தங்கத்தில் அரண்மனை! உலகின் பணக்கார குடும்பம் எப்படி வாழ்கிறார்கள் தெரியுமா? 700 ஆடம்பர கார்களும்தான்
அபுதாபி: உலகின் மிகப் பெரிய சொத்து மதிப்பு கொண்ட குடும்பம் எதுவென்று கேட்டால், அது அபுதாபியை ஆளும் அல் நஹ்யான் (Al Nahyan) குடும்பம் தான் என்று தயங்காமல் சொல்லலாம். சுமார் 300 பில்லியன் டாலர்களைத் தாண்டிய சொத்து மதிப்புடன், இந்த குடும்பம் தனது முதலீடுகளை எண்ணெய், ரியல் எஸ்டேட், விமானங்கள், கால்பந்து கிளப்புகள் மற்றும் பல துறைகளில் பரவச் செய்துள்ளது.
தாங்கள் சம்பாதித்த பணத்தை எப்படி செலவிடுகிறார்கள், மேலும் பெருக்குவதற்காக எதில் எல்லாம் முதலீடு செய்துள்ளார்கள் என்பது, சுவாரசிய விஷயமாகும்.

தங்கம் பூசப்பட்ட அரண்மனை: அபுதாபியில் உள்ள கஸர் அல்-வத்தான் அதிபர் மாளிகை இந்த குடும்பத்தின் சொத்துக்களில் ஒரு முக்கியமானது. தங்கம் பூசப்பட்ட இந்த மாளிகை சுமார் 4,078 கோடி ரூபாய் மதிப்புடையது. மூன்று பென்டகன் கட்டடங்கள் அளவுக்கு சமமான 94 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மாளிகை, அவர்களின் ஆடம்பர வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காட்டும் கட்டிடமாகும். பென்டகன் என்பது அமெரிக்க ராணுவ தலைமையகமாகும். மிகவும் பாதுகாப்பு அம்சங்களோடு கட்டப்பட்டது அது. இதை விடவும், இந்த அரண்மனை 3 மடங்கு பெரிது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபரான ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் (MBZ) இந்த பணக்கார குடும்பத்தின் தலைவர். 18 சகோதரர்கள், 11 சகோதரிகள், 9 குழந்தைகள் மற்றும் 18 பேரக்குழந்தைகள் என பெரிய குடும்பத்தை கொண்ட இவர், தனது தந்தையிடமிருந்து பெற்ற செல்வத்தை மேலும் பல மடங்கு வளர்த்துள்ளார்.

உலகின் எண்ணெய் இருப்புக்களில் 6%: அல் நஹ்யான் குடும்பத்தின் மிக முக்கியமான சொத்துக்களில் ஒன்று என்ன தெரியுமா. உலகிலுள்ள மொத்த எண்ணெய் இருப்புக்களில் 6 சதவீதம் இவர்களிடம்தான் உள்ளது. இந்த கணிசமான பங்கு உலகளாவிய எரிபொருள் துறையில் அவர்களின் முக்கிய பங்கை உறுதிப்படுத்துகிறது. ஆம், இவர்கள் நினைத்தால் உலகின் பல பகுதிகளில் வாகனங்கள் இயங்க முடியாது, தொழிற்சாலை நடக்க முடியாது.
எண்ணெய் மட்டுமல்லாமல், ரியானாவின் ப்யூட்டி பிராண்ட், ஃபெண்டி, எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் போன்ற உலகம் அறிந்த பெரும் நிறுவனங்களில் பங்குகள் உள்ளன, மான்செஸ்டர் சிட்டி கால்பந்து கிளப்பும் இவர்களுடையது. இப்படி பல துறைகளில் இந்த குடும்பம் முதலீடு செய்துள்ளது.

சுகபோகம்: வணிக நடவடிக்கைகள் மற்றும் அரச கடமைகளைத் தாண்டி, அல் நஹ்யான் குடும்ப உறுப்பினர்கள் சுகபோகமான பொழுதுபோக்குகளில் ஈடுபடுகின்றனர். அதிபரின் சகோதரர், ஷேக் ஹமத் பின் ஹம்தான் அல் நஹ்யான், 700 கார்கள் சேகரித்து வைத்துள்ளார். அதில் உலகின் மிகப்பெரிய SUV, ஐந்து புகாட்டி வேய்ரான், ஒரு லம்போர்கினி ரெவென்டன், மற்றும் மெக்லாரன் MC12 உள்ளிட்ட கார்களும் அடங்கும். 350,000 படிகங்களால் ஆன ஒரு chandelier என அவர்களின் சுகபோகம் யாரும் நினைத்து பார்க்காத அளவுக்கு உள்ளது.

உலகளாவிய ரியல் எஸ்டேட்: பாரிஸ் மற்றும் லண்டன் முழுவதும் பல இடங்களில் சொத்துக்கள், மான்செஸ்டர் சிட்டி உட்பட பல கால்பந்து கிளப்புகள் என உலகளாவிய அளவில் ரியல் எஸ்டேட் மற்றும் விளையாட்டு துறைகளில் அவர்களின் ஆதிக்கம் நீண்டுள்ளது. அபுதாபியில் இருக்கும் குயஸ்ர் அல்-வதன் என்ற அதிபரின் அரண்மனையின் பரப்பளவு 94 ஏக்கர். 2008ல், MBZவின் அபுதாபி யூனைடெட் குழுமம் ₹2,122 கோடிக்கு மான்செஸ்டர் சிட்டி கால்பந்து அணியை வாங்கியது.
அல் நஹ்யான் குடும்பம் தனது செல்வத்தை பல தலைமுறைகளாக கட்டியெழுப்பியுள்ளது. எண்ணெய், ரியல் எஸ்டேட், விளையாட்டு, தொழில்நுட்பம் என பல துறைகளில் அவர்களின் முதலீடுகள், அவர்களை உலகின் மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவராக நிலை நிறுத்தியுள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications