவனங்களை மிஞ்சும் அதிவேக டெலிவரியினை சாத்தியப் படுத்தி இருக்கிறோம். பிஸ்ஸா, குர்குரே, லேஸ், ஐஸ்க்ரீம் போன்ற பண்டங்கள் ஆக்கிரமித்திருந்த எங்கள் வாடிக்கையாளர்கள் குழந்தைகளின் எண்ணங்களில், இப்போது, பொரி கடலை, எள்ளு மிட்டாய், கடலை மிட்டாய், ஓட்டுப் பக்கோடா போன்ற சுவை மிகுந்த சத்தான நம்ம ஊர்ப் பண்டங்களைக் கொண்டு சேர்த்திருப்பது மிகுந்த மன நிறைவை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர்ச்சியாக நம்ம ஊர்ப் பாரம்பரிய பண்டங்களை வெளிக்கொணர்வதே எங்கள் நோக்கமாகும்" என்று தங்களின் நோக்கத்தைத் தெளிவாக எடுத்துரைக்கின்றனர்.

nativespecial.com sweets online delivery india, usa and uk

நாட்டுக் கருப்பட்டி நெய் மைசூர்பாகு, கரூர் தேங்காமிட்டாய், மணப்பாறை முறுக்கு, கருப்பட்டி மைசூர்பாக், பள்ளப்பட்டி நெய் பூந்தி, திருநெல்வேலி அல்வா.. இப்படி பெயரைக் கேட்டதும் நாவில் நீர் ஊற வைக்கும் நம்ம ஊர் சிறப்புமிக்க அனைத்துப் பண்டங்களையும் ஒரே இடத்தில் நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையம் மூலம் இப்பொழுது ஆன்லைனில் வாங்கி சுவைக்கலாம். இது மட்டுமின்றி குழந்தைகளுக்கு சத்தான ஏழு நாள் ஸ்னாக்ஸ் காம்போ போன்ற புது முயற்சிகளும் செய்யப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, லண்டன், கனடா என அனைத்து நாடுகளுக்கும் அதிவேக ஐந்து நாள் டெலிவரி என அசத்துகிறார்கள். நாளைய நடைமுறை மாற்றத்துக்கான வித்துக்களான இத்தகைய புதிய முயற்சிகள் நிச்சயமாக நம் பாராட்டுக்கும், ஆதரவுக்கும் உரியவை.

பீசா, பர்கர் களின் மணம் வீசும் தெருக்களில் நம்ம ஊர்ப் பாரம்பரிய பண்டங்களின் மண் வாசனையினை மெல்லிய தென்றலாய்க் கொணர்ந்து சேர்க்கிறது நேட்டிவ்ஸ்பெஷல்.காம். வாழ்த்துக்கள்.

நாவூறும் நம்ம ஊர் இனிப்புகளை ருசிக்க இப்பொழுதே NativeSpecial.com இணையத்தில் ஆர்டர் செய்யலாம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A online snacks sale portal called nativespecial.com is doing tremendous job to deliver Tamilnadu native foods to Tamil people who are eliving in abroad countries and Indian cities.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற