வரத்து அதிகரிப்பு: சின்ன வெங்காயம் விலை திடீர் சரிவு

சின்ன, பெரிய வெங்காயத்தின் விலையை கேட்டாலே தலை சுற்றியது. கடந்த இரண்டு மாத காலமாக இதே நிலை தான் நீடித்தது. அதிகபட்சமாக ரூ.100 வரையிலும் விற்கப்பட்டதால் பொதுமக்கள் வெங்காயம் வாங்குவதையே தவிர்த்தனர். நாட்டு வெங்காயம் வரத்து குறைந்ததால் ஆந்திராவில் இருந்து வெங்காயம் கொண்டு வரப்பட்டது. இதனால் அதன் விலை மேலும் அதிகரித்ததே தவிர குறையவில்லை.
மேலும் விலை உயரும் என்ற பேராசையில் வெங்காயத்தை பலர் விற்காமல் தாமதப்படுத்தினர். வெங்காயம் பயிரிடுவதிலும் அதிக ஆர்வம் காட்டினர். இது போன்ற காரணங்களால் கடந்த ஒரு மாதமாக வெங்காயத்தின் விலை கொஞ்சம் கூடியதே தவிர இறங்கவில்லை. இந்த நிலையில் சின்ன வெங்காயத்தின் விலை திடீர் என்று சரிய தொடங்கியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பே கிலோ ரூ.30 வரை விற்கப்பட்ட வெங்காயம் தற்போது மொத்த விலைக்கு ரூ.15க்கு விற்கப்படுகிறது. இது போல் பல்லாரி மொத்த விலைக்கு ரூ.18க்கும், சில்லரை விற்பனையில் ரூ.13க்கும் விற்கப்படுகிறது.
இந்த விலை இறக்கம் குறித்து வியாபாரிகள் கூறுகையில்,
தேனி, திருப்பூர், பாவூர்சத்திரம், கோவில்பட்டி, விளாத்திகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகம் பயிரிடப்பட்டு கொண்டு வரப்படுவதால் வரத்து அதிகரித்துள்ளது. இவை ஒரே நேரத்தில் பறிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இதனால் வெங்காயம் கொள்முதல் மற்றும் விற்பனை சரிந்துள்ளது. வெங்காயத்தை தொடர்ந்து பிற காய்கறிகளின் வரத்தும் அதிகரித்துள்ளதால் அவற்றின் விலையும் குறைய தொடங்கியுள்ளது என்றனர்.












Click it and Unblock the Notifications