Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெருங்கி வரும் பஞ்சாப் தேர்தல்:இந்துக்கள் வாக்குகளை நோக்கி காய் நகர்த்தும் பா.ஜ.க..வியூகம் எடுபடுமா?

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் பஞ்சாப் மாநிலத்தை கைப்பற்ற பா.ஜ.க மிக தீவிரமாக இருக்கிறது.

கடந்த தேர்தலில் ஷிரோமணி அகாலிதளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த பாஜக இந்த முறை தனியாக களம் காண உள்ளது. மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஷிரோமணி அகாலிதளம் பாஜக கூட்டணியை விட்டு வெளியேறி விட்டது.

பா.ஜ.க.வுக்கு சவால்கள்

பா.ஜ.க.வுக்கு சவால்கள்

தனியாக களம் காணும் பா.ஜ.க அங்கு வெற்றி பெறுவது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. ஏனெனில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகள் பா.ஜ.க.வுக்கு எதிராக பெரும் அரண் போல் நிற்கின்றனர். வேளாண் சட்டத்துக்கு எதிராக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் போராட்டம் நடத்தியபோதிலும் மத்திய பாஜக அரசு கண்டு கொள்ளாததால் பஞ்சாப்பில் பா.ஜ.க.வுக்கு எதிராக இப்போதே பிரசாரத்தை விவசாயிகள் தொடங்கி விட்டனர்.

விவசாயிகள் எதிர்ப்பு

விவசாயிகள் எதிர்ப்பு

பஞ்சாப்பில் பா.ஜ.க தலைவர்கள் எந்த கூட்டத்தை நடத்தினாலும் முதல் ஆளாக எதிர்ப்பதற்கு சென்று விடுகின்றனர் விவசாயிகள். அங்கு பாஜகவுக்கு பெரும் தலைவலியாக இருப்பது விவசாயிகள்தான். இந்த எதிர்ப்பையும் மீறி பஞ்சாப்பில் வெற்றி பெற சில வியூகங்களை அமைத்து வருகிறது. தேர்தலில் எப்போதும் கை கொடுக்கும் பெருவாரியான இந்து மக்கள் வசிக்கும் தொகுதிகளை குறி வைத்துள்ளது பா.ஜ.க. பஞ்சாப் நகர்ப்புறங்களில் இருக்கும் 45 இந்து பெரும்பான்மை இடங்களில் கவனம் செலுத்த பாஜக முடிவு செய்துள்ளது.

இந்து வாக்குகள்

இந்து வாக்குகள்

பா.ஜ.க அடையாளம் கண்டுள்ள தொகுதிகளில் சுமார் 60% இந்துக்கள் வசித்து வருகின்றனர். தேராபஸ்ஸி, கரார், மொஹாலி, ,ரோபர், ஜலாலாபாத், பாட்டியாலா (நகர்ப்புறம்) மற்றும் பதிந்தா (நகர்ப்புறம்) ஆகிய முக்கிய இடங்கள் இதில் வருகின்றன. கடந்த காலங்களில் ஷிரோமணி அகாலிதளத்துடன் கூட்டணி வைத்து போட்டியிட்டபோது இந்த 45 இடங்களில் 23 இடங்களை பாஜக வென்றுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் இங்குள்ள மக்கள் பிரச்சினைகளில் முக்கிய கவனம் செலுத்தும்படியும், மக்களுடன் நெருக்கமாக இருக்கும்படியும் மாவட்ட தலைவர்களுக்கு பா.ஜ.க தலைமை அறிவுறுத்தியுள்ளது.

 மிகுந்த சிரமம்

மிகுந்த சிரமம்

''சமீபத்திய காலங்களில் பஞ்சாப்பில் பா.ஜ.க தலைவர்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. எனவே பஞ்சாப் முழுவதும் பிரச்சாரம் செய்வதில் மிகுந்த சிரமம் இருக்கும் என்பதை டெல்லி பாஜக தலைமை உணர்ந்துள்ளது. எனவே பா.ஜ.க வலுவான அடித்தளத்தில் இருக்கும் பகுதிகளில் கவனம் செலுத்துவது சிறந்தது என்று டெல்லி தலைமையும், மாநில தலைமையும் முடிவு செய்துள்ளது'' என்று மாநில மூத்த பா.ஜ.க தலைவர் ஒருவர் கூறினார்.

 நம்பிக்கைதானே எல்லாம்

நம்பிக்கைதானே எல்லாம்

''பா.ஜ.க.வுக்கு இது வித்தியாசமான அனுபவம். மாநிலத்தில் கட்சி தனித்து போட்டியிடும். 117 இடங்களிலும் போட்டியிடும். நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம். எங்களுக்கு வலுவான தொகுதிகள் மீது கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம்'' என்று மாநில பா.ஜ.க பொதுச் செயலாளர் சுபாஷ் சர்மா தெரிவித்தார். பா.ஜ.க.வின் இந்த வியூகம் எடுபடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+