Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போச்சு, எல்லாத்துக்கும் பாஜகதான் காரணம்.. ஆம் ஆத்மியிடம் தோற்றுப்போன அமரீந்தர் சிங்.. பரபர பஞ்சாப்

பஞ்சாப் தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளார் அமரீந்தர் சிங்

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: காங்கிரசில் இருந்து பிரிந்து சென்று, தனிக்கட்சி ஆரம்பித்து, பாஜகவுடன் கூட்டணி வைத்தாரே அமரீந்தர் சிங், அவர் தன்னுடைய சொந்த தொகுதியிலேயே மண்ணை கவ்வி உள்ளார். ஆம் ஆத்மி வேட்பாளரிடம் அனுபவம் மிக்க இந்த மூத்த தலைவர் தோல்வியை சந்தித்தது அதிர்ச்சியாக பார்க்கப்பட்ட வருகிறது.

Recommended Video

    Punjab-ல் ட்விஸ்ட்..Congress-ம் இல்ல..BJP-யும் இல்ல.. | Oneindia Tamil

    பஞ்சாப்பில் சித்துவுக்கும், முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்குக்கும் மோதல் போக்கு இருந்து கொண்டே வந்தது.. இவர்கள் 2 பேரின் பஞ்சாயத்தை காங்கிரஸ் மேலிடத்தால் தீர்க்கவே முடியவில்லை.

    இறுதியில், காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.. எனினும், கடந்த ஜூலை மாதம் அவர் காங்கிரஸ் தலைவராகப் பதவியேற்றது முதல் அமரீந்தர் சிங்குடனான மோதல் போக்கை மட்டும் கைவிடவில்லை.

    ராஜினாமா

    ராஜினாமா

    எந்த நிலையிலும் சித்துவை பஞ்சாப் முதல்வராக விட மாட்டேன் என்று சபதம் போட்டுக் கொண்டே இருந்த அமரீந்தர், ஒருகட்டத்தில் தன்னுடைய தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.. அப்போதே பாஜக-வுக்கும் அவர் தாவ போகிறார் என்று சொல்லப்பட்ட நிலையில், அவரது அடுத்தடுத்த டெல்லி பயணங்களும், மேலிட தலைவர்களின் சந்திப்புகளும் அதையே உறுதிப்படுத்தின..

     பாஜக

    பாஜக

    தொடர்ந்து அமித்ஷாவை 2 முறை சந்தித்து பேசினார்.. பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கினார்.. பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்துள்ளார். இந்த கூட்டணியில் ஐக்கிய அகாலிதளம் ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிட்டுள்ளன.. ஆனாலும், கேப்டன் அமரீந்தர் சிங், இன்றைய வாக்கு எண்ணிக்கையில் படுதோல்வியை சந்தித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

     ஆபரேஷன் புளூ ஸ்டார்

    ஆபரேஷன் புளூ ஸ்டார்

    இத்தனைக்கும் பஞ்சாப் மாநிலத்தின் நலன்களைக் காக்கும் நபராக இவர் மக்களிடம் அறியப்பட்டவர்.. ஆபரேஷன் புளூ ஸ்டாருக்கு எதிர்ப்பு தெரிவித்து 1984-ல் நாடாளுமன்றம் மற்றும் தனது சொந்தக் கட்சியில் இருந்து ராஜினாமா செய்து பஞ்சாப்பை திரும்பி பார்க்க வைத்தவர்.. 2004-ல் பஞ்சாப் சட்டப்பேரவையில் மாநில தண்ணீர் பிரச்சினை தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்றியது, பாகிஸ்தானை கடுமையாக எதிர்ப்பது என பல விஷயங்களில் நன்மதிப்பை பெற்றவர்தான். ஆனாலும், இவரது சமீபத்திய அரசியல்தான் பலவித சலசலப்பை உண்டாக்கிவிட்டதாக தெரிகிறது..

     வெற்றியா?

    வெற்றியா?

    முக்கியமாக இவரது நாலரை ஆண்டுகள் ஆட்சி பெரிய அளவுக்கு வெற்றியை பெற்று தரவில்லை.. மக்களின் பணிகளுக்கு முன்னுரிமை தராமலும், அவர்களை தன்னிடம் நெருங்க விடாமலும் இருந்ததாக இவர்மீது குற்றச்சாட்டும் உள்ளது.. 3 விவசாய சட்டங்கள் விஷயத்தில் ஏற்கனவே மக்கள் கோபமாக இருக்கிறார்கள் என்று தெரிந்தும் பாஜக பக்கம் இவர் சாய்ந்தது, மொத்த நல்ல விஷயத்தையும் சிதைத்துவிட்டதாகவே பார்க்கப்படுகிறது. இன்னும் ஒரு படி மேலேபோய், "விவசாயிகளின் விரோதிகளுடன்" கூட்டணி வைத்தவர் என்றே இவர் விமர்சனத்துக்கும் ஆளானார்..

     பாஜக

    பாஜக

    இதெல்லாம் சேர்ந்துதான் அமரீந்தர் சிங்கை இப்போதைய தேர்தலில் தோல்வி முகத்தை எட்ட செய்துள்ளது போலும்.. முதல் சுற்றில் வாக்கு எண்ணிக்கையில் பின்தங்கிவிட்டார்.. ஆம் ஆத்மி வேட்பாளர் அஜித்பால் கோஹ்லி முதல் சுற்றில் 3,575 வாக்குகள் முன்னிலை பெற்றுவிட்ட நிலையில், தொடர்ந்து ஆம் ஆம்தி சரித்திரம் படைக்க உள்ளது.. ஆனால், காங்கிரஸிலேயே கொஞ்சம் இணக்கமாக சென்றிருந்தால், இவ்வளவு பெரிய தோல்வியை அமரீந்தர் சந்தித்திருக்கவும் மாட்டார், பாஜகவுடன் கூட்டு சேர்ந்து, தேவையில்லாமல் மாநில மக்களின் அதிருப்தியை அறுவடை செய்திருக்கவும் மாட்டார் என்றே நமக்கு சொல்ல தோன்றுகிறது..!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+