சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாஜக டிக்கெட் தர மறுத்தவர்கள் கிங் மேக்கராக மாறினர்.. ஹரியானா அரசியலில் அதிரடி திருப்பம்

Google Oneindia Tamil News

சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தல் முடிவுகளில் யாருக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்காத இழுபறி நிலை நிலவுகிறது. இந்த சூழ்நிலையில், 7 பேர்தான், இந்த அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணச் செய்யப்போகும் கிங் மேக்கர்களாக உருவாகியுள்ளனர்.

ஹரியானாவில் மொத்தமுள்ளது 90 தொகுதிகள். 46 தொகுதிகளிலாவது வென்றால்தான் ஆட்சியமைக்க முடியும். ஆனால், 40 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து தனிப்பெரும் கட்சியாக உருவாகியுள்ளது.

ஜனநாயக் ஜனதா என்ற புதிய கட்சி 10 தொகுதிகளை வென்று, கிங் மேக்கராக உருவாகியுள்ளது. காங்கிரஸ் 20 தொகுதிகளில் வெற்றி பெற்று, 1 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஜனநாயக் கட்சி ஆதரவை பெற அக்கட்சிக்கு முதல்வர் பதவியை விட்டுத்தரவும் காங்கிரஸ் தயாராகிவிட்டது.

ஜனநாயக் ஜனதா கட்சி

ஜனநாயக் ஜனதா கட்சி

ஜனநாயக் ஜனதா தலைவர் துஷ்யந்த் சவுதலா கிங் மேக்கராக உருவெடுத்துள்ளார். இரண்டு முக்கிய கட்சிகளும் அவரைப் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த நேரத்தில் ஹரியானாவின் அரசியல் கலவரத்தில் வெற்றியையும் தோல்வியையும் தீர்மானிப்பது துஷ்யந்த் சவுதாலா மட்டுமல்ல. அவரை தவிர, மேலும் 6 சுயேச்சைகள் உள்ளனர், அவர்கள் அடுத்த அரசு அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்க முடியும்.

6 சுயேச்சைகள்

6 சுயேச்சைகள்

இந்த 6 சுயேச்சைகளின் பெயர்கள் மெஹாம் தொகுதியின் பால்ராஜ் குண்டு, ப்ருதாலா தொகுதியின் நயன் பால் ராவத், புண்ட்ரியைச் சேர்ந்த ரந்தீர் சிங், சிர்சாவைச் சேர்ந்த கோகுல் செட்டியா, பாட்ஷாபூரைச் சேர்ந்த ராகேஷ், ரானியா தொகுதியின், ரஞ்சித் சிங் ஆகியோர்தான் அந்த சுயேச்சைகள்.

பாஜக அதிருப்தியாளர்கள்

பாஜக அதிருப்தியாளர்கள்

பாஜகவிலிருந்து அதிருப்தியடைந்து வெளியேறி இந்த தேர்தலில், பால்ராஜ் குண்டு சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்தார். பால்ராஜ், ரோஹ்தக் ஜில்லா பரிஷத்தின் தலைவராக இருந்தார், பாஜகவிடம் இருந்து போட்டியிட டிக்கெட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அந்த பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக ஷம்ஷர் சிங் கார்காராவுக்கு போட்டியிட பாஜக டிக்கெட் வழங்கியது. ஆனால் பால்ராஜ் வெற்றிமுகத்தில் உள்ளார்.

பல அதிருப்தியாளர்கள்

பல அதிருப்தியாளர்கள்

பாட்ஷாபூரில் இருந்து போட்டியிடும் ராகேஷ் 2009 மற்றும் 2014 தேர்தல்களில் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இப்போது வெற்றி முகம். ப்ருதாலாவில் சுயேச்சை வேட்பாளர் நயன் பால் ராவத்தும் பாஜகவின் அதிருப்தியாளர். இந்த சட்டசபை தொகுதியில் இவர் நன்கு அறியப்பட்ட பெயர். கட்சி டிக்கெட்டை மறுத்ததை அடுத்து அவர் சுயேச்சையாக போட்டியிட்டார்.

காங்கிரஸ் அதிருப்தியாளர்

காங்கிரஸ் அதிருப்தியாளர்

புண்ட்ரி தொகுதியின் ரந்தீர் சிங், சிர்சா தொகுதியின் கோகுல் செட்டியா ஆகியோரும் பாஜகவின் அதிருப்தியாளர்கள். ரானியா தொகுதி சுயேட்சை வேட்பாளர் ரஞ்சித் சிங் சவுதலா குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருக்கு டிக்கெட் கொடுக்க காங்கிரஸ் மறுத்ததால், சுயேச்சை வேட்பாளராக தேர்தல் களத்தில் கைகோர்த்தார். இவர்கள் எந்த பக்கம் ஆதரவு தெரிவிக்கிறார்களோ அந்த தரப்பு எளிதாக ஆட்சியமைக்க முடியும்.

7 பேர் முக்கியம்

7 பேர் முக்கியம்

எனவே, ஜேஜேபி தலைவர் துஷ்யந்த் சவுதலா உட்பட 7 பேரும்தான் ஹரியானா அரசின் தலையெழுத்தை மாற்றப்போகிறார்கள். இதில் முதல்வர் பதவி கொடுத்தால் காங்கிரசுக்கு ஆதரவு அளிக்க துஷ்யந்த் சவுதலா ரெடியாக உள்ளார். சுயேச்சைகள் பாஜக பக்கம் போக தயாராக இருப்பதாக தெரிகிறது.

English summary
These 7 people will be important to form the government in Haryana, here is the list.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X