லாரி டிரைவருக்கு லாட்டரியில் விழுந்த 1.3 கோடி.. ஒரே நாளில் மாறிய வாழ்க்கை

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாயில் கடந்த 18 ஆண்டுகளாக லாரி டிரைவராக வேலை பார்த்து வரும் குல்வந்த் சிங் என்பவருக்கு லாட்டரியில் ரூ.1.30 கோடி பரிசு அடித்துள்ளது. என்றாவது ஒருநாள் தனக்கும் அதிர்ஷ்டம் அடித்துவிடாதா? வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடமாட்டோமா என்று நினைத்துக்கொண்டு கடந்த சில ஆண்டுகளாகவே லாட்டரி டிக்கெட் வாங்கி வந்த நிலையில் இன்று லாட்டரி கை கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

பஞ்சாப்பை சேர்ந்தவர் குல்வந்த் சிங். 53 வயதான இவர் கடந்த 18 ஆண்டுகளாக துபாயில் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். லாரி ஓட்டுவதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து வீட்டு செலவுகளை சமாளித்து வந்துள்ளார் குல்வந்த் சிங்.

lottery for a lorry driver Life changed in a single day

அதிர்ஷ்டம் அடிக்கும் என நினைத்து

குடும்ப கஷ்டத்தை சமாளிக்க கடல் கடந்து அயல்நாட்டிற்கு வேலை சென்ற போதிலும் செலவுகளை சமாளிக்க முடியாமல் ரொம்பவே கஷ்டப்பட்டு வந்தாராம். அதிர்ஷ்டம் மீது நம்பிக்கை கொண்ட குல்வந்த் சிங், துபாயில் பிரபலமாக இருக்கக்கூடிய லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி வந்துள்ளார். என்றாவது ஒருநாள் தனக்கும் அதிர்ஷ்டம் அடித்துவிடாதா? வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடமாட்டோமா என்று நினைத்துக்கொண்டு கடந்த சில ஆண்டுகளாக லாட்டரி வாங்கி வந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

5 லட்சம் திர்ஷாம் பரிசு

ஆனாலும், பணம் அடிக்கும் என்ற ஆசையில் தனது நண்பர்கள் சிலருடன் டிக்கெட் வாங்கி வந்துள்ளார். துபாயின் ஜபேல் அலி பகுதியில் வசித்து வந்த குல்வந்த் சிங்கிற்கு துபாய் பிக் டிக்கெட் லாட்டரியில் ஆறுதல் பரிசு விழுந்துள்ளது. 19.5 மில்லியன் திர்ஹாம் பரிசு விழுந்த நிலையில், இதனை தனது நண்பர்கள் ஐந்து பேருக்கும் குல்வந்த் சிங் பகிர்ந்துள்ளார். இறுதியில் குல்வந்த் சிங்கிற்கு மட்டும் 5,00,000- திர்ஹாம் பரிசு விழுந்துள்ளது. இந்திய மதிப்பில் இதன் தொகை ரூ.1.3 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதனால், மகிழ்ச்சி அடைந்த் குல்வந்த் சிங் இதுபற்றி கூறியதாவது:- லாட்டரியில் பரிசு விழுந்தது அறிந்ததும் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஒவ்வொரு மாதமும் எனது நண்பர்களுடன் இணைந்து டிக்கெட் வாங்குவேன். ஒருவழியாக பரிசு அடித்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. பரிசு விழுந்த தொகையை எனது வீட்டிற்காக முதலீடு செய்ய உள்ளேன். தொடர்ந்து டிக்கெட் வாங்கவும் திட்டமிட்டுள்ளேன்" என்றார்.

கேரளா என்ஜினியருக்கு ரூ.13 லட்சம்

அதேபோல கேராளவை சேர்ந்த என்ஜினியர் ஒருவருக்கும் லாட்டரியில் 26 லட்சம் பரிசாக விழுந்துள்ளது. முகம்மது லிஜாஸ் என்ற அந்த நபர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அஜ்மானில் வசித்து வருகிறார். தனது குடும்பத்துடன் 7 ஆண்டுகளாக வசித்து வரக்கூடிய நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக பிக் டிக்கெட் பற்றி தெரிந்து கொண்டாராம். அப்போது முதல் டிக்கெட் வாங்கியவருக்கு முதல் முறையாக பரிசு விழுந்துள்ளது.

தனது பிறந்த நாள் மற்றும் பிறந்த ஆண்டை அடிப்படையாக வைத்து டிக்கெட் வாங்கியுள்ளார் முகம்மது லிஜாஸ். அவரது இந்த நம்பிக்கைக்கு ஒருவழியாக பரிசும் கிடைத்துள்ளது. பரிசு வென்றது பற்றி முகம்மது லிஜாஸ் கூறுகையில், "எனது வாழ்க்கையில் சிறந்த தருணமாக இதை பார்க்கிறேன். எனது மகன் பிறந்த நாள் வைத்து டிக்கெட்டை வாங்கினேன். பரிசுத்தொகையை எனது மகனுக்காக செலவு செய்ய உள்ளேன்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+