சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்தால், மத்திய அரசுடன் "ஒரு விஷயத்தில்" இணைந்து செல்வோம்: கெஜ்ரிவால்

By
Google Oneindia Tamil News

சண்டிகர்: பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் மத்திய அரசுடன் இணைந்து செயல்படும் என ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் பஞ்சாப் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்தில் பாதுகாப்பு மீறல் இருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பினார்.

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, பிரதமர் மோடி பயணத்தில் பாதுகாப்பு விஷயத்தில் கோட்டைவிட்டுவிட்டார், இந்த விஷயத்தில் சரியாக செயல்படவில்லை என்றும் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

கோவா.. தொங்கு சட்டசபை வந்தால் காங்கிரசுடன் கூட்டணியா? என்ன சொல்கிறார் ஆம் ஆத்மி கெஜ்ரிவால்? கோவா.. தொங்கு சட்டசபை வந்தால் காங்கிரசுடன் கூட்டணியா? என்ன சொல்கிறார் ஆம் ஆத்மி கெஜ்ரிவால்?

அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால்

தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சி ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அமிர்தசரஸில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். "பஞ்சாபில் ஆட்சிக்கு வந்தால், பஞ்சாப் மற்றும் நாட்டின் பாதுகாப்பு பிரச்சினையில் மத்திய அரசுடன் இணைந்து ஆம் ஆத்மி கட்சி நிச்சயம் செயல்படும்" என்றார்.

 பாதுகாப்பு

பாதுகாப்பு

பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் பாதுகாப்பு மீறல் விவகாரம் குறித்து அவர் கூறுகையில், "பிரதமரின் பாதுகாப்பு விஷயத்தில் அரசியல் கூடாது, ஆனால் இரு தரப்பிலும் அரசியல் செய்யப்பட்டது. இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். பஞ்சாபில் ஆளும் காங்கிரஸுக்கு ஆம் ஆத்மி கட்சி முக்கிய சவாலாக உள்ளது' . பஞ்சாப் காங்கிரஸ் மீது ஆம் ஆத்மியும், ஆம் ஆத்மி மீது காங்கிரஸ் கட்சியும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றன.

பஞ்சாப் தேர்தல்

பஞ்சாப் தேர்தல்

''பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மிக்கு எதிராக காங்கிரஸ், பிஜேபி மற்றும் சிரோமணி அகாலிதளம் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா, முதலமைச்சர் சன்னி, காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி மற்றும் அகாலிதளம் தலைவர் இருவரும் சேர்ந்து என் மீதும், பகவந்த் மான் மீதும் அவதூறாகப் பேசுகிறார்கள், தாக்குதல் நடத்துகிறார்கள்'' என்று தெரிவித்தார்.

 ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைப்பதை அவர்கள் விரும்பவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அவர்களின் கொள்ளை நிரந்தரமாக நின்றுவிடும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். எங்கள் தவறு என்ன, நாங்கள் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை கட்டுவோம், மின்சாரம் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை சரிசெய்வோம் என்று மட்டுமே சொல்கிறோம். நாங்கள் நேர்மையான கட்சி, நாங்கள் நேர்மையான அரசாங்கத்தை அமைப்போம்" என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

English summary
Aam Aadmi Party leader Arvind Kejriwal said the party will work with the centre on issues of national security if it is voted to power in the upcoming Punjab election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X