விதி மீறிட்டீங்க.. புகையிலை மென்றதால் கடுப்பான நிஹாங் சீக்கியர்கள்.. துடிக்க துடிக்க இளைஞர் படுகொலை
சண்டிகர்: புகையிலையை மென்றுகொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த நிஹாங் சீக்கியர்கள் இளைஞர் ஒருவரை வெட்டி கொன்றுள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. பொதுவாக நிஹாங் சீக்கியர்கள் கைகளில் ஆயுதங்களை கொண்டிருப்பார்கள்.
இந்நிலையில் இந்த ஆயுதம் கொண்டு இந்த கொலை நிகழ்த்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

தாக்குதல்
அமிர்தசரஸில் உள்ள கோல்டன் அமிர்தசரஸ் அருகே உள்ள தெருவில் இந்த படுகொலை நிகழ்ந்துள்ளது. பேருந்தில் இருந்து இளைஞர் ஒருவர் இறங்கி வந்துள்ளார். அவருடன் இரண்டு நிஹாங் சீக்கியர்கள் வந்துள்ளனர். அப்போது, நிஹாங் சீக்கியர்களுக்கும் அந்த இளைஞருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த இளைஞரை நிஹாங் சீக்கியர்கள் தாக்க தொடங்கியுள்ளனர்.

சடலம் மீட்பு
இருவருடன் மூன்றாவதாக ஒரு நிஹாங் சீக்கியரும் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். முடிவில் அந்த இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை குறித்து யாரும் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக இளைஞரின் உடல் இரவு முழுவதும் கால்வாயின் அருகிலேயே கிடந்துள்ளது. விடிந்த பின்னர் தகவலறிந்து வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரே பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

புகையிலைதான் காரணம்?
இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்ததில், இளைஞன் போதையில் இருந்ததாகவும், புகையிலையை மென்று கொண்டிருந்ததால் கோபமடைந்த நிஹாங் சீக்கியர்கள் இளைஞனை தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்து மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில் விசாரணையை காவல்துறையினர் தீவிரப்படுத்தி வருகின்றன. நிஹாங் சீக்கியர்கள் ஒரு காலத்தில் போர் வீரர்களாக பயிற்சி பெற்று போர்க்களத்தில் பணியாற்றியவர்களாக இருந்துள்ளனர்.

வரலாறு
ஒவ்வொரு நிஹாங் சீக்கியரிடமும் நிச்சயம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வாள் இருக்கும். மேலும் சில ஆயுதங்களையும் கூட அவர்கள் கொண்டிருக்கலாம். எப்போதும் நீல நிற உடையில் அவர்கள் இருப்பார்கள். இதுவே அவர்களை தனித்துவமாக அடையாளப்படுத்தும். இவர்கள் 10வது சீக்கிய குருவான குரு கோபிந்த் சிங்கின் காலத்தில் உருவானதாக சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் ஒருவர் கொடுரமாக கொல்லப்பட்டத்திலிருந்து நிஹாங் சீக்கியர்கள் குறித்து பரபரப்பாக பேசப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications