சென்னையில் சதமடித்த சின்ன வெங்காயம்! கண்ணீர் விடும் நுகர்வோர்கள்!!
சென்னை: வரத்து குறைந்ததால் சென்னை சில்லறை விற்பனைக் கடைகளில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.100 வரை விற்பனை செய்யப்படுவதால் நுகர்வோர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
வெளி மாநிலங்களில் பெரிய வெங்காயத்தின் விலை ரூ.100க்கு விற்பனையாகிறது. ஆனால் சென்னையில் பெரிய வெங்காயம் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் சின்ன வெங்காயத்தின் விலை ஏற்ற இறக்கமாகவே இருந்து வருகிறது.

சென்னையில் கடந்த 6 மாதங்களில் அதிகபட்சமாக கடந்த வாரம் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.60 முதல் ரூ.65 வரை விற்பனை செய்யப்பட்டது.
தற்போது மொத்த விற்பனையில் சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்ததால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் உள்ள சில்லறை விற்பனைக் கடைகளில் கால் கிலோ சின்ன வெங்காயம் ரூ.25-க்கும், ஒரு கிலோ ரூ.100 வரையிலும் விற்பனையானது. இதற்கு வரத்து குறைவே காரணம் என்று கூறப்படுகிறது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தில் தாராபுரம், மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் சின்ன வெங்காயம் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
தற்போது சின்ன வெங்காயத்தின் சீசன் செப்டம்பர் மாதத்தோடு முடிவடைந்ததால் மேற்கண்ட பகுதிகளில் வெங்காயச் சாகுபடி பரப்பளவு வழக்கத்தை விட குறைந்துவிட்டது. இதனால் மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்படும் வெங்காயத்தின் வரத்தும் குறைந்து விட்டது.
இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் வியாழக்கிழமை ஒரு கிலோ முதல் தர சின்ன வெங்காயம் கிலோவுக்கு ரூ.10 விலை உயர்ந்து ரூ.75-க்கு விற்பனையானது. 2-ம் தர வெங்காயம் ரூ.55 முதல் ரூ.65 வரை விற்கப்பட்டது. இன்றைய தினம் சில்லரை விலையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தினமும் லாரி ஒன்றுக்கு 15 டன்கள் வீதம் 8 முதல் 10 லாரிகளில் 90 டன் வரை வெங்காயம் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது. தற்போது 4 அல்லது 5 லாரிகளில் மட்டுமே சின்ன வெங்காயம் கொண்டுவரப்படுகிறது இதுவே விலை உயர்வுக்கு காரணம் என்கின்றனர் விற்பனையாளர்கள்.
விலை அதிகரித்ததால் வழக்கமாக அதிகளவில் வாங்கும் பொதுமக்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் தற்போது குறைந்த அளவிலான சின்ன வெங்காயத்தையே வாங்கிச்செல்கிறார்கள். சின்ன வெங்காயத்திற்குப் பதில் பெரிய வெங்காயம் கிலோ 60 ரூபாய்க்கு விற்பனையாகிறது எனவே வீட்டிற்கு வாங்குபவர்கள் பெரிய வெங்காயத்தை அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.
தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரமே உள்ளதால் சின்ன வெங்காயத்தின் விலை இதே நிலையே நீடிக்கும் என்கின்றனர் மொத்தவிலை விற்பனையாளர்கள்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications