தங்கத்திற்கு இணையாக "இது" கூட ரொம்பவே முக்கியம்.. இல்லைனா ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் சிக்கல் தான்
சென்னை: இந்தக் காலத்தில் ஹெல்த் இன்சூரன்ஸ் குறித்து பலருக்கும் தெரிந்தாலும் கூட ஆயுள் காப்பீடு பற்றி பலருக்கும் புரிவதே இல்லை. ஆனால், நமது குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த ஆயுள் காப்பீடு முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இதனால் இது நமது சேமிப்பை விட முக்கியமாக இருக்கிறது. இது ஒருவரின் குடும்பத்தினருக்கு எந்தளவுக்கு உதவும் என்பதைப் பிரபலப் பொருளாதார வல்லுநர் ராஜேஷ் விளக்கியுள்ளார்.
இப்போது நிச்சயமற்ற ஒரு வாழ்க்கையே இருக்கிறது. எப்போது என்ன நடக்கும் என்றும் கூட தெரியாத சூழலே இருக்கிறது. இதனால் குடும்பத்திற்குப் பாதுகாப்பை உறுதி செய்வது பிரதானமான ஒன்றாக இருக்கிறது. அப்படிக் குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதில் டேர்ம் இன்சூரன்ஸ் எனப்படும் ஆயுள் காப்பீடு முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

இன்சூரன்ஸ்
இந்தக் காலத்தில் ஹெல்த் இன்சூரன்ஸ் குறித்த விழிப்புணர்வு அதிகரித்தாலும் கூட ஆயுள் காப்பீடு குறித்து இன்னுமே பலருக்கும் தெளிவாகப் புரிவதில்லை. பணத்தைச் சேமித்து, முதலீடு செய்யும் பலரும் கூட ஆயுள் காப்பீடுகளை எடுப்பதில்லை. சரியான ஆயுள் காப்பீடு தான் முதலீட்டின் தொடக்கம் என்பது பலருக்கும் புரிவதில்லை. இதற்கிடையே பிரபலப் பொருளாதார வல்லுநரான ராஜேஷ் ஆயுள் காப்பீடு ஒருவருக்கு எந்தளவுக்கு முக்கியமானது.. அதை ஏன் நாம் எடுக்க வேண்டும் என்பதைத் தெளிவாக விளக்கியுள்ளார்.
பொருளாதார வல்லுநர் விளக்கம்
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "Term Insurance எடுப்பதன் பலன்கள்... 1) உங்களுக்குப் பின்னர், உங்களது வீட்டுக்கடன், டெர்ம் இன்சூரன்ஸ் கிளைம் தொகையினை கொண்டு உங்கள் குடும்பம் அடைத்துவிட்டு வீட்டை சொந்தமாக்கிக் கொள்ளலாம். 2) வாகனக் கடன் இருந்தால் அதுவும் மேற்சொன்ன வகையில் கடனை அடைத்து விடலாம்.
3) உங்களது வருமானம் நின்ற பின்னர், கிளைம் தொகையினை முதலீடு செய்து உங்கள் குடும்பம் தங்கள் வாழ்நாள் முழுமைக்கும் வருமானம் பெறலாம். யாரிடமும் கையேந்த வேண்டிய அவசியமில்லை. 4) நமக்குப் பின்னர், நம் குழந்தைகளின் படிப்பு மற்றும் திருமணம் எந்தவொரு தடையுமில்லாமல் நடந்தேறும். Term Insurance செலவல்ல. நமக்குப் பின்னரான நம் குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்கான முதலீடு அது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
எப்படி உதவும்
மேலும் இது எப்படி ஒருவருக்கு உதவும் என்பதையும் ராஜேஷ் உதாரணத்தோடு விளக்கியுள்ளார். அதில் அவர், "Mr. X - 35 வயது, மாத சம்பளம் ₹50,000... வீட்டுக் கடன்: ₹40 லட்சம், கார் கடன்: ₹5 லட்சம், தனிநபர் கடன்: ₹3 லட்சம், மொத்த கடன்: ₹48 லட்சம்..
சூழ்நிலை 1: ₹50 லட்சம் Term Insurance எடுத்திருந்தால்... Mr. X திடீரென இறந்தால்: உங்களுடைய குடும்பம், உங்களின் சேமிப்புகள் மற்றும் முதலீடுகள் எதையும் இழக்க வேண்டியதில்லை.. Insurance நிறுவனம் ₹50 லட்சம் தருகிறது.. அனைத்து கடன்கள் (₹48 லட்சம்) அடைக்கப்படுகிறது.. மீதம் ₹2 லட்சம் + வீடு குடும்பத்திற்கு.. மனைவி, குழந்தைகள் நிம்மதியாக வீட்டில் வாழலாம்.. குழந்தைகளின் படிப்பு தொடரும்
சூழ்நிலை 2: Term Insurance இல்லாவிட்டால்.. Mr. X திடீரென இறந்தால்: நீங்கள் சேமித்து வைத்திருக்கும் மற்றும் முதலீடு செய்து வைத்திருக்கும் அனைத்தையும் உங்கள் குடும்பம் உங்களுடைய கடன்களை அடைக்க செலவு செய்ய வேண்டியதாகிவிடும்... அப்படி செய்தால், அவர்களுடைய வருங்காலத் தேவைகளுக்கு எவ்வளவு மிஞ்சும் அல்லது எதாவது மிஞ்சுமா என்பதை கணக்கிடுவது சிரமம்.
மறக்க வேண்டாம்!
வங்கிக்கு balance outstanding செலுத்த முடியாமல் போகலாம். அதனால் வீட்டை ஏலம் விடும் நிலைமைக்கு தள்ளப்படலாம்... வீட்டு நிலைமை தான் காருக்கும். வங்கி, அதனை எடுத்துச் செல்லப்படும் நிலை வரலாம். மனைவி, தற்போது வேலைக்கு செல்லவில்லையென்றால், அவர்கள் வேலைக்குச் செல்ல வேண்டும்.. பெற்றோர்கள்/உறவினர்களிடம் கடன் வாங்க வேண்டும்.. குழந்தைகளுக்குத் தடையில்லாக் கல்வி கிடைக்கச் சிரமப்படலாம்... மற்ற செலவுகளுக்குச் சிரமப்பட வேண்டிய நிலை வரலாம்.
யாருக்கும் இந்த நிலை (சூழ்நிலை 2) வராமல் இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்... இன்சூரன்ஸ், முதலீடு அல்ல... இன்சூரன்ஸ், சேமிப்பு அல்ல... இன்சூரன்ஸ், குடும்பத்தை காக்கும் அரண்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications