பஞ்சாபில் ஓய்ந்தது பிரச்சாரம்.. மல்லுகட்டும் பாஜக - காங்கிரஸ்.. வெற்றிக் கொடி நாட்டப்போவது யார்..?
சண்டிகர் : பஞ்சாப் சட்டசபைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்த நிலையில் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் இன்று பொதுமக்களிடையே வாக்குறுதிகளை அள்ளி வீசி இறுதிக் கட்டத்தில் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டனர்.
பஞ்சாப் மாநிலத்தில் மே மாதம் சட்டசபையின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் மாநிலத்தில் உள்ள மொத்தம் 117 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. ஒரே கட்டமாக பிப்ரவரி 14 ஆம் தேதி அங்கு தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் கூறியது.
இந்த நிலையில், குரு ரவீந்தரதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு தேர்தல் தேதியை ஒத்திவைக்க வேண்டும் என காங்கிரஸ், பாஜக, சிரோமணி அகாலிதளம் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து தேர்தல் தேதி பிப்ரவரி 20ஆம் தேதிக்கு மாற்றி வைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது

பஞ்சாப் காங்கிரஸ்
பஞ்சாபில் தற்போதைய ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ் தேர்தலில் அடுத்தடுத்து பல சவால்களை சந்தித்து. முதல்வர் வேட்பாளர் விவகாரம் திடீரென வெடித்த நிலையில் தற்போதைய முதல்வரான சரண்ஜித் சிங் சன்னி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் நவ்ஜோத் சிங் சித்து மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இருந்தும் மீண்டும் ஆட்சி அமைக்க அங்கு காங்கிரஸ் மும்முரமாக உள்ளது. பல திட்டங்கள் குறித்து வாக்குறுதிகளை கொடுத்து வாக்காளர்களை கவர அக்கட்சி முனைப்பாக உள்ளது.

அரசியல் கட்சிகள் மும்முரம்
காங்கிரஸ் மட்டுமல்லாது இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்ற முனைப்பில் பாஜக, ஆம் ஆத்மி, சிரோமணி அகாலி தளம் மற்றும் அம்ரீந்தர் சிங்கின் லோக் காங்கிரஸ் உள்ளிட்டவை களம் கண்டு பலப்பரீட்சை நடத்துகின்றன. வேட்பாளர் தேர்வு , பிரச்சாரம், வாக்காளர்களை கவரும் வகையிலான அறிவிப்புகள் என அனுதினமும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் டெல்லியை போன்று எப்படியாவது பஞ்சாபிலும் ஆட்சி அமைக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி முனைப்பு காட்டி வருகிறது.

தொங்கு சட்டசபை
பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சியமைக்க கூடிய பெரும்பாலான இடங்கள் கிடைக்காது எனவும் அம்மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளதாக ஏற்கனவே news x - polstrat நடத்திய கருத்துக் கணிப்பு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் பஞ்சாபில் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் 1300 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

பிரச்சாரம் ஓய்ந்தது.
பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அம்ரிந்தர் சிங் மற்றும் பாஜக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலர் கடைசி நாளான இன்று தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டனர். தேர்தலில் தங்கள் கட்சிக்கு வாக்களித்தால் பஞ்சாப் மக்கள் எதிர்பாராத நன்மைகளைப் பெறுவார்கள் என கூறி வாக்கு வேட்டை நடத்தப்பட்டது. நாளை ஒரு நாள் ஓய்வுக்குப் பிறகு நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே தங்களை ஆளப்போவது யார் என பஞ்சாப் மக்களே முடிவெடுக்கவுள்ளனர்.
-
காத்திருக்கும் எதிர்பாராத ட்விஸ்ட்.. கேரள தேர்தலில் இப்படியொரு சம்பவமா.! புதிய தேர்தல் சர்வே -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார்












Click it and Unblock the Notifications