For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நான் கடனாளி அல்ல... அப்பாவி - சொல்வது விஜய் மல்லையா!

By Super Admin
Google Oneindia Tamil News

லண்டன்: வங்கிகளிடமிருந்து கடன் வாங்கிவிட்டு தப்பிச்சென்றதாக தன்மீது குற்றஞ்சாட்டப்படுவது முறையல்ல என்றும், இந்த நிமிடம் வரைக்கும் கிங் பிஃஷர் நிறுவனம் வங்கிகளுக்கு தரவேண்டிய பணம் எவ்வளவு என்பதை நீதிமன்றம் உறுதிசெய்யவில்லை என்றும் விஜய் மல்லையா தனது டுவிட்டர் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கிங்ஃபிஷர் நிறுவனத்தின் உரிமையாளரான, தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து ரூ.9,000 கோடிக்கு மேல் கடனாகப் பெற்று திருப்பிச் செலுத்தவில்லை. வங்கிகள் நெருக்கடி கொடுத்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டின் மார்ச் மாதம் இங்கிலாந்து சென்றுவிட்டர். அவரை எப்படியாவது இந்தியாவிற்கு கொண்டு வந்து விட வேண்டும் என்று முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் அவரோ பலருக்கும் டிமிக்கி கொடுத்து வருகிறார். ஆனால் தொடர்ச்சியாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டு ஊடகங்களுக்கு தீனி போட்டு வருகிறார்.

விஜய் மல்லையா

விஜய் மல்லையா

விஜய் மல்லையா மீது அமலாக்கப்பிரிவு மற்றும் சி.பி.ஐ. சார்பில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் அவரை இந்தியா கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

நான் குற்றவாளியா?

இதுகுறித்து விஜய் மல்லையா தனது ட்விட்டர் பக்கத்தில், நான் எந்த தவறும் செய்யவில்லை. மீடியாக்கள்தான் என்னை குற்றவாளி ஆக்குகின்றன. நான் எந்த வங்கியிலும் கடன் வாங்கிவிட்டு தப்பிச் செல்லவில்லை என்று பதிவிட்டுள்ளார்.

உறுதியாகவில்லை

இந்த நிமிடம் வரைக்கும் கிங் பிஃஷர் நிறுவனம் வங்கிகளுக்கு தரவேண்டிய பணம் எவ்வளவு என்பதை நீதிமன்றம் உறுதிசெய்யவில்லை என்றும் விஜய் மல்லையா பதிவிட்டுள்ளார். மல்லையாவின் இந்த பதிவுக்கு ட்விட்டரில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மீண்டும் ஒரு உதவி

மீண்டும் ஒரு உதவி

நான் பணத்தை வாங்கிக் கொண்டு எங்கேயும் ஓடி விடவில்லை. கிங்பிஷர் ஏர்லைன்ஸ்சில் முதலீடு செய்துள்ளேன். பெட்ரோல் விலை உயர்வு கிங்பிஷரை சிரமப்படுத்தி வருகிறது. மத்திய அரசு பாலிசியை மாற்றி விலையை குறைக்க வேண்டும். இந்த சகாயத்தை மட்டும் எனக்கு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். பலே ஆள்தான் மல்லையா.

English summary
I am kind of getting used to these witch-hunts coming from all directions with no legal basis whatsoever. Shows what government machinery can do Mallya tweeted.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X