பஞ்சாப்: காங்கிரஸ் படுதோல்விக்கு "இப்படியும்" 2 காரணம்? புட்டு புட்டு வைக்கும் விவசாயி கோல்டன் சிங்!
சண்டிகர்: பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியிடம் ஆட்சியை இழந்திருக்கிறது காங்கிரஸ் கட்சி. பஞ்சாப் மாநிலத்தில் மிகப்பெரிய தோல்வியை காங்கிரஸ் கட்சி சந்திக்கிறது.
பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் மொத்தம் 117 தொகுதிகளுக்கு ஒரேகட்டமாக தேர்தல் நடந்தது. விவசாயிகளின் போராட்டத்துக்குப் பிறகு நடக்கும் பஞ்சாப் தேர்தலை இந்தியா உற்றுநோக்கி வருகிறது.
பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் தேர்தல் நடந்தது. இந்த ஐந்து மாநிலங்களுக்கும் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன.

பஞ்சாப்
பஞ்சாப் மாநிலத்தைப் பொருத்தவரை, விவசாயிகள் போராட்டம் மிகப்பெரிய விஷயமாக கருதப்பட்டது. டெல்லியில் விவசாயிகள் போராடும் போது, பாஜக எந்த உதவியும் செய்யவில்லை, அதோடு, விவசாயிகள் இறந்தபோது அதற்கு பிரதமர் வருத்தம் தெரிவிக்கவில்லை என்பதால் பஞ்சாப் விவசாயிகள் பாஜக மீது அதிருப்தியில் இருந்தனர்.

காங்கிரஸ்
பாஜக மீது மக்கள் அதிருப்தியில் இருந்ததால், காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியை பெறும் என கணித்தது. ஆனாலும், 117 இடங்களில் தற்போது வெறும் 18 இடங்களில் மட்டும் தான் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருக்கிறது. ஆம் ஆத்மி கட்சி 90 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. இதனால் முதன்முறையாக ஆம் ஆத்மி பஞ்சாபில் ஆட்சியை அமைக்கிறது.

கோல்டன் சிங்
காங்கிரஸ் கட்சி பஞ்சாபில் தோற்றது குறித்து, பஞ்சாப் விவசாயி கோல்டன் சிங் கூறுகையில், ''காங்கிரஸ் கட்சியின் அமரிந்தர் சிங், முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதும், சரண்ஜித் சிங் சன்னி முதல்வராக வந்தார். அவர் வந்த பிறகு எந்த முன்னேற்றமும் வரவில்லை. பெரிய அளவில் வளர்ச்சிகள் இல்லை. விவசாயிகள் போராட்டம் நடக்கும்போது, பெரிய உறுதுணையைக் கொடுக்கவில்லை.
Recommended Video

தலித் முதல்வர்
சரண்ஜித் சிங் சன்னி முதல்வராக நியமிக்கப்பட்டதும், தலித் முதல்வர் என்று கொண்டாடப்பட்டார். அவருக்கு பெரிய விளம்பரம் கிடைத்தது. ஆனால் அதுவே காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக அமைந்தது. சீக்கியர்களில் தலித் இருக்கிறார்கள் என்பதே பலருக்கும் தெரியாது. இந்நிலையில் தான், தலித் முதல்வர் என்று விளம்பரப்படுத்தியதை சீக்கியர்கள் விரும்பவில்லை என்று தெரிகிறது. அதோடு மக்கள் ஏதோ ஒரு மாற்றத்துக்கு தயாராக இருந்திருக்கிறார்கள்'' என்றார். அதாவது விவசாயிகள் போராட்டத்திற்கு சரியாக ஆதரவு தராதது மற்றும், தலித் சீக்கியர் என்ற விளம்பரம் ஆகியவை தோல்விக்கு காரணம் என்கிறார் கோல்டன் சிங்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications