For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்க நெட்வொர்க் சேவை நிறுவனத்தை 240 மில்லியன் தொகைக்கு வாங்குகிறது டெக் மகிந்திரா

By Veera Kumar
Google Oneindia Tamil News

மும்பை: சாப்ட்வேர் நிறுவனமான டெக் மகிந்திரா லிமிட்டட் (TEML.NS), அமெரிக்காவின் விர்ஜினியாவை சேர்ந்த நெட்வொர்க் சேவை அளிப்பு நிறுவனமான லைட்பிரிட்ஜ் கம்யூனிகேஷன் கார்பொரேசன் என்ற நிறுவனத்தை 240 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் வாங்க உள்ளது.

Tech Mahindra to buy U.S.-based network services operator Lightbridge Communications

டெக் மகிந்திரா நிறுவன தலைமை செயல் அதிகாரி சி.பி.குர்னானி கூறுகையில், இந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில், லைட்பிரிட்ஜ் நிறுவனத்தை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் முடியும். இதன்மூலம் டெக் மகிந்திராவுக்கு கூடுதலாக 20 முதல் 30 வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.

லைட்பிரிட்ஜ் நிறுவனத்தில் ஏற்கனவே வேலை பார்த்து வரும் 5700 ஊழியர்களும் பணியில் தொடருவார்கள். இதன் மூலம் டெக் மகிந்திராவின் ஊழியர் பலம் 1 லட்சத்தை எட்டும். எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு நெட்வொர்க் சேவைகள் முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார். தற்போதுள்ள நிலவரப்படி, டெக் மகிந்திரா நிறுவனத்திற்கு டெலிகம்யூனிகேசன் தொழில் மூலமாக 45 சதவீத வருவாய் கிடைத்து வருகிறது.

English summary
Software services company Tech Mahindra Ltd (TEML.NS) said it would buy Virginia-based network services operator Lightbridge Communications Corp for $240 million to boost its presence in the United States.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X